நாய்க்குடைகள்
==========================================ருத்ரா
(சினிமா உலகம்)
பாகுபலி கதை எழுதிய பேனாவாம்.
வசூல் படங்களை குவிக்க வைத்த பேனாவாம்.
அந்த பேனாவுக்கே ஒரு கோடி சம்பளம்
பேனாவுக்கும்அடியில் அது எத்தனை கோடி
நமக்கு தெரியாது?
விஜய் அட்லீ கூட்டணி...
"தெறி"யைபோல கலக்கபோகிறதாம்.
வாழ்த்துக்கள்!
எப்படி இருந்தாலும்
அந்த ராட்சத காமிராவைச்சுற்றி
எத்தனை எறும்புகள் வியர்வையில் மூழ்கி
திளைத்து வாழ்கின்றனவோ?
அவை வாழட்டும்.
என்ன நிழல் உலகமடா இது?
புதுமைப்பித்தன், வி.ஸ காண்டேகர்
வைக்கம் பஷீர்,தகழி,ஜெயகாந்தன்
இன்னும் எத்தனையோ பேர்கள்
எழுத்துக்குள் ஊனை உருக்கி
உயிரைப்பெய்து படைத்திருக்கிறார்கள் !
இவர்கள் எழுத்துக்கள்
இலக்கிய உலகில்
அம்பாரமாய் குவிந்த வைரங்கள்
என்கிறார்கள்..
ஆனால் அவை யாவுமே வெறும்
வறுமைச்சுரங்கங்கள் தான்!
ஆனால் சினிமாவின்
ஒட்டுத்துணிக்கந்தல் கதைகளில்
உள்ளுக்குள்ளே
சில அபினி உருண்டைகளை
கொளுத்திய ஒரு புகைமூட்டத்தில்
போய் உட்கார்ந்து
பேயின் ஆவி பிடித்துக்கொண்டு
அலையும் ரசிகர்கள்
முதல் நாளே ஒண்ணுக்கு பத்தாய்
விலை கொடுத்து வாங்கி
சினிமா எனும் ஒளி நிழலை
வடித்துக்காய்ச்சிய சாராயத்தில்
காட்சிப்போதையேற்றிக்கொள்ளும் வரை
இந்த "வறுமைக்கோட்டு"காட்டு மழையில்
இந்த கோடிகளின் நாய்க்குடைகள்
முளைத்துக்கொண்டு தான் இருக்கும்!
வெண்கொற்றக்குடை பிடிக்க வந்த
ஜனநாயகமும்
இந்த காளான் குடைகளில்
வெறும் கருப்புக்காகித குப்பைகளைதான்
இத்தனை காலமும்
அசுர செல்வங்களாய்
குவித்து வைத்து உருக்குலைந்து போயின!
=================================================
http://cinema.dinamalar.com/hindi-news/53224/cinema/Bollywood/Vijay---Atlee-film-confirmed.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக