செவ்வாய், 22 நவம்பர், 2016

அம்மா என்றொரு கோவில்.





























அமெரிக்கா அரிஸோனாவில் இந்திய தொல் பழங்குடிகள் மியூசியத்தில்
ஒரு சிற்பத்தின் புகைப்படம் இது.





அம்மா என்றொரு கோவில்
=======================================ருத்ரா இ.பரமசிவன்

அம்மா என்றொரு கோவில்
கற்கள் அடுக்கியது அல்ல.
வெறும் சொற்கள் அடுக்கியதும் அல்ல.
தன் ஆன்மாவின் நிழலை
இன்னொரு இன்ப நிழலாக்கி
கருவறை வைத்து
காலம் என்றொரு பெரும்பிழம்பை 
உருட்டித்திரட்டி தந்தவள் அவள்.
அதன் கண் காது மூக்கு முகம் எல்லாம்
தன் பிம்பம் என்னும்
அன்பின் உயிர்ப்பூச்சை
முலாம் பூசித்தந்த மூகாம்பிகையே அவள்.
அடுப்புக்கு ஊதும் குழலைக்கூட‌
என் அமுத மூச்ச்சின்
வேய்ங்குழல் ஆக்குவாள்.
மூச்சுத்திணறி திணறி என்
முச்சுகள் செதுக்குவாள்.
அவள் பசியிலும் நான்.
அவள் இரைப்பையிலும் நான்.
குழம்பின் அகப்பையிலும் நான்.
குழம்பும் மன அகப்பையிலும்
குமிழியிடும் கனவுகளாய் நான்.
மண்ணில் விழுந்தபோதும் அவள்
விண்ணே நான்.
விடிகின்ற நட்சத்திரப்பூவும் நான்.
நான் வயிற்றில் இருந்தபோது
கோயிலில் ஒரு நாள்
"படைத்தவனை" நோக்கி கும்பிட்டாள்.
அவளுக்குத்தெரியாது
படைக்கும் அவளை அவள் அறியாமல்
படைத்தவனே அங்கு கும்பிட்டது!

===============================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக