Statue of Liberty Liberty Enlightening the World | |
---|---|
ஒரு போஸ்ட் மார்ட்டம்
=======================================ருத்ரா இ.பரமசிவன்
பைபிளில்
இறுதியாய் ஒரு வசனம்.
"முடிந்தது
எல்லாம் முடிந்தது"
அவ்வளவு தான்.
எத்தனை எத்தனை
குற்றச்சாட்டுகள்?
எத்தனை எத்தனை
எதிர் குற்றச்சாட்டுகள்?
ஹிலாரி க்ளிண்டன்.
டொனால்டு ட்ரம்ப்.
நானே ஜெயிப்பேன் என்று
நம்பவில்லை என்று
இவர் சொல்வதும்
நான் தோற்பேன் என்று
கனவிலும் கருதியதில்லை என்று
அவர் சொல்வதும்
பத்திரிகை பக்கங்களை
பரபரப்பான பத்திகளால்
நிரப்பி வைக்கும்.
டிவி டாக் ஷோக்களை
கேட்கவே வேண்டாம்.
எதிரே இருக்கும் மைக்குகளின்
காதுகளுக்கு கூட புளித்துப்போகும்.
இதன்
சந்து பொந்துகளுக்குள் கூட
ருசிகரமாய்
அல்லது
அதிரடியாய்
ஏதாவது செய்திப்பாம்புகள்
ஸ்க்ரோலிங் செய்யும்!
ஜனநாயகம் என்பது ஒரு மந்திரப்பெட்டி.
கடைந்தெடுத்த அயோக்கியத்தனங்களும்
போலி பொய் முகமூடிகளின்
குப்பைகளும் அதில் விழுந்து கிடக்கலாம்.
எப்போதாவது
செயல் பூக்கும் மின்னல்களும்
அதில் கிடக்கலாம்.
ஏன் இப்போதும் கிடக்கலாம்.
அம்மாக்கள் அய்யாக்கள் என்று
குழந்தைகளை தூக்கி எறியும்
டெட்டி பொம்மைகள் போல்
எது வேண்டுமானாலும் அதற்குள்
எறியப்படலாம்.
எல்லா நியாயமான தேர்தல்கள்
என்று சொல்லிக்கொள்ளப்படும்
பகடை உருட்டல்களில்களில் எல்லாம்
வாக்காளர்களின்
"ஃபன்டாஸியே"
புனிதமானது..பூர்ணமானது!
இது கூட அவர்களுக்கு
ஏதோ ஒரு "அனிமேஷன் கம்பெனியின்"...
க்ராஃபிக்ஸ் கேம்ஸின்....
அதி நவீன பதிப்பாக
சுவாரஸ்யம் தரலாம்.
============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக