திங்கள், 14 நவம்பர், 2016

சிரிப்பு எனும் தேசம்..(2)

சிரிப்பு எனும் தேசம்..(2)
========================================ருத்ரா இ பரமசிவன்



"அன்பே..உன் இதயத்தைக்கொடு"
"பிப்ருவரி 14 வரை பொறுத்திரு.ஜிகினா இதயங்கள் நிறைய ஆர்டர் கொடுத்திருக்கிறேன்."
_______________________________________________________

"தலைவர் இந்த தேர்தல்ல ஏன் நிக்கலே?"
"முதலமைச்சர் கனவுக்கு மூணு தொகுதி போதாதாம்."

_________________________________________________________
மனைவி
"பணப்பட்டுவாடாவுக்கு ஏன் அவசரப்படறீங்க? தேர்தலுக்கு இன்னும்
நாள் இருக்கே?
கணவன்
"நாசமா போச்சு! நான் சொல்றது நம்ம பணத்துக்கு பாங்கு பட்டுவாடா"

__________________________________________________________________

"எனக்கொரு சந்தேகம்?"
"என்ன?"
"ரேடியோல விவசாயிகள் நிகழ்ச்சியிலே "பணப்பயிர்" "பணப்பயிர்"னு
சொல்றாங்களே அது ரோட்டுல கெடக்கிற இந்த நோட்டு மகசூல் தானா?"

_‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________________________________

"ஆமா...இங்க ஒரு பெரிய கட்டிடத்திலே ரிசர்வ் வங்கி இருந்துதே
அதை எங்க காணோம்?"
"அதைத்தான் பேர் மாத்திட்டாங்களே"
"என்னன்னு?"
"அகில இந்திய பழைய பேப்பர் கடை"
_________________________________________________________________

"பழைய காலத்துப்படம்னு பாக்கவந்தேன்
ஏமாத்தமா போச்சு"
"ஏங்க"
"சென்ஸார் போர்டுல பேர் மாத்திட்டாங்க."
"என்ன படம்?"
"இரண்டாயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி"
__________________________________________________________
"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக