சனி, 12 நவம்பர், 2016

சிரிப்புக்கு ஏது பஞ்சம்


சிரிப்புக்கு ஏது பஞ்சம்
===== =====================================ருத்ரா



கை நெறைய பொட்டுக்கடலை
வாங்கினேன்
சாக்கு நெறைய நோட்டைக்
கொடுத்து.

நாளைய பாரதம்

_____________________________________________________


நேத்து அவங்க விரட்டி விரட்டி
வந்து செஞ்சாங்க பட்டுவாடா!
இன்றைக்கு நாம‌
விரட்டி விரட்டி வங்கிக்குப்போறோம்
பணப்பட்டு வாடாவுக்கு.

பணம் பத்தும் செய்யும்

________________________________________________________


அந்த பாங்கு எங்கே இருக்கு.

இதோ பக்கத்திலே நிக்காறே
இவர்ட்ட கேளுங்க.

பக்கதுல தான்.
நான் ஐனூற்றேட்டாவதா
இந்த கியூவிலே தான்
இருக்கேன்.

பணம் கூப்பிடு தூரம்

___________________________________________________________


ரேடியோவிலே
மோடி என்ன பேசறாரு?
நேத்து வரை
மனம் கி பாத்.
இன்னேலேருந்து
"பணம்" கி பாத்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________________________


அருண் ஜேட்லி என்ன பேசறாரு?

பொருளாதாராம் பேசராறாராம்.

அது எந்த ஸ்டேட்டு பாஷை?

_________________________________________________________

என்ன சாப்பாட்டு எலெயிலே
தங்கக்காசுலே "பொரியலா"?

ஆமாய்யா ஆமா
ஐநூறு கோடியிலெ கல்யாணம்
________________________________________________________

கறுப்புப்பணம்னா என்னய்யா?

அதான் கறுப்பு சூட்கேஸுல‌
கொண்டு போயி
கொடுங்கிறாங்கள்ள‌
அதான்..

______________________________________________________

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஆழமான கருத்து.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றி திரு.மணியன் அவர்களே

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக