வியாழன், 3 நவம்பர், 2016

சிம்பு என்ற சிலம்பரசன்

சிம்பு என்ற சிலம்பரசன் அவர்களே
========================================ருத்ரா

உங்கள் சமீபத்திய பேட்டி
(தி இந்து தமிழ் அக்டோபர் 18, 2016)
உங்கள் சன்னல்களை
நன்கு திறந்து காட்டியிருக்கிறது.
நீங்கள் பக்குவம் அடைந்திருக்கிறீர்கள்.
உங்கள் வாய் முன்னே வரும்
ஊடக மைக்குகள் எனும்
புலியின் குகை வாய்க்குள்
புகுந்து வருவதற்கும்
ஒரு புறநானூற்று வீரம் வேண்டும்.
"அப்பா"தையில் அப்பா இருக்கிறார்
என்று பார்ப்பவர்களுக்கு தெரிந்தாலும்
உங்கள் தனித்தன்மை பளிச்சிடுகிறது.
"அச்சம் என்பது மடமையடா" என்பது
உங்கள் இதயத்துக்குள்
துடிக்க ஆரம்பித்து விட்டது.
தனுஷ் பிடித்த கொடியின் உயரம்
உங்கள் தன்னம்பிக்கையை
உங்களை எந்த விதத்திலும்
பாதிக்க வேண்டிய அவசியமில்லை
என்று அந்த பேட்டியில்
ஆணி அடித்துச்சொன்னது
உங்கள் "சிலம்பின் பரல்கள்"
எப்படியும் வீராவேசத்தோடு தெறிக்கும்
என்பதைக்காட்டுகிறது.
கவுதம் மேனன் என்ற மேரு மலை
உங்கள் உறுதியான பக்கபலம்.
"விண்ணைத்தாண்டி"
வெளியே வந்த சாதனை ஒளிவட்டம்
உங்கள் தலைமேல்
சுழன்று கொண்டு தான் இருக்கிறது.
அதனால்
நீங்கள் எதையும் தாங்கும் இதயம் மட்டும் அல்ல‌
எதையும் தாண்டும் இதயமும் நீங்களே.
"திரும்பிப்பார்" என்ற அழுத்தமான வசனம்
"திரும்பாமலே பார்" என்று மட்டுமே
உங்களுக்கு ஒலிக்க வேண்டும்.
நீங்கள் பழைய கசப்புகளை
திரும்பி பார்க்கவேண்டியதில்லை
அனால் பின்னால் திரும்பாமலேயே
எல்லா திசைகளிலும்
உங்கள் சிந்தனை அம்புகளை விட்டுப்பாருங்கள்!
உங்கள் ஆத்மீகத்தின் புதிய பரிமாணங்களை
சோதனை செய்து பார் என்று
உங்கள் பயணத்தில் மைல்கற்கள்
ஏதும் வந்து விரட்டவில்லை.
சிலம்பு அடிகளாராக வந்து
அதிர்ச்சியூட்டவும் தேவையில்லை.
இந்த கச்சா பிலிமில் உங்கள்
இலக்கியங்களை இன்னும் சிறப்பாக
எழுதுங்கள் என்றும்
எழுதுவீர்கள் என்றும்
ஏதோ ஒரு முகவரியற்ற ரசிகனின்
மன வரிகள் என ஏற்றுக்கொள்ளுங்கள்.

==================================================================

LINK
______

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article9233634.ece


2 கருத்துகள்: