வியாழன், 17 நவம்பர், 2016

"மெல்லிசை" என்னும் "புரியாத புதிர்"

"மெல்லிசை" என்னும் "புரியாத புதிர்"
==================================================ருத்ரா
விஜய சேதுபதியின் மாஸ்டர்பீஸ்?


ஒன்றை ஒன்று
மிஞ்சும் மாஸ்டர்பீஸ்கள் தருவதே
விஜயசேதுபதியின் ஸ்டைல்.
நடிப்பு சினிமா வசனம் முகபாவனைகள்
உணர்ச்சிப்பிழியல்கள்
தனியாக மிதுங்கி வழியும்
காதல் காட்சிகள்
பாடல்கள் இசை வருடல்களுடன்
இவையெல்லா வற்றையும்
தனித்தனியாக செதுக்குவதே
நடிப்பின் இலக்கணம்
என்பதை உடைத்துப்போட்டுவிட்டார்
விஜய் சேதுபதி.
நம் அருகே நடப்பது போல்
அல்லது நாமே அதில்
உள்ளிழுக்கப்பட்டு விடுவது போல்
சாதாரண ஒரு மனிதன்
தன் உறுத்தும் கண்கள் மூலம்
தன் ஆழம் நிறைந்த மௌனத்தினாலும்
விண்ணையே கிழிக்கும் குரலாலும்
அப்போது தான் நாம் பேசி
அயர்ந்து நிற்பது போலவும்
ஆன நிகழ்வுகள்
அரிதாரங்களால்
எச்சில் படாமல்
எல்லாமே
நம் வாழ்க்கையின் துண்டுப்படலங்கள் போல்
இயற்கையாய் போய்விட்டதை
நம்மிடையே ஒரு சூட்டில்
வாட்டி வதக்கித்தரும்
அற்புத உயிர்ப்பு தான் அவர் நடிப்பு.
புரியாத புதிர்
படத்தின் பதினாலு ஸ்டில்களைப்
பார்த்ததில்
நான் கண்ட நெகிழ்வு இது.
புல்லாக்குழல்களுடன் கதாநாயகி.
பியானோவில் அவர்.
பிடில்களின் வில்கள்
அம்பு மழையென விரைய‌
நடுவே கையைக்கட்டி அவர் அமர்ந்திருந்தது.
ஏதோ ரத்தவிளாறுகளில்
அவர் ஒரு பரபரப்பை திகிலுடன் குழைத்துக்கொண்டு
செயல் படுவது.
செல் ஃபோனில்
ஏதோ புயல் ஓய்ந்தது போலவும்
அல்லது அந்த புயலை எதிர்கொள்வது போலவும் ஆக‌
நகர்கின்ற காட்சிகளில் எல்லாம்
அவர் கண்களைக்கொண்டே நடித்திருக்கிறார்.
முதல் ஸ்டில்லில் கதாநாயகியுடன்
அந்த சுவரில்
பின்னே இருட்டுப்படுதாவில்
புள்ளிக்கிழிசல்கள் போல்
தூரத்து விளக்குகளுடன்
மெய்மறந்து உட்கார்ந்திருந்த காட்சி
நாம் ஏதோ ஒரு பனி இரவில்
அங்குலம் அங்குலமாய் படர்ந்து கிடந்தது போல்
ஏற்ப்பட்ட உணர்வை காட்டியது.
படத்தில் கதையின் கூர்மை
முழுதும் அவர் விழிகளில்
முட்டி நிற்கிறது.
படம் பார்த்து விஜயசேதுபதி எனும்
கலைடோஸ்கோப்பு காட்சிகளின்
கசிவுகளில் நாம் கரைந்து போகலாம்.

==========================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக