ஞாயிறு, 13 நவம்பர், 2016

விஜய்யின் "துப்பாக்கி 2."

விஜய்யின்    "துப்பாக்கி  2."
=============================================ருத்ரா"துப்பாக்கி 2"
இன்னமும் சுவர்களில் கூட‌
வர வில்லை.
அதாவது "போஸ்டரில்"கூட‌
வெடிக்கும் முகம் காட்டவில்லை.
இருப்பினும்
ரசிகர்களின் ஆர்வம்
நான்கு ஆண்டுகளுக்கு முன்
வெடித்து தூள் கிளப்பிய‌
துப்பாக்கி படமே
துப்பாக்கி 2 ஆக
துறுத்திக்கொண்டு முன் நிற்கிறது.
ஏனெனில்
ஏ ஆர் முருகதாஸ் எனும்
பெயரே போதுமே.
அவரது கதை அமைப்பும்
அதன் கூர்மையும் துடிப்பும்
திரை இயக்கமும்
உருக்கொண்டு கருக்கொண்டது
அந்த துப்பாக்கி.
அதனால் இப்போது ரசிகர்கள்
வெடித்து மகிழும் இந்த துப்பாக்கியும்
பொம்மைத்துப்பாக்கி அல்ல.
துப்பாக்கி 1 ல் இருந்து
வெடிச்சத்தம் மட்டும் இல்லை.
துப்பாக்கி 2ன் டீஸர் ட்ரெய்லர் என்று
எல்லாமே சீறிப்பாயும்.
இப்போது பை"ரவா" விலேயே
துப்பாக்கி 2ன் ரவை இருக்கிறது.
அதுவே பட்டையை கிளப்பும்.
ஏ கே துப்பாக்கிகள் என்றெல்லாம்
எந்த நம்பரை தன்னுடன்
ஒட்டிக்கொண்டு வந்தாலும்
துப்பாக்கி என்றாலே
விஜய் துப்பாக்கி தான்.
எந்தப்பொருளுமே
"மேட் இன்" என்ன என்பதைப்
பொறுத்து தான் எல்லாமே.
இந்த துப்பாக்கி
"மேட் இன்" மற்றும் "மேட் ஃபார்"
"மேட் வித்" ஆகிய எல்லாமே
"விஜய்" தான்!
அப்பறம் "வெற்றிக்கு" ஏது தடை?

======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக