வடசென்னையில் விக்ரம்
==============================================ருத்ரா
தென்சென்னையை பளிங்கு என்றால்
வடசென்னை என்பது முரட்டுப்பாறை.
விக்ரம் வடசென்னை வாழ் மக்களின்
உள் மனங்களில் புகுந்து வருவார்
இந்த படத்தில்.
பொதுவாக மதராஸ் பாஷை எனும்
அமுதினும் இனிய தமிழ் பாஷையின்
பல் கலைகழகமே வடசென்ன தான்.
அவருக்கு
என்ன மாதிரியான பாத்திரம்
எனத்தெரியவில்லை.
வட சென்னையின் இதயம்
அண்ணா நகர்..
நுரையீரல் கோயம்பேடு
வண்ணார் பேட்டையும்
தண்டையார் பேட்டையும்
பேட்டைத்தமிழின்
"பேட்டை ரேப்" சங்கீதத்தின்
தடபுடல்களோடு சென்னை நகரத்தின்
உண்மையான ஆத்மாவாகும்.
சாமி படத்தில்
விக்ரம்
நெல்லை காய்கறி மார்க்கெட்
ஒட்டிய தெருக்களில்
ரவுஸை துவக்குவார்
"பீர்ல வாய் கொப்புளித்து"!
வடசென்னை அவர் நடிப்பில்
விடைத்து முறுக்கேறும் அழகை
பார்க்கலாம்.
வடசென்னையின் தூசி துரும்புகள்
கூட
விக்ரமின் உயிர்ப்பு நிறைந்த
உணர்ச்சி மண்டலத்தை
தன் மீது சுற்றி உடுத்திக்கொள்ளும்.
வடசென்னை விக்ரம்
துள்ளி வரட்டும்...ரசிகர் நெஞ்சங்களை
அள்ளி வரட்டும்!
==================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக