ஞாயிறு, 20 நவம்பர், 2016

அந்த‌ வ‌லி


அந்த‌ வ‌லி
===========================================ருத்ரா

"அம்மா!"
வீறிட்ட‌
அந்த வலி
கசக்கிப் போட்ட காகிதத்தில்
வந்த கவிதை நான்.
அந்த துடிப்பில்
ஒரு துண்டாய்
துள்ளி விழுந்தவன் நான்.

அறுபடாத நூல்
எனும்
வம்சத்தை
நூற்றுக்கொள்ள
உன் ரத்த நாளங்களை
அல்லவா
நூற்றுக்கொடுத்தாய்.
இந்த
நூல்க‌ண்டு சிக்க‌லுக்குள்ளும்
க‌ல்க‌ண்டு இனிப்பு.
நான்
உனக்கு.

அதோ பார்.
இந்த‌ இனிப்புக்கு
மொய்க்க‌வருபவற்றை
கோடி கோடியாய்
யுக‌ம் நீண்டு.
வரிசை வரிசையாய்
கர்ப்பப்பைகள் சுமந்து கொண்டு
அம்மாக்களாய்...

அவைக‌ளுக்கு
நாங்க‌ள் வைத்த பெய‌ர்
"கட‌வுள்க‌ள்"

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக