வியாழன், 10 நவம்பர், 2016

வேலையில்லா திண்டாட்டம் 2

வேலையில்லா திண்டாட்டம் 2
==================================ருத்ரா இ பரமசிவன்.

ஒரு படத்தின் வெற்றி
அடுத்த‌ படத்தில்
"2" ஆக ஒட்டிக்கொண்டு விடுகிறது.
படத்தயாரிப்பாளர்களே
நடிகர்களே
உங்களுக்கெல்லாம்
இந்த "எரியும் சமுதாய"ப் ப்ரச்னை
அல்வா சாப்பிடற மாதிரிதான்.
என்னவோ
இந்த சிக்கலின் ஆணிவேரையே
பிடுங்கியெறிய அவதாரம் எடுத்தது போல்
சில குத்தாட்டங்கள்...
வழுக்கும் வெள்ளை உடலில்
வடக்கே வடமேற்கே
என்று இந்தியாவின்
எந்த மூலையிலிருந்தாவது
சீப்பாக கதாநாயகிகள்...
காக்ரா பக்ராங்கற மொழிலே
சத்தங்களை
விறகு வெட்றாப்ல பொளந்து
டொங்கா டொங்கா தட்டு
இசையமைப்புகள்...
அதற்கு  தானே
இருமுவதையும் தும்முவதையும்
பாட்டு எழுதி
உலக சரித்திரத்தில் இடம்பிடிப்பது..
கதைங்கற பேர்ல‌
சண்டை மற்றும் சரச மசாலாக்களை
ஏகத்துக்கும்
இந்த தமிழ்விடலைப்பையன்களின்
தலையில் அரைத்து
மாயாஜாலங்கள் காட்டுவது...
கலர் கலரான
சந்து பொந்துகளையும் காட்சிகளாக்கி..
போதும் போதும்..
வேலையில்லா பட்டதாரிகளாகவே
இந்த இளையயுகம்
நிரந்தரமாய் இருப்பதற்கான‌
இருட்டின் நிழற்பூக்களை
வாரி இறைத்துக்கொண்டிருந்தது போதும்!
உங்களுக்கு
அன்பான வேண்டுகோள்
இளைஞர்களின் கனவுக்கோலங்களை
உங்கள் ஜிகினாத்தனங்கள் கொண்டு
கொச்சைப்படுத்துவதை
தவிர்க்க முயலுங்கள்.
ஒரு சினிமாப்படம் என்பது
ஒரு நூலகத்தில் வைத்து
படித்து படித்து
நம்மைத்தெளிவாக்கிக்கொள்ளும்
புத்தகம் போன்றது.
உங்கள் கல்லாப்பெட்டிகள்
நூலகங்கள் அல்ல.
இந்த வகை பட்டங்களை பறக்கவிட‌
சமுதாயத்தின் கழுத்தையே அறுக்கும்
"மாஞ்சா" அரைப்பதையே
கொளகையாக கொண்டிருக்கும்
இந்த பொம்மைத்தொழிற்கூடங்களால்
பொருளாதார வளர்ச்சிக்கு
எந்த பயனும் இல்லை.
யாரையும் காயப்படுத்த‌
எழுதிய வரிகள் அல்ல இவை.
சமுதாய ஏக்கங்களின்
தீனக்குரல்களே இவை.
சமுதாய நீரோட்டம் என்பது
சமுதாயத்தின் பிரக்ஞை.
சினிமாக்கள்
அதன் அச்சு வடிவங்களாக
இருக்கவேண்டும்.
அசுரத்தனமான அட்வெஞ்சரிஸமாக அல்ல.

=======================================================

===============================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக