வியாழன், 24 நவம்பர், 2016

மலைப்பாம்பு விழுங்கியபிறகு


மலைப்பாம்பு விழுங்கிய பிறகுஒரு
மலைப்பாம்பு விழுங்கியபிறகு
என்ன மிச்சம்
இங்கே இருக்கப்போகிறது.?
இந்த
வாழ்க்கையின் சுவடும்
இங்கே
அப்படித்தான் தோன்றுகிறது!
மனம் எனும் சோப்புநுரைக்குமிழி
உடைந்து போகும்
அரைக்கால் நொடிக்குள்
ஆயிரம் யுகங்களில்
அடை த்துக்கிடந்த
கண்ணீரின் ஊற்றுக்கண்ணும்
உடைந்த ஒரு பிரளயம்
பேரொலி கிளப்பி
பீறிட்டோடுகிறது..
அவ்வளவும்
இறைவன் அழுத கண்ணீரா?
ஆம்!
மனிதன் இன்னும் அழுது முடிக்கவேண்டிய
கண்ணீரை
இப்படித் தேக்கி வைக்க
இன்னும் ஒரு ஆயிரம்
இறைவன்கள் நமக்கு வேண்டும்!
"இது எப்படி இருக்கு?"
விந்தையாக இல்லை!
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
அது கண்ணீர் தான்.
கருணையை
மொழிபெயர்க்க வந்த
கடவுளின் மொழி அது மட்டுமே.
மனிதர்களிடையே கசியும் மனித நேயமே
அது!

===============================================================
ருத்ரா இ.பரமசிவன்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக