சனி, 19 நவம்பர், 2016

கருத்தோட்டம்

கருத்தோட்டம் 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தீ என்ற சொல் தேவ ஆனது.தீயின் பயன்பாடு தெரிந்து விஞ்ஞானம் வளர்த்தவர்கள் "தேவர்கள்" ஆனார்கள்.தெய்வ நிலை (உயர்நிலை) அடைந்தார்கள்.நகர் என்றால் "நகர்தல்" எனும் தொழில் ஆகுபெயர் இங்கு நகர் மற்றும் நகரம் ..நாகரிகம் ஆனது.சிந்து தமிழே எல்லா உலக மொழியுள் புகுந்து தேவ நாகரிகம் ஆனது.எனவே நம் வட தமிழே நம் செந்தமிழ் வடிவம் தான்.எனவே அது சமஸ்கிருதம் இது தமிழ் என்று சொல்லாடல் செய்வதைக்கூட "ஜாலி"யாக விளையாடிச் சொல்லாடலாம்.திராவிட மொழிக்குடும்பம் என்பது கூட "திரை"யோடி பொருள் தேடி பல் இன தொடர்பு வளர்த்த சிந்து வெளித்தமிழ் இனம் தான்.திரையிடமே (கடற்புறம் ..மலையாளத்தில் "கடப்புறம்"என்றும் மலைப்புறம் "மலப்புறம்" என்றும் ஆனது நாம் அறிவோம்.) த்ரவிட ஆயிற்று."திரை இமிழ்"இடமே "த்ரமிள"ஆயிற்று.தமிழ் வடமொழியை வளப்படுத்தி அதற்குள்ளேயே திரைஇமிழ் இடம் என்பது "த்ரமிள" ஆகி நம்மையே அதிர்ச்சி அடையச்செய்கிறது.இவ்வளவு ஏன் பிற என்ற சொல்லே பிரமன் பிராமண ஆயிற்று.பிறமன் என்பவன் என்பவன் முதலில் பிறந்தவன்."பிரமிப்பு.. பெரிய தன்மையால் பிரமிப்பு..என்ற சொல்லும் "ப்ராமண"ஆகியிருக்கலாம்.பிறள் என்ற தமிழ்ச்சொல் ஒரு பெரிய தடம்புரளும் மாற்றத்தைக்குறிக்கும்.எனவெ "பிறள்வமே" பிரளயமாகி அதிலிருந்து முதலில் எல்லாம் தோன்றியது என்ற கருத்து தோன்றலாயிற்று.எனவே "பிறமன் அல்லது பிறமணன் எனும் தமிழ்ச்சொல் வழியில் இங்கு எல்லோருமே "பிறமனர்கள்" அல்லது "பிராமணர்கள்" தான்.

======================================================================ருத்ரா

மார்ச் 5, 2014 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக