கம்பராமாயண குறும்பாக்கள்
=========================================ருத்ரா
தசரதன்
கைகேயிக்கு வரம் கொடுத்தான்.
வால்மீகி அதை
லட்சம் வரிகள் ஆக்கினான்
கைகேயி
அவன் செருப்பை சுமப்பதற்கா?
இவனை
வயிற்றில் சுமந்தேன்
பரதன்
தரம் இல்லாமல் கேட்ட வரம்.
தரம் தெரியாமல் கொடுத்த வரம்.
எனக்கு வேண்டாம் இது.
ராமன்
எனக்கு மட்டும் ஒரு தலை.
ராவணனுக்கு மட்டும் பத்து தலை.
என்ன டைரக்டரடா இந்த வால்மீகி?
மிதிலை
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்.
"வேலன்டைன் டே" மிதிலையிலும் தான்.
கோசலை
மீண்டும் என்
ராமனைப்பெற்றெடுக்க
பதினாலு வருடக்கர்ப்பமா?
குகன்
படகு விட்டதற்கே
பட்டா கொடுத்து விட்டார்கள்
ஒரு சகோதரனாக.
சீதை
இவள் தீக்குளித்ததும்
ராமன்
சாம்பல் ஆனான்.
ராவணன்
"இன்று போய் நாளை வா".
நாற்பது செவிகளிலும்
நாராசம்
.
நாற்பது
பத்து தலையிலும்
நாலு வேதம் கேட்ட
நாற்பது செவிகள் அவை
=========================================ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக