ஞாயிறு, 20 நவம்பர், 2016

2.0 = நூறு ரஜனி


2.0 = நூறு ரஜனி
==========================================ருத்ரா

மும்பையில்
2.0 அறிமுகக்காட்சியே
ஆயிரம் வியப்புகளை
அலை விரிக்க வைத்துள்ளது.
தேவர் மகனில்
கமலும் நாசரும்
கர் புர் என்று
முகத்தோடு முகம்
சீறிக்கொள்வது போல்
புகைப்பட ஸ்டில்கள்.
ஹாலிவுட்டில்
வரும் படங்கள் எல்லாம்
நண்டுவாய்க்கிளிகள்
பூரான்கள்
முதலை சிங்கம் பன்றி
ட்ரேகான் என்று
எல்லாமிருகங்களையும்
ரப்பர் வார்ப்பில்
ஒரே கோரைப்பல் வரிசையில்
பயங்கர திகில் மூட்டி
க்ராஃபிக்ஸில்
வயிற்றையே கலக்கும் இடிச்சத்த‌
இசைகளுடன்
படங்களை எடுத்துத்தள்ளுவார்கள்.
ஆயினும்
படத்துக்கு படம்
தரமும்
உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.
சங்கர்.. ரஜனி..அக்ஷய்குமார்
கூட்டணியும் அப்படியொரு
"புயல் வசூலை" கிளப்பப்போகிறது
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நான் ஒரு தடவை சொன்னால்
நூறு தடவை சொன்ன மாதிரி"
என்ற புகழ்பெற்ற‌
வாக்கியங்களின் சொந்தக்காரர் ரஜனி!
அவர் சொல்கிறார்
"அக்ஷய் குமார் தான் இப்படத்தின்
நாயகன் என்று"
பெருந்தன்மையின் உச்சி மேல் பல உச்சிகளை
அடுக்கிய இமயமாய்
தோன்றுகிறார் ரஜனி!
அதனால் தான்
மேலே அந்த தலைப்பு.
===============================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக