திங்கள், 14 நவம்பர், 2016

கபாலி 2

கபாலி 2
================================ருத்ரா

காமிராக்கள்
இந்த தலைப்பை
வேட்டையாடத்துவங்கி விட்டன.
ரஜினிக்கும்
இதில்
கொஞ்சம் புன்முறுவல் தான்.
இயக்குநர்கள்
தயாரிப்பாளர்கள்
என்று
கலைபட்டாளம்
இப்போதே வியூகத்தில் இருக்கிறார்கள்.
அந்த கருப்பு
இருட்டில்
துப்பாக்கி வெடித்து
கபாலி 1க்கு
போடாத முற்றுப்புள்ளியை
கபாலி 2
போட முயலலாம்.
அந்த நெருப்பு டா வில்
ஒரு "டாவின்ஸி கோடு" ஒளிந்திருக்கலாம்.
இளைய யுகமே
உங்கள் விடியல்
எல்லாம் இது வரை
சிவப்பில் டை அடித்தது போதும்.
கருப்பு வெள்ளையில்
இருட்டை தின்னத்துடிக்கும்
வெள்ளை ஒளியும்
வெள்ளை ஒளியை
விழுங்கப்பார்க்கும்
கருப்பு பிழம்பும்
தூள் கிளப்பப்போகிறது.
சாம்பல் சூரியன்கள்
முளைக்கட்டும்.
=============================
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக