வியாழன், 17 நவம்பர், 2016

மும்பையில் ரஜனி படம்   ஃ பர்ஸ்ட் லுக்


மும்பையில் ரஜனி படம்   ஃ பர்ஸ்ட் லுக்
==============================================ருத்ரா

மும்பை அடுக்கு மாடிகள்
அதிர்கின்றன‌
8.3 ரிக்டர் ஸ்கேலில்
பூகம்பம் வரப்போகிறது.
இதை உணர்ந்த 2.0 எந்திரன்
தன் மூளை சிப்பில்
ஏதோ ஒரு இடத்தில் தட்டுகிறது.
உடனே
அந்த பூகம்பத்தின்
எபி சென்டரில்
2.0 புகுந்து
ஒரு ஹைபர்போலிக் ஜியாமெட்ரியில்
எட்வர்ட் விட்டனின்
எம் தியரியின் அடிப்படையில்
சூப்பர் சிம்மட்ரி கிராவிடான் புலத்துள்
செலக்ட்ரானும் ஸ்ப்ரோட்டானும்
(சூப்பர் சிம்மெட்ரியில் எலக்ட்ரான் ப்ரொடான் முன்
எஸ் சேர்க்கவேண்டும்)
பிக் பேங்க் கின் அழுத்தவிசைக்கும்
அதிகமான ஒரு எதிர்விசையை
அங்கே உண்டாக்கி விடும்
அதற்கான மேதமெடிகல் சமன்பாடு
2.0 வுக்கு மட்டுமே தெரியும்.
"ஒமேகாஸ்குவார் ஜி ஏபி"
இதுவே சூத்திரம்,
இதை பயன்படுத்தி
அந்த "ஆபத்தான பூகம்பத்தை"
2.0 தடுத்து விடுகிறது.
இதை இந்த எந்திரன 2
இமய மலை பாபாவிடம் கற்றிருந்தது.
பாபா நீங்கள் நினைக்கும்
காவி சாமியார் அல்ல.
ஹோமி ஜே பாபா எனும்
அணு விஞ்ஞானியின் ஆவி.
அவர் மூளை இமயமலையின்
ஒரு பொந்தில்
ஹோலோகிராம் ஆக இருக்கிறது.
குவாண்டம் என்டேங்கில் மூலம்
(இது ஒரு குவாண்டம் டெலிபோர்டேஷனின்
மீடியம்)
இதையெல்லாம்
2.0 தன் ஹார்ட் டிஸ்கில்
டேட்டாவாய் பதிவிட்டிருக்கிறது.
அதனால் பூகம்பம் தடுக்கப்பட்டு விட்டது.
..................
...................
எப்படியிருக்கிறது கதை.
இது என் கற்பனை!
இப்படி பல கதைகளை
உலவ விட்டு அமர்க்கப்பளப்படுத்துகிறது
ரஜனியின் ஃபர்ஸ்ட் லுக்.

============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக