சனி, 19 நவம்பர், 2016

விக்ரம் வேதா விஜய்சேதுபதிவிக்ரம் வேதா விஜய்சேதுபதி
================================================ருத்ரா


மேலே உள்ளது
ஒரு கூட்டணிப்படம் தான்.
மாதவனும் விஜயசேதுபதியும்
கள்ளன் போலீஸ் விளையாட்டு,
விஜ்யசேதுபதி வில்லன்
பாத்திரத்தில் தன் தனி முத்திரையை
காட்டுவார் என நினைக்கிறேன்.
நானும் ரவுடிதான் படத்தில்
மீசையை மழித்துக்கொன்டு
ஒரு வேறுபட்ட பாத்திரத்தில்
நம்மை ஆச்சரியப்பட வைத்தார்.
இதில் மீசை வைத்த வில்லன் தான்.
ஆனாலும் மாதவன் இருப்பதால்
ஒரு காமெடித்தனமும் கலந்திருக்குமோ
என்று ஒரு சந்தேகம் ஏற்படுகிறது.
படம் கூட "விக்கிரமன் வேதாளம் போல்
இருக்கலாம்.
பெயரைச்சுருக்கி அவர் வேதா என்று
அழைக்கப்படலாம்.
வில்லனுக்கு வேதா(ளம்) தானே பொருத்தம்.
உல்டாவாயும் இருக்கலாம்.
இறுதிச்சுற்று என்ற படத்தில்
மாதவன் நடிப்பின்
புதிய சிகரம் ஒன்றை தொட்டுவிட்டார்
இதில் இன்னொரு சிறப்பு
கதிர்..
மதயானைக்கூட்டம் கிருமி
முதலிய படங்கள் மூலம்
தனக்கொரு மணி மகுடம் சூட்டிக்கொண்டவர்.
சுவாரஸ்யமான கூட்டணி.
விஜயசேதுபதிக்கு
நடிப்பின்
எல்லைகள் என்பது
எப்போதோ மைல்கற்களையெல்லாம்
உடைத்து தூளாக்கி
மேலும் மேலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது.
எத்தனை எத்தனை கோணங்கள்?
வட்டத்துக்கு 360 டிகிரிதான்.
இவர் இன்னும் இன்னும்
நுட்பமாய் உள்ளே போய்
3600 டிகிரிகளைக்காட்டுவார்.
விக்ரம் வேதா
எப்போது வரும்?
ஆவலில் பித்தம் பிடித்து விடும்
போலிருக்கிறது ரசிகர்களுக்கு

===========================================================


.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக