புதன், 16 நவம்பர், 2016

வா! வா! பைரவா!

வா! வா! பைரவா!
=======================================ருத்ரா

பூசணிக்காய் உடைந்தது
பூதம் வெளிப்பட்டது.
ஐம்பெரும்பூதங்களையும்
ஒன்றாய் அடக்கிய‌
பைரவா
பொங்கலுக்கு வெளி வரும்
என்று
செய்திகள் "தேங்காய்" உடைத்து விட்டன.
இந்த ஆண்டும்
ஜல்லிக்கட்டு இருக்காது.
ஆனால்
பைரவ ரெட்டைக்களை
சீறிக்கொண்டு வரும்.
பரதன் இயக்கிய படங்கள்
பரபரப்புக்கு பேர் பெற்றவை!
விஜய் இதில் மூன்று வேடம்.
இரு வேடம் போக‌
திரைக்கதையும் ஒரு விஜய் தான்
அவர் படங்களின்
எல்லா வெற்றியையும்
அவரே எழுதுகிறார்.
சான்றாய் ஒன்று..கில்லி.
கதையில் பிரகாஷ்ராஜ் தான்
இவரை விரட்டிக்கொண்டேபோவார்.
ஆனால் உண்மையில்
பிரகாஷ் ராஜை இவர் தான்
ஓட ஓட விரட்டுவதாய்
அவருக்கு தண்ணி காட்டும்
அந்த "ஷ்ரூடு"காட்சிகளில்
அவரே நம்மையெல்லாம்
எங்கு எங்கோ இழுத்துச்சென்று
க்ளைமேக்ஸை
கல கலக்க வைத்து விடுவார்.
அவர் படங்களின் விறு விறுப்பு
நாம் அறிவோம்.
நாம் உட்காரும் நாற்காலியை
நம்மையே அறியாமல்
யாராவது உருவி விட்டால்கூட‌
நாம் அந்த நாற்காலியில்
உட்கார்ந்து இருப்பது போலவே
நாம் நம்மைச்சுற்றிய உலகையே
மறந்து விடுவோம்.
ராபிங் ஆல் அவர் சென்சஸ் என்பார்களே
அது போல்
நம் மனதை முழுதும்
அவர் கொள்ளையடித்து விடுவார்
கில்லியில் த்ரிஷாவின் கூட்டணி
ரொம்பவே அழகு!
இதில் யாரோ? எப்படியோ?
விஜய் உடன் கதாநாயகளின்
நிழற்சித்திரங்களும்
பேசும்"பொற்சித்திரங்கள்" தான்.
பைர  வா!
வா!வா! பைரவா!
================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக