பாவம் கடவுள்
========================================ருத்ரா
விண்ணிலிருந்து மண்ணுக்கு
இறங்கி
அந்த சினிமாத்தியேட்டருக்குள்
புகுமுன் நடுவானில்
ஈஸ்வரன் நிறுத்தப்பட்டார்.
கூடவே வந்த நாரதரும் தான்!
என்ன!
ஈஸ்வரனையே "திரிசங்கு" ஆக்குவதா?
கோபம் கொண்ட
சிவன் பல்லை நறநறத்து
நெற்றிக்கண்ணை திறக்க முயன்றார்!
நாரதர்
ஸ்வாமி! வேண்டாம்! வேண்டாம்!
பூலோகமே பஸ்பமாகி விடும்.
அதற்குள்
"யாரது அங்கே
என் படத்தை
பெயர் சொல்லிக்கொண்டிருப்பது?"
"பூலோகம்" படத்தயாரிப்பாளர்
கீழேயிருந்து கர்ஜித்துக்கொண்டிருந்தார்!
கோர்ட்ல போட்டேன்னா
கோடிக்கணக்குல கறந்துருவேன்
தெரியும்ல"
என்ன ஓய்? நாரதரே!
என்னை இமயமலையோட
பேர்த்தானே அந்த பக்தனா அவன்?
அதெல்லாம் இல்ல ஸ்வாமி
"இடைக்காலத்தடை....கோர்ட் கேஸ்.."
நாரதர் விளக்க முயன்றார்.
என்ன நாரதரே!
எனக்கு பாடற சாம வேத கானத்துலே
இப்படியெல்லாம் "ஸ்லோகம்" வரலயே!
இதெல்லாம் உங்களுக்கு
புரியணும்னா நீங்க மனுஷனா
ஜென்மம் எடுக்கணும்!
மனுஷனாகவா?
பிட்டுக்கு மண் சுமக்கும்
கூலியாய்போய்
பிரம்படி பட்டது போதும்.
சரி நாரதரே
இந்த திரிசங்கு நிலையை
நிறுத்திவிட்டு தியேட்டர் போவோம்.
குமாரு எனக்காக காத்துகிட்டு இருப்பான்..
இருவரும் தியேட்டருக்குள்
நுழைய தயார் ஆயினர்.
அவர்களுக்கு மட்டும் எப்படி
படம் போடுவார்கள்?
பக்கத்து தியேட்டருக்குள் நுழைந்தார்கள்
ஓடிக்கொண்டிருந்த படத்தைப்பார்த்ததும்
குஷியில் கத்தினார் கடவுள்
நாரதரே பாரும் என் படம் தான்
ஓடிக்கொண்டிருக்கிறது!
"குமாரு கடவுள் நிச்சயமா இருக்கான் குமாரு!"
கடவுள் உச்ச ஸ்தாயியில் குரல் எழுப்பினார்.
நாரதரும் பார்த்தார்
அங்கு
"லிங்கா லிங்கா " என்று
லிங்கா படம் ஓடிக்கொண்டிருந்தது.
(தொடரும்)
========================================ருத்ரா
விண்ணிலிருந்து மண்ணுக்கு
இறங்கி
அந்த சினிமாத்தியேட்டருக்குள்
புகுமுன் நடுவானில்
ஈஸ்வரன் நிறுத்தப்பட்டார்.
கூடவே வந்த நாரதரும் தான்!
என்ன!
ஈஸ்வரனையே "திரிசங்கு" ஆக்குவதா?
கோபம் கொண்ட
சிவன் பல்லை நறநறத்து
நெற்றிக்கண்ணை திறக்க முயன்றார்!
நாரதர்
ஸ்வாமி! வேண்டாம்! வேண்டாம்!
பூலோகமே பஸ்பமாகி விடும்.
அதற்குள்
"யாரது அங்கே
என் படத்தை
பெயர் சொல்லிக்கொண்டிருப்பது?"
"பூலோகம்" படத்தயாரிப்பாளர்
கீழேயிருந்து கர்ஜித்துக்கொண்டிருந்தார்!
கோர்ட்ல போட்டேன்னா
கோடிக்கணக்குல கறந்துருவேன்
தெரியும்ல"
என்ன ஓய்? நாரதரே!
என்னை இமயமலையோட
பேர்த்தானே அந்த பக்தனா அவன்?
அதெல்லாம் இல்ல ஸ்வாமி
"இடைக்காலத்தடை....கோர்ட் கேஸ்.."
நாரதர் விளக்க முயன்றார்.
என்ன நாரதரே!
எனக்கு பாடற சாம வேத கானத்துலே
இப்படியெல்லாம் "ஸ்லோகம்" வரலயே!
இதெல்லாம் உங்களுக்கு
புரியணும்னா நீங்க மனுஷனா
ஜென்மம் எடுக்கணும்!
மனுஷனாகவா?
பிட்டுக்கு மண் சுமக்கும்
கூலியாய்போய்
பிரம்படி பட்டது போதும்.
சரி நாரதரே
இந்த திரிசங்கு நிலையை
நிறுத்திவிட்டு தியேட்டர் போவோம்.
குமாரு எனக்காக காத்துகிட்டு இருப்பான்..
இருவரும் தியேட்டருக்குள்
நுழைய தயார் ஆயினர்.
அவர்களுக்கு மட்டும் எப்படி
படம் போடுவார்கள்?
பக்கத்து தியேட்டருக்குள் நுழைந்தார்கள்
ஓடிக்கொண்டிருந்த படத்தைப்பார்த்ததும்
குஷியில் கத்தினார் கடவுள்
நாரதரே பாரும் என் படம் தான்
ஓடிக்கொண்டிருக்கிறது!
"குமாரு கடவுள் நிச்சயமா இருக்கான் குமாரு!"
கடவுள் உச்ச ஸ்தாயியில் குரல் எழுப்பினார்.
நாரதரும் பார்த்தார்
அங்கு
"லிங்கா லிங்கா " என்று
லிங்கா படம் ஓடிக்கொண்டிருந்தது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக