கரன்சி குறும்பாக்கள்
====================================ருத்ரா
தீண்டத்தகாத நம்பர்கள்.
ஐநூறு.
ஆயிரம்.
____________________________________
வங்கிகள்
ஓட்டுவங்கிகளின்
மாட்டுத்
தாவணிகள்.
______________________________________
ஏடிஎம்
இதனுள்ளா புகுந்தது
காஷ்மீர்
எல்லைகள்?
________________________________________
பொருளாதாரம்
உலகநாடுகள் நம் தலையில்
மிளகாய் அரைப்பதை
இப்படித்தான் சொல்கிறோம்.
__________________________________________
கறுப்புப்பணம்.
கறுப்பு ஜனநாயகம்
பெற்றெடுத்த
பிள்ளை.
_____________________________________________
கண்டெய்னர்
இந்திய பட்ஜெட்டே
இந்த
சவப்பெட்டியில் தான்.
______________________________________________
கரன்சி
காந்திப்புன்னகையை
கள்ளப்பணங்களின் குகைகள்
ஆக்கிய அரக்கர்கள் யார்?
_____________________________________________
சோறு சமைக்க
அடுப்பெரிக்க மலிவாய் கிடைத்தது
ஐநூறு ஆயிரம்
ரூபாய் நோட்டுகள்.
________________________________________________
அடுத்து வருவது
பண்வீக்கம்.
ரெண்டாயிரம் ரூபாய் நோட்டில்
பார்சல் 2 இட்லி.
_________________________________________________
கல்யாணம்.
சீப்பை ஒளித்தும்
ஐநூறு கோடியில்
கல்யாணம்.
__________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக