திங்கள், 14 நவம்பர், 2016

சிரிப்பு என்றொரு தேசம்

சிரிப்பு என்றொரு தேசம் 
=============================================ருத்ரா"ஏங்க!இன்னைக்கு பால் பாயஸம் வெச்சிருக்கேன்..
சாப்ட்டு பாத்துட்டு சொல்லுங்க."

"பாத்துட்டு சொல்லவா?சாப்ட்டுட்டு சொல்லவா?"

___________________________________________________________


"வரன் பாத்துட்டு இருக்கேன்.ஒண்ணும் அமையல.
கேக்கர வர தட்சிணை தாரேண்ணு சொல்லியாச்சு.."

"ஏங்க! உங்கள் பொண்ணு வேல பாக்கிறால்ல..அப்றம் என்னங்க?

"நான் சொல்றது என் பையனுக்கு!"

___________________________________________________________


"அவர ஏய்யா எல்லாரும் வீர"நாய"கன் வீர"நாய"கன்னு கூப்பிடறாங்க?"

"தெரியாத்தனமா அவர் நாய்க்கு "வீரா"ன்னு பேர் வச்சுட்டாரு"

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________________________________________________________


"ஏம்பா! மேனேஜர் இன்னும் வரலயா? பாங்க்ல பணம் மாத்தப்போயிருந்தேன்.
ரொம்ப லேட் ஆயிடுச்சு.
சத்தம் போடுவாரேன்னு பயந்துகிட்டே வந்தேன்."

"நீ பாக்கலியா அவரை? நீ நின்னுகிட்டிருந்த "க்யூவிலே" தான்
ரொம்ப கடைசில நின்னுகிட்டிருக்காரு!

__________________________________________________________________


என்னங்க ஆஸ்பத்திரி பேர "கோவில்ன்னு" மாத்திட்டாங்க.

ஆமாங்க.தினமும் வாசல்ல நோயாளிகளுக்கு பதிலா
அங்கபிரதட்சிணம் பண்ர தொண்டருங்க கூட்டம் தான் ஜாஸ்தியா
போச்சாம்.

___________________________________________________________________

"அத ஏய்யா "கள்ள கள்ள"ப்பணம்கிறாங்க?"

"கள்ளப்பணம் வச்சிருந்த வீட்டுலேருந்து திருடிட்டுப்போன திருடங்க கிட்டேருந்த
மீட்ட பணமாம் அது!"

______________________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக