சனி, 5 நவம்பர், 2016

ஜெயகாந்தன் எழுத்துக்கள்

சிறுகதை இலக்கியம் என்பது சமுதாய இயக்கங்களின் அடி நாடித் துடிப்புகளாக இயங்கும் தனிமனித எண்ணப்பிழம்புகளில் தொட்டு எழுதப்படும்  எழுத்துவடிவங்களே ஆகும்.எனவே அந்த திசையில் உளியை (சிந்தனையை)எடுத்து செதுக்கியவனே "சிறுகதை மன்னன் " ஜெயகாந்தன்.
அந்த மாமனிதன் இறந்து விட்டான் என்று நினைக்க முடியவில்லை
அவனுக்கு என்று ஒரு சொட்டு கண்ணீர் விட்டால் கூட தான் கொச்சைப் படுத்தப்படுவதாக நினைக்கும் ஒரு சுய மரியாதை நெருப்பு அவன்.அவன் எழுத்துகள் பற்றி எழுதிய கவிதை இது.இதை நான் ஏப்ரல் மாதம் 9 ஆம் நாள் 2015 ல் எழுதினேன்அந்த சூரியனை நனைக்க முடியாது
==================================================== ருத்ரா  இ பரமசிவன்.
(ஜெயகாந்தன் எழுத்துக்கள்)

எழுத்துக்கள்
வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல!
அவை ஒவ்வொன்றும்
கடி எறும்புகள் ஆனபோது தான்
தமிழ் இலக்கியம்
தூக்கம் கலைத்தது.
புதிய யுகம் காண‌
தூக்கம் கலைத்த அவருக்கு
தூக்கம் ஏது?
தூங்கி விட்டார் என்ற செய்தியில்
செய்திகள் ஏதும் இல்லை.
ஒரு வெட்டியானைப்பற்றிய‌
அவரது சிறுகதைக்கு
இப்போது தான்
பிள்ளையார் சுழி போடுகிறார் என்று
எடுத்துக்கொள்வோம்.
பிள்ளையார் என்று சொல்லால்
அவரை நாம் கொச்சைப்படுத்தினாலும்
மார்க்ஸ் எங்கல்ஸின்
டையலக்டிகல் மெடீரியலிஸம்
அவருள்
நாடி துடித்துக்கொண்டிருப்பதாய் தான்
தெரிகிறது.
நடப்பு (தீஸிஸ்)
எதிர்ப்பு (ஆன்டி தீஸிஸ்)
இணைப்பு (சிந்தெஸிஸ்)
என்ற சங்கிலியின் கண்ணிகள்
அவர் பேனாவுக்குள்
தர்க்கம் கழன்றதில்லை.
அவர்
சமுதாய முரண்களின்
சமுக்காளம் நெய்ததில்
எத்தனை வண்ணங்கள்?
அத்தனையும் சிவப்பை உடுத்தி வந்ததாய்
பின் நவீனத்துவம் பேசியவர்கள்
புளிய மரத்துப்பேய் வளையங்களில்
ஃப்ராய்டிஸக்குஞ்சம் கட்டினார்கள்.
இந்த மண்ணின் உள் நரம்பின்
தமிழ் கூட அவருக்கு
ஒரு உலகக்கோணத்தில்
அந்நியப்பட்டு போயிருக்கலாம்.
அதனால்
அந்த சில உரசல்களின் தீப்பொறிகளில்
அவர் விதை தூவியிருக்கலாம்.
ஆனால் அந்த "சிறுகதை மன்னன்"
எழுத்தில் ஒரு  குறுநில மன்னன் அல்ல.
சிந்தனை ஊற்றுகளின் சக்கரவர்த்தி அவன்.
வால்டர் ரூஸோவும் ஆன்டன் செக்காவும்
எழுத்தில் கனல்மூட்டி ரோஜாக்களை
பதியம் இட்டதை மகரந்தங்கள் ஆக்கியவன்.
சிந்துபூந்துறை ஆற்று பனங்காடுகளின்
ஒரு "கயிற்றரவு"மயக்கத்தை
சமுதாய உள்வலியாய் உள்வாங்கிய‌
ஒரு  புதுமைப்பித்தனின்
ஆவித்துடிப்பையும் ஆங்காரம் ஆக்கியவன்.
"யாருக்காக அழுதான்?"
என்ற கேள்வியை வீசிவிட்டுப் போனவன்.
அக்கதையின் கரு
இன்னும் கருக்குலையாமல்
தழல் வீசிக்கொண்டு தான் இருக்கிறது.
இப்போது சொல்கின்றான்.
யாருக்காகவும் அழவேண்டாம் என்று.
மரணங்களின் அர்த்தம் அழுகை அல்ல.
அழுகைகளால்
அந்த சூரியனை நனைக்கமுடியாது!
===========================================================================

7 கருத்துகள்:

 1. yes i had heard that when jayakanthan stopped writing ..there were anxious moments from all sections of people...
  even the reputed tamil journals magazines did not utter a word...
  all respected his deceision...
  such was the respect he derived from all...

  பதிலளிநீக்கு
 2. He is an overrated writer. A general impression has been created about him that he is a class apart to be put on a pedestal equal to God. This has muted all criticism and a fair judgement of his output as a writer. I am yet to see a person who says anything negative about his creative fictions as well as his essays on misc topics. This I think is due to the general nature of Tamilians - they always want to worship - anything. I cannot make a judgement but I can reserve it till I complete all his work or at least what others call his major works: novels, shortstories and essays. I have read only a few short stories, esp. those hailed as his masterpieces. They are ordinary. To me. Sometimes, pure nonsense as, for e.g his celebrated short story Gurupeedam. For one thing, I can unhesitatingly give credit: namely he can make people like you fall at his feet.

  பதிலளிநீக்கு
 3. Your long ventilations are but some myopic views regarding his social themes in his writings. By your manifestations I was thrust to a conclusion that you are just marred by anachronism. However I thank you for your comments

  பதிலளிநீக்கு
 4. To Mr Bala V.

  Your long ventilations are but some myopic views regarding his social themes in his writings. By your manifestations I was thrust to a conclusion that you are just marred by anachronism. However I thank you for your comments

  பதிலளிநீக்கு