ஞாயிறு, 20 நவம்பர், 2016

முதியோர் இல்லங்கள்

    அமெரிக்காவில் அரிஸோனாவில் உள்ள ஒரு மியூ சியத்தில் உள்ள சிற்பம்முதியோர் இல்லங்கள்
==========================================ருத்ரா இ பரமசிவன்

முதியோர்  இல்லங்கள்
இல்லை அவை.
மகாபாரதத்தில்
குருஷேத்திர ஆறு
ஓடி முடிந்த தடம் அது.
கனவு முறிந்த மனங்கள்.
ஆசையின் "சரங்கள்"
துளைத்த ஆன்மாக்கள்.
வாழ்க்கையின் கனமான‌
கதாயுதங்களால்
எலும்பு முறிக்கப்பட்ட குவியல்கள்.
அந்த எலும்புக்கூடுகளிடையேயும்
பசுமை நினைவுளின் ஃபாசில்களில்
உறைந்து கிடக்கும்
காலத்தின் ஈரமற்ற சுவடுகள்.
"பாஸ்ட் டென்ஸ்" மட்டுமே
பதிப்பிக்கப்பட்ட‌
வாழ்க்கை அகராதிகள்.
முதுமை பருவம் எனும்
"முற்றும்" போடப்பட்ட
வாழ்க்கைநாவல்களின்
தோள்களிலும்
அகலாத அரூபமான
சிந்துபாத் கிழவர்கள்.

என்றெல்லாம்
சிதறிக்கிடக்கும் ஓர்
அபூர்வத்தீவு இது.
மனித ஆத்மாவின் "3டி" படம்
இங்கு மட்டுமே ஓடுகிறது.

=======================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக