வெள்ளி, 18 நவம்பர், 2016

சிரிப்பு என்றொரு தேசம் (4)சிரிப்பு என்றொரு தேசம் (4)
=====================================ருத்ரா இ பரமசிவன்
_________________________________________________________

ஒரு அரசியல் தலைவர்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
மக்கள் வசதிக்காக ஒவ்வொரு பாங்க் பக்கத்திலும்
ஒரு "ப்ளாக் பாங்க்"  திறந்து வைப்போம்.

________________________________________________________

ஒரு எம்பி மற்றொருவரிடம்

"ஏன் பார்லிமெண்ட்டுக்குள் "ரேடியோ" போல செட்டிங் செய்திருக்கிறார்கள்?"

"பிரதமர் ரேடியோவில் பேசி பேசி பார்லிமெண்டில் பேச வரமாட்டேங்குதாம்.
அதனால் தான் இந்த ஏற்பாடு."

______________________________________________________________________

"மறு இடைதேர்தல்ல ஓட்டு போட தயாராகுங்கள்"

"என்ன இன்னொரு "இடைத் தேர்தலா?"

"அதெல்லாம் இல்லீங்க மூணு தொகுதியில ரெண்டுல தான் இடைத்தேர்தல்.
இன்னொன்றில் மறு தேர்தல்.எல்லாம் சேர்த்து "மறு இடைத்தேர்தல்"னு தானே சொல்லணும்!

________________________________________________________________________

"நிறைய பூத்துகள்ள செல்லாத ஓட்டுகள் விழுந்திருக்காமே"

"ஆமாம்."பட்டுவாடா"வை அவசர அவசரமாய் முந்தியே குடுத்துட்டாங்களாம்.அவ்வளவும் செல்லாத நோட்டுகளாம்"

_________________________________________________________________________


பாங்கு ஊழியர்:‍‍‍ (மந்திரவாதி வாடிக்கையாளரிடம்)

"என்னய்யா?வெத்திலையை நீட்டுறீங்க!"

"ஆமாங்க! மை வைக்கிறதுக்கு விரல்லாம் நீட்ட மாட்டோங்க.
வேணும்னா இந்த வெத்திலையில மை தடவினா என் பூர்வீகமே உங்களுக்கு தெரியுங்க!


_____________________________________________________________________கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக