வெள்ளி, 11 நவம்பர், 2016

2.0 க்குள் "ரஜனி"

2.0 க்குள் "ரஜனி"
============================ருத்ரா

இது எந்திரனின்
இரண்டாவது வெர்ஷன்.
ரஜனி அவர்களே
முதல் படைப்பில் அந்த‌
நரம்பு புடைப்பும்
முகம் துடிக்காமால் துடித்து
உணர்ச்சிகளை முறுக்கேற்றும்
நடிப்பும் அற்புதம்.
இடையில்
டாக்டர் அம்பேத்கார் அவர்களின்
நிழலை
ஒரு வரலாற்றன் மின்னல் தருணங்களோடு
மார்ஃப் செய்த காட்சியாக்கி
களிக்க வைத்தீர்கள்.
இரும்பிலே இதயம் செய்து வந்த‌
புதிய மனிதன்
எந்திரத்தனமாய் ஒரு புன்னகை பூக்கும்போது
காதலின் புயலை மெல்லிய‌
அருகம்புல்லாய் படரவிட்ட‌
அந்த நடிப்பின்
முத்தான வியர்வைத்துளிகள்
புதிய படைப்பில்
ஒரு சுநாமியாய் சீறி வரும்
என்று
நாங்கள் காத்திருக்கிறோம்.
திரைக்கு வெளியே ஆட்சி எந்திரத்தின்
தவறுகள் சிலவற்றின்
நமைச்சல்கள் தாங்க்காமல் தான்
திரையின் எந்திரன் ஆன‌
உன்னிடம் வந்து
முதுகு சொறிந்து கொள்கிறோம்.
ரசிகர்களின் எந்திரனே
உனக்குள்
அந்த அரசியல் பாஸ்வர்டை
விரல் பதித்துவந்து
இங்கே எப்போது விந்தைகள்
புரியப்போகிறாய்.?
இங்கேயும்
வில்லன்கள் ஒரே மாதிரி தான்.
சண்டைகள் ஒரே மாதிரி தான்
மக்களும் ஒரே மாதிரி தான்
சுற்றி நின்று வெடிக்கை பார்க்கும்
கும்பல்களாய் கும்மாளம் போடுவதில்.
இனி உனது அடுத்த படைப்பு
"விடியல்"
ஆனால் படப்பிடிப்புகளால் அல்ல!
உன் மீது எங்கள்
ஓட்டுக்குவிப்புகளால்.
ரசிகர்களின் இதயத்துள்
எப்போதும் உயிர்ப்புடன்
ஓடிக்கொண்டிருக்கும் சினிமா இது.

=======================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக