செவ்வாய், 15 நவம்பர், 2016

சூர்யாவுக்குள் நூறு விஜய சேதுபதிகள்


சூர்யாவுக்குள் நூறு விஜய சேதுபதிகள்
============================================================ருத்ரா
"தானா சேர்ந்த கூட்ட"த்தில்
சூர்யா
தன் வித்யாசமான கெட் அப் களை
தோலுரிக்கப்போகிறாராம்.
உண்மையில்
அவர் நடிப்பை
ரசித்து பார்க்க வேண்டுமென்றால்
அது "பிதாமகனில்"வரும் பாத்திரம்
மட்டும் தான்.
மற்ற படங்களில் எல்லாம்
மசாலாத்தனம்
மற்றும் சண்டைகள் நிறைந்த‌
மாமூல் காட்சிகள் தான் மலிவு.
இவை வசூல்கள் தந்திருக்கலாம்.
ஆனால்
நடிப்பு எனும்
உயரத்துக்கு
ஒரு படிக்கட்டு கூட
இவர் ஏறவில்லை.
கட் அவுட் கதாநாயகர்கள்
வரிசையில் வேண்டுமானால்
பால்குடங்களின் அபிஷேகத்தில்
அவர் மகிழலாம்.
அவர் மனது வைத்தால்
நூறு விஜயசேதுபதிகளை
வெளிக்காட்ட முடியும்.
ஆனால்
அவர் பத்து படங்களில்
வாங்குவதை
ஒரே படத்தில் வாங்கிவிட்டு
திருப்தி அடையலாம் என நினைக்கிறார்.
ஆனால்
ஒரு வைரம்
நூறு கூழங்கற்களுக்கும்
சமம் ஆகாது.
நடிப்பு என்பதும்
அப்படித்தான்.
சூரிய வைரம் நமக்கு
என்று கிடைக்கும்?
=====================================கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக