செவ்வாய், 8 நவம்பர், 2016

விஜய் சேதுபதிக்கு பெண் வேடம்

விஜய் சேதுபதிக்கு பெண் வேடம்
=============================================ருத்ரா

நமக்கு பிடித்த கதாநாயகர்கள்
மரப்பாச்சி பொம்மை போல்
ஆகி விடுகிறார்கள்.
அதிலும் சிறு பிள்ளைகள்
அந்த மரப்பாச்சிகளை படுத்துகிற பாடு
இருக்கிறதே!
கேட்கவே வேண்டாம்.
அதற்கு பெண் வேடம் போட்டு
இன்னொன்றுக்கு ஆண் போல் உடைகட்டி
அப்பா அம்மா விளையாட்டு எல்லாம்
விளையாடுவார்கள்.
ஆனால் உண்மையில் ரசிகர்களை
பொம்மைகள்
ஆக்குவதே இந்த நடிகர்கள் தான்.
அவர்கள் நாய் வேஷம் போட்டால்
இவர்கள் குலைப்பார்கள்.
அவர்கள் பேய் வேஷம் போட்டால்
விண்ணுக்கும் மண்ணுக்குமாய்
குதிப்பார்கள்
இவர்களுக்குள் ஆவி புகுந்தாற்போல்.
தி இந்து தமிழ் நவம்பர் 6 இதழில்
விஜய் சேதுபதியின் பெண் வேடம்
டெர்ரர்.
ரொம்பவே பயமுறுத்துகிறது.
கரடிக்கு பெண்வேடம் போட்டது போல்
அந்த ஸ்டில் ஃபோட்டோவில்
ஒரு தோற்றம்.
அதை அப்படியே பார்த்ததால் தான்
இப்படி தோன்றுகிறது.
கதை ஓட்டத்துடன் பார்த்தால்
அந்த கட்டம் ஒரு திருப்புமுனையாய்
இருக்கலாம்.
சஸ்பென்ஸ் மற்றும் ஏதோ நெருக்கடியின்
நெடி அந்த புகைப்படத்தில்
மேகம் போல் பட ர்ந்திருக்கிறது.
.சூது கவ்வும்  போல்
இதிலும் ஏதோ கவ்வப்போகிறது
என்று தெரிகிறது.
திரைக்கதை ர் என்று தெரியாதே!
ரெமோ வில் சிவகார்த்திகேயன்
"பார்பி" பொம்மைப்பெண் போல் வந்து
கலக்கி விட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்த பெண் வேடத்தில்
விஜய் சேதுபதியின் நடிப்பு
என்னவாக இருக்கும் என்பதை
தியாகராஜன் குமாரராஜாவிடம் தான்
கேட்க வேண்டும்.
ஒரு பயம் கலந்த உணர்ச்சியை
படரவிட்டிருப்பது போல் தான் தெரிகிறது.
புகைப்படங்களில் தெரியும்
திகில் மூட்டத்தைப்பார்த்தால்
அது
திருநங்கையா? திகில் மங்கையா?
தெரிய வில்லை

=====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக