சனி, 26 நவம்பர், 2016

விடியல்


SDC11901.JPG

விடியல்
========================================ருத்ரா.இ .பரமசிவன்

சுவரில் மாட்டி வைத்த படமாய்
அப்படியே இருக்கிறது.
எங்கள் விடியல் என்னும்
சுதந்திரம்.
தனியொருவனுக்கு உணவில்லையெனில்.
..................
அதற்குமேல்
பாரதி பாடியதை பாடினாலும் கூட
குதிப்பார்கள்
"தேசபக்தி இல்லையென்று"
இந்த தேசபக்தியை குத்தகை
எடுத்துக்கொண்டவர்கள்.
ராமனைக் காட்டி நாட்டை  ஆண்டார்கள்.
அவனோ
ஒரு சலவைத்தொழிலாளி
கேட்ட கேள்வியில் மடங்கிப்போனான்.
அனுமனைக்காட்டி மிரட்டினார்கள்
அவனோ
ஒரு வடைமாலைக்குள் அடக்கம்
வேதத்தைக்காட்டி
நான்கு வர்ண அமைப்பில்
கல்வித்திட்டம் வகுத்துக்காட்டினார்.
மானுட நேயம் கொண்ட மக்கள்
மனு தர்ம சுரண்டலை
தவிடு பொடியாக்க
அலைகள் போல பொங்கினார்.
அந்த விடியல் படம்
இன்னும் படமாக இருப்பதா?
இந்த கேள்வியே
நெருப்பின் சூரியன் ஆகியது,
இபோது அது
"புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி"
மக்கள் மனதில் நல்ல மலர்ச்சி தரும்
பாரதியின் பாட்டு ஆனது!
எவனும் இந்த பாட்டுக்கு பூட்டு போடமுடியாது .
எரிமலை மையை தொட்டு எழுதியது இது?
இந்த மை
ஓட்டு"மை " இல்லை.
நோட்டு"மை " இல்லை.
மக்கள் ஒற்று "மை "யில்
அந்த உண் "மை"யில்
எழுத்தியது.
இந்த எழுச்சியே இனி நம்
கனற் பள்ளியெழுச்சி!

=========================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக