புதன், 9 நவம்பர், 2016

டொனால்டு டிரம்ப் ...அமெரிக்க அதிபர் !டொனால்டு டிரம்ப் ...அமெரிக்க அதிபர் !
===================================================ருத்ரா இ பரமசிவன்


சிறப்பான வெற்றி பெற்ற
டொனால்ட்டு டிரம்ப் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்.!

குடியரசுக்கட்சியையே
தன் கைக்குள் அடக்கிக்கொண்டு
வீறு கொண்டு எழுந்தார்.
குடியரசுக்கடசியின் மூத்த தலைவர்கள்
முணு முணுப்புகளை
மழுங்கடித்து விட்டு
தன் கவர்ச்சி மிக்க
எழுச்சி மிக்க பேச்சுக்களால்
எல்லோரையும் கவர்ந்தார்.
அமெரிக்க வெள்ளை இன மக்களிடையே
உள்ள உழைப்பாளர் வியர்வையை
தன் பிரசார பீரங்கியின்
வெடி மருந்து ஆக்கினார்.
தீவிர வாத அச்சுறுத்தலுக்கு
காரணமான ஆணிவேர் மீதே
ஆணி அடிக்கும் திட்டம் கூறினார்.
குடியேற்ற விதிமுறைகளில் உள்ள
ஏனோ தானோ தனங்களை
களைவேன் என கடுமையாக முழங்கினார்
ஈரானுடன் அணு ஒப்பந்தம்  வேண்டாம் எனறார்.
ஹிலாரி கிளிண்டனின்
மின்னஞ்சல் முறைகேடுகளை
அம்பலப்படுத்தி தண்டிப்பேன் என்றார்.
ஊடகங்கள் தன் மீது ஏவிய
பாலியல் பூச்சாண்டித்தனங்களை
தன் மீது பெய்த பூமழையாய்
மாற்றிக்கொண்டார்.
கடைசி நிமிடம் வரை தன்னை
ஏதோ கடுவாய் புலி மாதிரி
சித்தரித்தவர்களையெல்லாம்
சித்தம் கலங்க செய்துவிட்டார்.
தன்னை தனியாளாய்
ஒதுக்கியவர்களிடையே
ஒரு ஒப்பற்ற தலைவராய் தோன்றி நின்றார்.
இந்த வெற்றி
அறிவு ஜீவிகளின் அதிர்ச்சியா?
அறியா மக்களின் எழு ச்சியா ?
வரும் காலம் விடை கூறும்.
அமெரிக்க வரலாறு எத்தனையோ
உள்நாட்டு கிளர்ச்சிகளில்
ரத்தம் தோய்ந்த பக்கங்களை
உள்ளடக்கியிருக்கிறது.
அந்த நாட்டின் உள் வலிகளும் ரணங்களும்
அடி  ஆழத்து நரம்போட்டங்களாய்
சிலிர்த்து ஓடியதே
இப்போது பீறிட்டிருக்கிறது.
அந்த வெற்றிக்கு நம் வாழ்த்துக்கள்.!
அமெரிக்க மக்களுக்கு
அன்பான  பூங்கொத்துக்கள்.!
வாழ்க வாழ்க
அமெரிக்கத் திரு நாட்டின்
அருமை மிகு ஜன நாயகம்!

==========================================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக