புதன், 9 நவம்பர், 2016

வேதாளம் எங்கேப்பா?


வேதாளம் எங்கேப்பா?
=================================================ருத்ரா

வேதாளம் எங்கேப்பா?
போன தீபாவளிக்கு
"தெறிக்க"விட்ட‌
உல்லாசத்தை இந்த‌
வருடமும்
கழுவி கழுவி ஊத்திகிட்டு
இருக்காங்களாம்
ரசிகர் மன்றமே இல்லாத‌
அஜித் ரசிகர்கள்.
போன ஆண்டு டீஸருக்கே
மில்லியன் பார்வைகளாம்.
லட்சம் லைக்குகளாம்.
"தெறிக்க விடலாமா"
என்று
அந்த கருப்பு வெள்ளை
புல்லாந்தரிசு போல‌
உள்ள சிகையை ஆட்டி ஆட்டி
கண்களை ஒரு தினுசாய்
செருகிக்கொண்டு
அஜித் செய்த அதிரடிக்காட்சிகளிலேயே
ரசிகர்கள் இன்னும்
எண்ணெய் தேய்த்து குளித்து
பட்சணம் தின்று பட்டாசு கொளுத்தி
மஜாவாய் இருக்கிறார்கள்.
என்னடா தமிழா என்று
உரிமையோடு தோளில் கை போட்டு
கேட்டால்
என்னடாவா "கன்னடா"டா அந்த‌
கிரேட் கிங்...
ஏற்கனவே ஒரு கன்னடா கிட்ட‌
நாமும் நம்ம தமிழ் நாட்டு செங்கோலை
வாங்கிக்குங்க வாங்கிங்குங்க என்று
கெஞ்சி கூத்தாடிட்டோம்.
இவர நம்ம அம்மாவே கரிசனையா
உடம்ப பாத்துக்க சொன்னாராம்.
அப்றம் என்ன...
அடிங்கட மோளத்தை
நம்ம விக்கிரமனும் இவரு தான்.
நம்ம வேதாளமும் இவரு தான்.
அவரு வெட்டி வெட்டி வீழ்த்தும்
வேதாளமும் நாம் தான்.
தமிழ்நாடு யாருக்குடா வேணும்.
இவரு போதும் டா...
வேதாள உலகம் புகுந்து விட்டான் தமிழன்.

====================================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக