புதன், 9 நவம்பர், 2016

"சொல்கிறார்கள்"


"சொல்கிறார்கள்"


வலது சாரிப்புயலா?
==============================================ருத்ரா இ பரமசிவன்


பத்ரிநாத்துகளுக்கு கொண்டாட்டம்
உலகம் பூராவும் காவிக்கொடியாம்!

வலது சாரி என்றாலே
மூலையில் முடங்கிய கருத்துகள் 
என்று தான் அர்த்தம்.
இதில் புயல் என்றால்
அந்த கருத்துக்குள் புதிதாய்
இடது சாரி நோக்கி
விழிக்கும் பார்வை என்று அர்த்தம்.
டொனால்டு ட்ரம்ப்
ரஷ்யாவைத்தான் அழைத்தார்
உதவிக்கு!
இந்திய இந்து சேனாவும்
முஸ்லீம் தீவிர வாதிகளும்
அவருக்கு ஒன்று தான்.
கிருத்துவ மத வாதம்
அவர் பேசவே இல்லை!
இவர் எதிர்க்கும் கே திருமணங்கள்
இந்து புராணங்களில்
நிறைந்து வழிகின்றன.
இவர் பெயரை சொன்னாலே
தன்னை மேலும் கீழும் பார்ப்பார்களே
என்று 
வாலைச்சுருட்டிக்கொண்டு கிடந்தவர்கள்
அமெரிக்க வலது சாரிகள்.
இந்திய இந்துத்வாவுக்கு
அமெரிக்க வலதுசாரித்தனமே
ஒரு இடது சாரி சிந்தனை தான்.
இப்போது புயலடிக்கிறோம் என்று   
ஒரு கொட்டாங்கச்சித்தண்ணீரையே
சமுத்திரம் என்று சொல்லி அதில்
கும்பமேளா 
நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

===================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக