நன்றியுடன் http://www.kias.re.kr/sub03/sub03_02_10_01.jsp
நுண்வெளிக்குள் ஒரு விண்வெளி
====================================================ருத்ரா
(குவாண்டம் காஸ்மாலஜி)
குவாண்டம் அல்லது நுண்ணளவியம் என்பது இப்போது எல்லா இயற்பியல்அறிவாளர்களின் சிந்தனைக்குள்ளெல்லாம் ஊடுருவியுல்லாது.அதே போல் இவர்கள் பேரளவு அல்லது பெரும் பெரும் பெரும்...பெரும் பேரளவான விண்வெளியியல்(காஸ்மாலஜி) அந்த நுண்ணிதிலும் நுண்ணிதான அந்த குவாண்டத்துள்அடங்கியிருப்பதாக கருதுகிறார்கள்.ஒரு எளிய உவமையில் சொன்னால் ஒரு கடுகுக்குள் ஒரு பூசணிக்காய் இருக்கிறது என்று அதை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நுண்மையைக்காட்டும் குவாண்டமும் பருமையின் வடிவமான "காஸ்மா"(விண்வெளி)வும் எப்படி முடிச்சுப்போடப்படும்? இதை விளக்கும் விஞ்ஞானம் என்ன? என்று நீங்கள் சிந்திக்கிறீர்கள் அல்லவா.அதை விளக்கும் இயற்பியலே "குவாண்டம் ஃபீல்டு தியரி "(க்யூ.எஃப்.டி) அதாவது "நுண்ணளவிய புலக்கோட்பாடு" ஆகும்.நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த "பொதுச்சார்பும்"(ஜெனரல் ரிலேடிவிடி) நீல்ஸ் போர் கண்டுபிடித்து மற்றும் எர்வின் ஸ்க்ரோடிங்கர், ஹெய்ஸன் பர்க்,பி.ஏ டிராக்.(எல்லோரும்"நோபல் பரிசு"பெற்றவர்கள்) போன்ற விஞ்ஞானிகளும்
செம்மைப்படுத்தி நுண்மைப்படுத்திய "குவாண்டம்"கோட்பாடும் "ஒன்றாய் சேர்க்கப்பட்ட"தே இந்த குவாண்டப்புலகோட்பாடு ஆகும்.திமிறியோடும் முரண்பாடுகள் கொண்ட இந்த இரண்டின் "சங்கமக்கோட்பாடு" தான்
"க்யூ எஃப் டி " ஆகும்.
மேலே குறிப்பிட்ட முரண்பாடுகளின் விவரம் தெரிந்துகொள்ளும் போது
இந்த கோட்பாட்டின் அழகும் நுட்பமும் நம்மை வியக்க வைக்கும். முக்கியமான முரண்பாடு என்னவென்றால் பொதுச்சார்பு கோட்பாட்டில் ஆற்றல் நகர்ச்சி காலவெளிக்கோட்டில் (ஸ்பேஸ் டைம் கர்வ் ) ஒரு விண்வெளி நிகழ்வு (காஸ்மாலஜிக்கல் ஈவண்ட்) ஆக கணிக்கப்படுகிறது.எனவே இது ஒரு தொடர்வியம் (கண்டினுவம்) ஆகும்.ஆனால் குவாண்டம் என்பது "துண்டு பட்ட" (டிஸ்கிரீட் ) கூறுகள் ஆகும்.ஆகவே இவை இரண்டும் கழுதை குதிரை போல வேறுபாடுகள் கொண்டதாய் இருக்கின்றனவே என்றே தான் இயற்பியலாளர்கள் மலைத்தனர்.பின்னர் அது எப்படி "குவாண்டம் புலக்கோட்பாடு" எனும் கழுதை -குதிரையின் கலப்பினம் ஆயிற்று என்பது
மிக சுவாரஸ்யமான கணித இயற்பியல் கோட்பாடு ஆகும்.இதை சித்திரம் தீட்டி உயிர்கொடுத்தவர் பி.ஏ.டிராக்.அதை மேலும் மேலும் செம்மை படுத்திய இயற்பியல் கணித அறிஞர்கள் நிறைய பேர்கள் உள்ளனர்.இதன் நுண்மைக்குள் நுழைந்தால் அது "அதிர்விழைக்கோட்பாடு" (ஸ்ட்ரிங் தியரி)
எனும் மாயகுகைக்குள் கொண்டு போய் விட்டு விடும்.அங்கிருந்து நம்மை மீட்டுக்கொண்டு வர மிகவும் உலகப்புகழப்பெற்ற இன்னொரு கணிதவியல்
மந்திரவாதியால் தான் முடியும்.அவர் தான் "எட்வார்டு விட்டன்" என்பவர்.
https://www.sns.ias.edu/witten
இவர் இயற்பியல் கோட்பாட்டில் பொதுச்சார்பில் உள்ள "கால வெளியை"
ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல்தான் கருதினார்.இதை வடிவ கணித முறையில் "டியூவாலிட்டி " என்பார்கள்.இதன் நான்கு நுண் வடிவங்களை ஆராய்ந்தார். இதை நான் வரைந்த படம் காட்டுகிறது.(கீழே)
அந்த 4 வடிவங்கள் :----(மேலே அம்புக்குறிகளை பாருங்கள்)
(1) டியூவாலிட்டி (எலக்ட்ரோமேக்னட்டிசம்)
(2) டியூவாலிட்டி (சூப்பர் சிம்மெட்ரி க்ரேவிட்டி )
(3) ட்யூவாலிட்டி (ஸ்ட்ரிங்க் தியரி--"எம்"தியரி)
(4) ட்டியூவாலிட்டி (காஜ் ஃபீல்டு டைனாமிக்ஸ்)
(https://www.sns.ias.edu/ckfinder/userfiles/files/duality(3).pdf
டாக்டர் எட்வர்ட் விட்டன் அவர்களது கட்டுரையிலிருந்து )
இந்தக்கட்டுரை நம் விண்வெளியின் ரகசியங்களை தோலுரித்துக் காட்டுகிறது.இதை விரிவாகப்பார்க்கலாம்
=========================================================================