வெள்ளி, 4 நவம்பர், 2016

பாரதிராஜா படங்களின் குறும்பாக்கள்

பாரதிராஜா படங்களின் குறும்பாக்கள்
===============================================ருத்ரா இ பரமசிவன்

(1) பாரதி ராஜா
என் இனிய தமிழ் மக்களே என்று
இரு கை கூப்பி நம்
இதயங்களை கொள்ளையடித்தவர்.
___________________________________________

(2) பதினாறு வயதினிலே
கமல்
கோவணம் கட்டி ..நடிப்பின்
கோபுரம் ஏறிவிட்டார்.
______________________________________________

(3) கிழக்கே போகும் ரயில்

பாஞ்சாலி என்ற ஒரு பச்சபுள்ளே
பாவாடை தாவணியிலே
சோழி குலுக்கி சிரிச்ச படம்ல !
_________________________________________________

(4)  நிறம் மாறாத பூக்கள்
"ஆயிரம் மலர்களே.."அப்பப்ப!
அந்தப்பாட்டு இதயம் கசக்கி
இன்னமும் தேன் பிழியுதே!

_______________________________________________

(5) சிவப்பு ரோஜா
மண்ணைப்பிளந்து நீட்டும் அந்தக்கை!
திகிலில் உறைந்தோம்!
நமக்கு கிடைத்த ஹிட்ச்காக் அவர்.

_________________________________________________
(6) புதுமைப்பெண்
கைக்கட்டிக் கிடந்த‌
பெண்ணியத்தின் குங்குமம் எல்லாம்
எரிமலைத் தீ !
______________________________________________
(7) நிழல்கள்
மனிதன் பூதம் காட்டினான்
சமுதாயத்தில்
பல் வேறு நிழல்களில்.
_______________________________________________
(8) மண் வாசனை
ரத்தம் சொட்ட சொட்ட‌
அரிவாளில் கிராம இதயங்களின்
முரட்டு வாசனை.
_____________________________________________
(9) புதிய வார்ப்புகள்
"இதயமும்" "குங்குமமும்"
மாற்றிக்கொண்ட போது
நாதஸ்வரக்குழாய் வழியே ரத்தம்!
_____________________________________________
(10)  கருத்தம்மா
பெண் எனும் தாமரைப்பூ
நிற்பதோ
கள்ளிப்பால் குளம் !
______________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக