செவ்வாய், 1 நவம்பர், 2016

இடைத்தேர்தல் குறும்பாக்கள்

இடைத்தேர்தல் குறும்பாக்கள்
===============================================ருத்ரா
(1)
அம்மா
பெருவிரல் போதும்
கரன்சிகள் பொழிய.

(2)
கலைஞர்.
"திராவிடப்பொன்னாடே .."
கனவே போதும்.

(3)
வைகோ
திமுக தோற்றால் இனி
நானே "தமிழினத்தலைவன்"

(4)
திருமா
கருஞ்சிறுத்தையின் புள்ளிகள்
உதிர்ந்து போயினவா?

(5)
விஜயகாந்த்
தமிழர்களை அடி முட்டாளாக்க‌
அரிதாரம் பூசியவர்.

(6)
இடதும் வலதும்
விடியல் இன்னும் இவர்களுக்கு
மூக்குநுனி அருகே தான்.

(7)
காங்கிரஸ்

இவர்களின் பெயர் சொல்லாத‌
இந்துத்துவா வினால்
அவர்களின் இந்துத்துவா
இப்போது பூதம் ஆனது.

(8)
வாஸன்
மிகப்பிரம்மாண்டம் தான்
"ஔவையார்" படம்!

(9)
சீமான்
மாவீரன் பிரபாகரனை
இவ்வளவு மோசமாகவா
கொச்சைப்படுத்துவது?

(10)
தமிழிசை

இசையில் ஏன்
குமரி அனந்தனின் "தமிழ்" இல்லை?
==========================================

2 கருத்துகள்: