சனி, 12 நவம்பர், 2016

பல்கேரியாவில் வேதாளம்.

பல்கேரியாவில் வேதாளம்.
===============================================ருத்ரா

வேதாளம்
பல்கேரியா போயிருக்கிறது.
அங்கே தான்
முருங்க மரமெல்லாம்
நல்லா இருக்காம்.
வேதாளியோடு
டூயட் அது இது என்று
லவ்வுவதற்கு ஏற்ற இடமாம்.
"தெறிக்க விடலாமா?"ன்னு
அங்கெ கொஞ்சம்
தூள் கிளப்ப ஆசை.
அப்படியே
வரும் வழியில்
உஜ்ஜயினி வழியே வந்து
காளி கோயில்
பட்டி விக்கிரமாதித்தன் கால்
பட்ட சுவடுகளையும்
பூஜித்து விட்டு வரலாம்.
தயாரிப்பாளர் படெஜெட்டு
பிதுங்கி வழிந்து தொங்கினால்
அதில் அப்படியே
ஊஞ்சல் கட்டி ஆடிவிட்டு
ஊர் திரும்பலாம்.
ஏகே துப்பாக்கிக்குள்
கதாநாயகனும் வில்லனும்
முகம் நுழைத்து
பயங்கரமாய் சண்டையிடலாம்.
அந்த 47 எப்படி 57 ஆச்சு?
அம்பத்தேழு படம் ஆயிருக்குமொ?
கருப்பு வெள்ளை முடிய்லே தான்
இப்பல்லாம்
காதல் ரோஜா விவசாயம்.
57 வயசா இருக்கலாமோ?
இருக்காதே!
"ஆசையில"அந்த‌
கொரியாகிராஃப்
இருட்டு நிழல் ஆட்டத்திலே
இளமை துள்ள  ஆடி ஆடி
இப்போ
கொஞ்ச வருசம் தானே ஆச்சு!
படம் வந்தப்றம்
கத சொல்வாகள்ள‌
அப்ப தெரிஞ்சுகிட்டா போச்சு!
விமானப்பார்வையிலே
அந்த குட்டி நாட்டின்
சிவப்பு சிவப்பு வீடுகள
நீலக்கடல் கவ்விக்கிட்டு இருக்கிற
காட்சியே அற்புதம்.
பல்கேரியா ஷூட்டிங்க் ஸ்டில்ஸ்
கெடச்சா பாப்போம்.
அதுவே நமக்கெல்லாம்
கிள்ளி கிள்ளி விடுற
டீஸர் ஆச்சே!

=====================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக