கருத்தோட்டம் (2)
===========================================ருத்ரா இ.பரமசிவன்
சமஸ்கிருத சொல் "வேறு சொல் அல்ல".பாவாணர் முறையில் அக்கு வேறு ஆணி வேறு என்று பகுப்பிலக்கணம் செய்தால் தமிழின் வேர்ச்சொல்லே நம்மிடையே மீண்டும் சமஸ்கிருத வேறு சொல்லாக வந்திருப்பது புரியும்.வேதம் என்பதே வேய்தம் ஆகும்.வேய் என்றால்
புல்லால் கூரை போடு என்று பொருள்.தொல் தமிழர்கட்கு அப்போது
புல் தான் மிகவும் பயனில் இருந்தது.அதை வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும் செய்து வாழ்ந்திருப்பான் போலும்.அதனால் தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற வழக்கு வந்தது.அவன் தான் அறிந்ததை பிறர்க்கு கற்பிக்கும் போதும் கையில் புல் இருந்தது.அதுவே தர்ப்பை எனும் புல்.அவன் கற்பித்ததே வேய்தம் னும் வேதம்.அதில் தமிழ்ச்சொல்லுக்கு முற்றிலும் வேறுபட்ட சொற்கள் இருப்பது உங்களுக்கு புதிராகத்தோன்றும்.ஆனால் தொல் தமிழன் கடல் கடந்து "திரைகளிடையே" பயணம் செய்து உலகம் முழுவதும் சென்று கொணர்ந்த ஒலித்திரட்சிகளே பின்னர் சமஸ்கிருதம் ஆகியது.அதிலும் பாரசீக பாட்டுவடிவமான அவெஸ்தா மொழியிலிருந்தே தமிழன் ரிக் வேதம் படைத்தான்.இப்படி அயல் நாட்டு மொழித்திரட்சியையும் தொன்மைத்தமிழ் ஒலித்திரட்சியும் அப்போதே வேறு வேறு ஆக இருந்தது.சிறந்த ஆர்ப்பரிக்கும்(ஆர்) தன்மையில் உள்ள அயல் தமிழன் ஆரியன் ஆனான்.சொந்த மண்ணின் மைந்தன் பழங்குடிகளாய் திராவிடன் (தொன்மை மிக்க திரைகடற்தமிழன் என்றே இதற்கும் பொருள்) ஆனான்.ஒரே மொழி (தமிழ்) பேசிய போதும் சேரன் சோழன் பாண்டியன் என்று வெட்டிக்கொண்டு குத்திக்கொண்டு சாகவில்லையா அது போல் தான் ஆரியன் திராவிடன் ஆனதும்.எனவே சமஸ்கிருதத்தின் தொல் வடிவம் தமிழ்.தமிழ் எல்லா(உலக) மொழிகளையும் உள் வாங்கியதே சமஸ்கிருதம்.சமை என்பது பக்குவம் அல்லது
ஒரு நிலைக்கு சமப்படுத்தல் என்பதைக்குறிக்கும்.சமைதல் என்று ஒரு சொல்லும் அதைத்தழுவியதே .சிறு பெண் பருவம் அடைந்து வளர்ந்தவர்களுக்கு சமம் ஆவதே "சமைதல் " சாப்பிடும் நிலைக்கு சமப்படுத்தலே சமையல் ஆகும்.எனவே உலக மொழிகளின் எல்லா ஒலிக்குறிப்புகளை அப்படி சமைத்த மொழியே சம அல்லது சமைகிருதம் ஆகும். அந்த உலக மொழிக்கலப்பை வைத்து ஒரு மொழியை உருவாக்கியதும் தமிழர்களே. அந்த உலக மொழி இயற்படி சம+கிருதமே (நடுவில் "ஸ்" சேர்த்து) சம்ஸ்கிருதம் ஆயிற்று.கிருதம் என்பது "கரம்"என்ற சொல்லின் திரிபு தான்.ஐங்கரத்தோனே என்று தமிழர்கள் பிள்ளையாரை
வழிபடுகிறார்கள்.
=============================================================ருத்ரா
13/10/2015

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக