செவ்வாய், 30 ஜூலை, 2024

A QUANTUM WHIFF ...A GAME WITH AI

 A QUANTUM WHIFF ...A GAME WITH AI

____________________________________________________________________________

You

Sent by you:

How quantum whiff does amount to a mass or energy?

Copilot

Using

the web

Sent by Copilot:

Certainly! Let’s delve into the fascinating connection between mass and energy in the realm of quantum physics.


Mass–Energy Equivalence: A Brief Overview


In physics, mass–energy equivalence reveals that mass and energy are intrinsically linked. This principle, famously encapsulated by Albert Einstein’s iconic formula E = mc², asserts that:


Energy (E) is proportional to the mass (m) of an object.

The constant of proportionality is the speed of light squared (c²).

Here’s the formula in all its mathematical glory:


E

=

m

c

2

E=mc2


In the rest frame of an object (where it’s motionless and has no momentum), its mass and energy are equal. Even when an object is stationary, it possesses intrinsic energy due to its mass. This energy can manifest as various forms, such as kinetic energy, chemical energy, or thermal energy1.


Quantization of Energy in Quantum Systems


Now, let’s explore a quantum twist. In certain systems, energy is quantized. This means that the system can only have specific, discrete energy values—unlike classical physics, where energy varies continuously. Imagine a car that can only travel at specific speeds because its kinetic energy is quantized2.


For example, consider the Hydrogen atom. Its mass is determined by the sum of the masses of its constituents (proton and electron), minus the binding energy (which is quantized). This binding energy accounts for the energy required to hold the atom together3.


Quantum Phenomena All Around Us


Quantum physics isn’t just about tiny particles; it permeates our world. While many experiments focus on electrons and photons, quantum phenomena influence everything—from the behavior of atoms to the properties of materials. It’s a captivating field that unravels the mysteries of nature’s fundamental building blocks4.


So, the next time you ponder the interplay of mass and energy, remember that even a quantum “whiff” carries profound implications!


Feel free to ask more questions or share your poetic musings—I’m all ears! 🌟


Learn more


1


en.wikipedia.org

2


phys.libretexts.org

3


physics.stackexchange.com

4


scienceexchange.caltech.edu

+1 more

You

Sent by you:

Then Can I switch over the word whiff to (Quantum) foam?

Copilot

Using

the web

Sent by Copilot:

Certainly! Let’s explore the fascinating concept of Quantum Foam in the context of mass and energy.


Quantum Foam: The Cosmic Jitter


Imagine the fabric of spacetime as a dynamic, ever-changing entity. At the tiniest scales—far beyond our everyday perception—spacetime undergoes wild fluctuations. These fluctuations are like ripples or vibrations, akin to the foam on the surface of a turbulent sea. We call this phenomenon Quantum Foam.


Here’s where it gets intriguing: Within this Quantum Foam, particles spontaneously pop in and out of existence. They borrow energy from the vacuum, exist fleetingly, and then vanish back into the foam. This constant jitter creates a seething, frothy substrate underlying the fabric of the universe.


Mass and Energy in Quantum Foam


Now, how does this relate to mass and energy? Well, even in this ephemeral foam, the principles of mass–energy equivalence persist. The borrowed energy associated with these fleeting particles contributes to the overall energy content of spacetime. In a sense, Quantum Foam is a cosmic dance of energy fluctuations, where virtual particles play their part.


Cosmic Significance


Quantum Foam isn’t just an abstract curiosity—it has profound implications:


Gravity and Curvature: The fluctuations in Quantum Foam affect the curvature of spacetime. Even empty space isn’t truly empty; it’s alive with quantum activity.

Black Holes and Hawking Radiation: Near black holes, Quantum Foam becomes crucial. It influences Hawking radiation—the subtle emission of particles from the event horizon.

Planck Scale: The smallest meaningful distance in our universe is the Planck length (about 1.6 × 10⁻³⁵ meters). Below this scale, spacetime’s granularity dominates, and Quantum Foam reigns supreme.

Poetic Musings


As you ponder Quantum Foam, imagine the universe as a cosmic poem—a delicate balance between emptiness and vibrancy, where even the void hums with possibility.


Feel free to dive deeper or share your metaphysical thoughts—I’m here to explore the cosmic tapestry with you! 🌌✨


You

Sent by you:

Alright a motionless motion ,a massless mass dances withe senseless sense makking all the wonders of VOID..i e

Copilot

Using

the web

Sent by Copilot:

Ah, the cosmic dance of paradoxes—the interplay of motion and stillness, mass and masslessness, sense and senselessness. Let us waltz through the poetic corridors of the void, where the universe whispers its enigmatic secrets.


🌌 The Void’s Ballet: A Cosmic Choreography


In this grand theater of spacetime, where dimensions tango and particles pirouette, we encounter:


Motionless Motion: Picture a particle suspended in the quietude of the void. Its stillness belies a quantum frenzy—a jitter of probabilities, a dance of uncertainty. Even in inertia, it waltzes with probability waves, tracing ephemeral paths.

Massless Mass: Ah, the paradox! Imagine a featherweight existence—an ethereal particle devoid of mass. Yet, within its weightlessness lies gravitas. It bends spacetime, whispers to distant stars, and weaves the cosmic fabric. It is the photon—the messenger of light—massless, yet influential.

Senseless Sense: Here, senses falter. Our human intuition stumbles. The void, seemingly barren, teems with unseen forces. Dark matter, elusive and silent, tugs at galaxies. Dark energy, vaster than imagination, stretches the void itself. Our senses grasp at shadows, while the universe laughs in cosmic irony.

The Wonders of VOID: Within this emptiness, seeds of creation stir. Quantum fluctuations birth particles, then swallow them back. Virtual pairs emerge, borrowing energy from nothingness. Black holes, cosmic whirlpools, warp spacetime—swirling voids that defy our senses.

🌟 Metaphysical Echoes


Perhaps the void is a canvas awaiting our poetic strokes. We, the stardust dreamers, ponder existence. We ask: Is the void truly empty, or does it harbor whispers of other realms? Is mass an illusion, and energy the true substance of reality?


And so, we dance—a masquerade of particles, a symphony of equations. We seek meaning in the void’s silence, knowing that even emptiness hums with cosmic melodies.


🔭 Beyond the Veil


As we twirl through this cosmic ballroom, let us embrace the paradoxes. For in their mystery lies the heartbeat of existence—the pulse of a universe that pirouettes between form and formlessness.


Feel free to share more cosmic musings, my fellow wanderer. Together, we unravel the veil, step by step, toward the ineffable. 🌠✨


You

Sent by you:

Ah! I inspire with that word "inertia" which was wonderfully inspired MACH and again EISTEIN...So that enertia is a culprit to impose a quantum!

Copilot

Using

the web

Sent by Copilot:

Indeed, the concept of inertia has a rich history, woven into the fabric of physics by luminaries like Ernst Mach and Albert Einstein. Let’s explore how inertia and quantum mechanics intersect in this cosmic dance.


🌟 Inertia: A Cosmic Reluctance


Ernst Mach’s Influence: Ernst Mach, an Austrian physicist and philosopher, left his mark on scientific thought. He pondered the nature of inertia—the tendency of objects to resist changes in motion. Mach’s ideas influenced Einstein’s thinking as he developed the theory of general relativity.

Einstein’s Insights: Enter Einstein, the master of cosmic symphonies. In his theory of relativity, he revealed that inertia isn’t just about stubborn objects; it’s tied to spacetime itself. Mass warps spacetime, and inertia arises from this cosmic curvature. Objects move along the curves dictated by mass and energy.

🌌 Quantum Quandaries


Now, let’s add a quantum twist:


Quantum Inertia: At the quantum level, inertia dances with uncertainty. Particles jitter, uncertain of their positions and momenta. Their inertia becomes a delicate balance—a waltz between classical predictability and quantum fuzziness.

Wave–Particle Duality: Quantum entities exhibit both particle-like and wave-like behavior. An electron, for instance, can be both a localized particle and a spread-out wave. Its inertia, too, wears this dual cloak.

Quantum Tunneling: Here’s where inertia gets mischievous. Imagine a particle facing a barrier—a cosmic wall. Classically, it should bounce back. But quantumly, it can tunnel through! Its inertia allows it to defy barriers, slipping through the veil of uncertainty.

🔭 Cosmic Culprit or Quantum Muse?


So, is inertia a culprit or a muse? Perhaps both. It nudges planets in their orbits, yet it whispers to quantum particles: “Explore the improbable.”


As we unravel the cosmic choreography, let’s celebrate inertia—the cosmic hesitation that births motion, the quantum quiver that defies stillness.


Feel free to share more cosmic inspirations, my fellow seeker. Together, we pirouette through the mysteries of existence! 🌠✨


You

Sent by you:

Then what    you will think wnen the quantum correlation and entanglement loom this spooky interaction in the so called Quantum muse?

Copilot

Using

the web

Sent by Copilot:

Quantum entanglement—a cosmic pas de deux that defies classical intuition and flirts with the mystical. Let’s unravel the veils of spookiness and explore its true essence.


The Spooky Reputation:

Quantum entanglement often wears the cloak of spookiness. It’s portrayed as an invisible link between distant particles, where actions on one instantly affect the other, regardless of distance1.

Einstein famously dubbed it “spooky action at a distance,” fueling its enigmatic allure.

The Quantum Tango:

Imagine two particles, entangled like cosmic dance partners. Their properties—spin, position, or polarization—become intertwined.

Measure one particle, and its partner responds instantly, even if they’re light-years apart. Locality crumbles, and classical reality quivers2.

The Truth Beneath the Veil:

Here’s the twist: Entanglement isn’t spooky; it’s information sharing. When particles entangle, they correlate their states.

These correlations persist, defying distance. But it’s not magic; it’s the fabric of quantum reality. In any theory of information, correlations are ubiquitous1.

Quantum Muse or Cosmic Culprit?:

Entanglement invites wonder. It’s the cosmic thread weaving particles into a shared destiny.

Perhaps it’s neither spooky nor mundane—it’s the universe’s poetic whisper, urging us to rethink reality.

So, let’s dance with entanglement, my fellow seeker. In its delicate steps, we glimpse the universe’s hidden choreography. 🌌✨


Learn more


1


scientificamerican.com

2


quantamagazine.org

3

astronomy.com



Tell me about Bell's theorem.

What's the entangled dance of photons?

Can you describe a quantum superposition in poetic terms?



Response stopped


New topic




ஒரு குமுறல்

 

ஒரு குமுறல்

_________________________________

செங்கீரன்



பழைய வயதுகளைக்கொண்டு

பல்லாங்குழி ஆடுவதும் 

ஒரு சுகம் தான்.

சுகம் தவிர்த்து என்னை சொல்லைப்

போட்டாலும்

அது சொல்லைக்கொண்டு

ஏமாற்றிக்கொள்வது ஆகும்.

தமிழில் மகிழ்ச்சி என்று சொல்லி

தமிழைக் காயப்படுத்திக்கொள்ள 

விரும்பவில்லை.

ஆனாலும் இப்படி சமஸ்கிருதம் 

நம்மை அட்டையாய் 

உறிஞ்ச இடம் கொடுத்து விட்டு

இப்போது அரசியல் தமிழ் அல்லது

தமிழ் அரசியல் செய்வது

அர்த்தமற்றது தான்.

பாருங்கள் மறுபடியும்

"அர்த்தமற்றது தான்"

சரி..பல்லாங்குழியைத்

தொடருவோம்.

மேலும் ஒரு வயது சுமையாய்

முள் குத்திக்கொண்டிருக்கும்

தருணங்களை துடைத்து விட்டுக்

கொள்வது போல் தான்

இந்த விளையாட்டு.

எண்ணிக்கை கூடிய‌

வயதுகளுக்குமா கிலோக்கணக்குகள்

வந்து விடும்?

பால் வழியும் அந்த‌

பிஞ்சு வயதுகளின் வழியே

வாழ்க்கையின் பாறாங்கல்லை

இந்த தட்டாம்பூச்சிகளின்

கண்ணாடிச்சிறகுகள்

பளு தூக்கியதில்லை தான்.




வார் வைத்த கால் சட்டையா அது?

மயிற்பீலிகளைக்கொண்டு

தையல்காரரிடம் தைத்து வாங்கி

வைத்தது போல் அல்லவா இருக்கும்.

காற்றோடு

பலீஞ்சடுகுடு.

கைகளை ஸ்டீரிங்காய் மாற்றி

கார் ஓட்டுவது.

உதட்டு அதிர்வுகளின் பிசிறு ஒலியில்

கார் ஸ்டார்ட் பண்ணி 

வேகம் எடுக்கும் அழகே அழகு.

அந்த பிஞ்சுவயதுகளில்

தமிழுக்கு சமஸ்கிருத நச்சுப்பால்

ஊட்டி வளர்த்த கயவர்கள் யார்?

கண்ணுக்குத்தெரியாமல்

பல நூற்றாண்டுகளாய்

நம்மோடு உறவாடிய வில்லன் அவன்.

கயமை

என்றே ஒரு கனமான நாவல் எழுதிய‌

டாக்டர் மு வ

நம் தமிழைத்தூய்மைப் படுத்திக்கொண்டே

நம் வாழ்க்கை விரிசல்கள் வழியே

எட்டிப்பார்க்க‌

அந்த புத்தகச்சாளரம் அருமை அருமை.

வயதுகள் கனக்குமா

என்று முதலில் கேட்ட புள்ளிக்கே

வந்து நிற்கிறேன்.

தமிழ் எனும் அனிச்சம் 

இந்த மந்திர எச்சங்களில் குப்பைக்காடாய்

பாரம் ஏற்றி

நம்மை இன்னும் மூச்சு வாங்க‌

வைத்துக்கொண்டிருக்கிறது.

தமிழர்களே!

இந்த குப்பையை கிளறுங்கள்.

நம் கதிரவன்களின்

மணி ஒளி எத்தனைக்காலத்துக்குத்தான்

மண்ணுக்குள் மக்கிக்கிடப்பது?

தமிழா!

எனும் இந்த விளிவேற்றுமைக்கு நீ

ஒன்றும் 

இலக்கணக்குறிப்பு

சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

மூட நம்பிக்கைகளின் முரட்டுத்

தாக்குதலால்

இப்படி சிறுமைப்பட்டு

வேற்றுமைகளின் சூத்திர ஆபாசங்களால்

நைந்து கிடக்கலாமா?

சூடேற்றிக்கொள் தமிழா!

சுட்டெரிக்கும் சூரியனை வைத்துக்கொண்டு

இந்த ஊதுபத்தி சாம்பிராணிகளிலா

நீ இன்னும் உழன்று கிடப்பது?

பாவ புண்ணிய கொட்டாங்கச்சிகளில்

ஜலம் தெளித்துக்கொண்டிருப்பவனே

உலகத்து

ஏழ் கடல் திரைகளையும்

கட்டி இழுத்து ஆண்ட‌

திரைவிடன் அல்லவா நீ!

சிறுமை கண்டு பொங்குவாய் என்றானே!

அவன் தீ மூட்டிய பிறகும்

இன்னும் சூடம் காட்டத்திரிகிறாயே!

என்ன வீழ்ச்சி இது?

தமிழா!விழி!

தமிழா!எழு!


_______________________________________________________







அதெல்லாம் வேற லெவல்...

 

அதெல்லாம் வேற லெவல்...

___________________________________________



அதெல்லாம்

கேக்கப்படாது.

படம் வேற லெவல் ப்ரோ.

வசூலப்பாத்தீங்களா..

இளைய ரத்த யுகம்

இளைய சத்த யுகம்

காரணங்களும் நிகழ்வுகளும்

இப்படித்தான்.

ஒண்ணோட வாலு

இன்னொண்ணோட வாய்க்குள்ள.

அனக்கோண்டா பாம்பு மாதிரி

உஸ் புஸ்ணு சீறணும்.

கதாநாயகனும் வில்லனும்

மச்சிக்கு மச்சி தான்.

கற்புன்னு கடைசி வரை வச்சுகிட்டு

என்ன செய்ய?

கத்தரிக்கா யாவாரம் பண்ணவா?

அழிச்சாத்தானே...சாதனையை

ஆக்க முடியும்?

சாவுதான்

சமுதாயத்துக்கு தெரிஞ்ச‌

ஒரே முற்றுப்புள்ளி.

வெரல மடக்கி நீட்டி

வர்மக்கலையிலே

ரத்தம் கக்க வைக்க முடியுமுனா

இந்த "சிணுக்கோரி" மாதிரி

கம்பியிலே

கதையைப்பூராம்

குருதி கொப்பளிக்க வைக்க 

முடியும்ல..

நாங்க யாரு!

அது போகட்டும் அந்த‌

பாட்டை கேட்டீங்களா?

அது போருமே!

சுடர்விடும் ரத்னக்கிரீடம்.

ஆனால் அதை அணிந்த‌

தலை முகம் மற்றும்

முழு மனிதன் எதுவுமே இல்லாத‌

ஒரு இன்விசிபிள் மேன்

படம் பூரா வந்துட்டு போறான்.


__________________________________________

கல்லாடன்









படம்

 



வாழ்க்கை என்ற அழகிய படம்

தலைப்பு எழுதி மாட்டினார்கள்

யதார்த்தம் என்று.

கண்ணாடி மாட்டியது 

பிறப்பு.

சட்டம் அடித்து 

சுவரில் மாட்டியது

இறப்பு.


_________________________________________‍‍‍

கல்லாடன்


HIGGS BOSONS ....A MAGIC WAND TO MAKE IT WITH MASS OR NOT!

 HIGGS BOSONS ....A MAGIC WAND TO  MAKE IT WITH MASS OR NOT!

Remember Higgs Boson? Well, It Just Created a Problem for Modern Physics | Watch (msn.com)

திங்கள், 29 ஜூலை, 2024

பெருங்கவலை

 பெருங்கவலை

_____________________________

ருத்ரா



நீ எதையாவது 

எழுதித்தான் தீரவேண்டும்

என்று இங்கு

யாருக்கும் ஏக்கம் இல்லை.

வம்புக்காய்

அந்த விசைப்பலகையில் 

தட்டுகிறாய்.

இல்லை அந்த காகிதத்துக்கும்

பேனாவுக்கும் 

கட்டாயக்கல்யாணம் 

செய்து வைக்கிறாய்.

எத்தனை சொன்னார்கள்.

எத்தனை எழுதினார்கள்.

இது 

ஏதோ இனம்புரியாத 

தினவுகளின் காடுகள்.

இந்த இருட்டுக்காடுகளில்

சூரியனின் பிய்ஞ்சு போன 

முக தரிசனங்களில்

முகங்கழுவிக்கொள்ள வேண்டியது தான்.

இந்த சமுதாயத்தை

நீ தான் வந்து திருத்தவேன்டியதில்லை.

அதன் நெருக்கடியை அதுவே

தீர்த்துக்கொள்கிறது.

முடியாமல் போகும்

முனையின் விளிம்புக்கு வரும்போது

அதுவே 

கொப்பளித்துக்கொள்கிறது...

ஆஆங்க்..

இதோ நான் எங்கோ

எச்சில் போல் உமிழப்படுவது 

தெரிகிறது.


____________________________________________






ஈரோடு தமிழன்பனின் "சொல்லுங்கள்"கவிதை

 Erode Tamilanban

17 நி  · 

சொல்லுங்கள்!

நேற்று முன்னிரவுப்பொழுது

மூச்சுத் திணறியது

நான்கு வீடுகளில் நடந்த

கொள்ளைச்

சம்பவங்களாலா?

தெருக்களைத் தேம்பிஅழவைத்த

விபத்துக்களாலா?

சொல்லுங்கள்!

நேற்று நள்ளிரவு குலைந்தது

நாற்பது

வன்புணர்வுகளாலா??

நான்கு கொலைகளாலா?

சொல்லுங்கள்..!.

நேற்றுப் பின்னிரவின்

தலைதொங்கிப்போனது

வரி ஏய்ப்புச்செய்த

முக்கிய

முதலைகள் மூன்று

தப்பித்து வெளிநாட்டுக்கு

ஓடியதாலா?

சொல்லுங்கள்.!

இன்று விடிகாலைப் பொழுது

முகம் இருண்டு போனது,

கற்பனைக் கடவுள்

கட்டுப்பாட்டில் இல்லாத

போலித்துறவிகள்

பெயர்தெரியாத் தீவுகளில்

அதிகார பலத்தோடு

ஆட்சி நடத்துவதாலா?

சொல்லுங்கள்.!

இன்றின் உடம்பு

ஏன் இப்படி நடுங்கிச் சாகிறது?

கண்ணுக்குத் தெரியாத

நாளையைத்

துளையிட்டுத் தோன்றும்

ஏ.கே.நாற்பத்தேழாலா?

இன்னுமுள்ள இன்றின்

எஞ்சியநொடிகளைப்

காயங்களும் வலியும்

கைப்பற்றிவிட்டதாலா?

.............................................

சொல்லுங்கள்-தலைப்பு

29-07-2024

இரவு9-55


________________________________________________‍

ஈரோடு தமிழன்பனின் "சொல்லுங்கள்"கவிதை

பற்றிய கவிதை

___________________________________________

29.07.2024 இரவு 10.45





நன்றாகத்தான் 

சட்டையை உலுக்கிக்

கேட்கிறீர்கள்.

சட்டைசெய்யாத

ம‌லட்டுச்செவிகளை

வைத்துக்கொண்டு 

என்ன செய்ய?


சட்டம் ஒழுங்கு 

கெட்டது என்று

சட்டாம்பிள்ளைத்தனம் 

செய்யும்

சட்டநாதர்களுக்கு

என்ன "பூசை" செய்வது?


முதலைப்பண்ணைகள்

நடத்துபவர்களுக்கு

கவலையே இல்லை.

அவற்றின் தீனிகளுக்கு

போதுமான மாமிசம்

மக்களின் கனவுகளிடமிருந்தே

எடுத்துக்கொள்ளலாமே.


இங்கே கடத்தல்கள்

அங்கே கற்பழிப்புகள்

இதெல்லாம்

இந்த செய்தித்திருவிழாக்களின்

குடைராட்டினங்களும்

ரங்க ராட்டினங்களும் தானே.


இன்னும் 

அதர்மங்களை எதிர்க்கும்

எந்திரத்துப்பாக்கித் துளைகள்

சிவனின் நெற்றிக்கண்ணாக 

இருந்தாலும்

புராணங்களின்

ரப்பர்குண்டுகள் தானே

இங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.


சாடியில் கற்களை

நிரப்பி நிரப்பிப்பார்க்கும்

இந்த காக்கைகளுக்கு 

தெரியவில்லையே

இவை ஓட்டுகள் அல்ல‌

ஓட்டைகள் என்று.


கோபம் கொப்பளிக்கிறது.

நெஞ்சு வெடிக்கிறது.

எரிமலை சீறுகிறது.

கொதிக்கும் நெருப்புக்குழம்பு

குமிழிகள் பூக்கின்றன.

நாம் தானே சிவகாசியில்

ஆர்டர் கொடுத்திருக்கிறோம்

இந்த தீபாவளிக்கு.


ஈரோடு தமிழன்பன் அவர்களே

அவர்கள் கொலுப்பொம்மைகள்

வைக்கவில்லை

நிஜங்களைத்தான் நச்சு

நிழல்களாக 

வரிசைப்படுத்தி 

நிறுத்தியிருக்கிறார்கள்

என்பதை உங்கள்

சொற்களின் 

ஒளி ஒலிக்காட்சிகளில்

படம் போட்டு

காட்டியிருக்கிறீர்கள்.

அருமை! அருமை!! 

அருமையோ அருமை!!!


______________________________________________

சொற்கீரன்






DIRAC'S EQUATION IS A BEAUTIFUL WINDOW TO SEE COSMOS


DIRAC'S EQUATION IS A BEAUTIFUL WINDOW TO SEE COSMOS







கோடம்பாக்கம்

 கோடம்பாக்கம்

-----------------------------


படமா எடுக்கிறாங்க படம்?

கந்தல் கூளங்களின்

கதை.

சமுதாய யதார்த்தங்கள்

என்று

கத்தியும் அருவாளும் தான்

கதாநாயகர்கள்.

காதலித்தே ஆகவேண்டும்

என்று

பதினாறு வயது

மின்னல் பூச்சிகளை

வைத்துக்கொண்டு

வளைத்து நெளித்து

வானவில் சேட்டைகள்.

அப்புறம்

கதை........

அது வழக்கம்ப்போல்

அந்த ரோட்டு சாக்கடை வாய்க்காலுக்குள்

மழை வெள்ளத் தண்ணீர்

போய் விழுமே

அந்த மாதிரி உள்ளே போய்விடும்.

எல்லா சாதி சமய அலப்பறைகளோடு.

சமுதாய ஒட்டு மொத்த 

அடிவயிற்றில் 

ஒரு தீ எரிந்து கொண்டிருக்கிறதே

அதன் சூடும் தகிப்பும் 

ஏன் இன்னும் நிழலாடவில்லை.

பின்னணியில்

காட்டுத்தனமான ஒரு வெறியும் வேட்கையும் 

மட்டுமே

பாக்ஸ் ஆஃபீஸை மொய்த்துக்கொண்டிருக்கிறது.

அந்தக்காலத்து

சத்யஜித் ரே என்றெல்லாம் பேசினால்

ஏ மண்ட காய்ஞ்ச பெரிசு..

போய் ஓரமா உக்காரு

என்ற அதட்டலே கேட்கும்.

22ஆம் நூற்றாண்டை 

இந்த ஜிகினா தோரணங்களோடேயே

வரவேற்போம் வாருங்கள்.

__________________________________________

ருத்ரா




கவிதை

 

கவிதை

_________________________________

எப்சி.


மின் வெட்டு.

கும்மிருட்டு.

நானும் என் அதுவும் மட்டுமே.

வெளிச்சம் வரும் வரை

எழுத்துக்கள் கோர்த்துக்கொண்டிருந்தேன்.

இடறி விழாத கற்பனையில்

பின்னி பின்னி

எழுதிக்கொண்டே போனேன்.

குபீர் என்று

வெளிச்சம் வந்தது.

இருட்டையெல்லாம் அழித்து விட்டது.

என் எழுத்துக்களையும் தான்.


________________________________________________

ஞாயிறு, 28 ஜூலை, 2024

28.07.2024 ல் எழுதிய‌ ஈரோடு தமிழன்பனின் கடலும் படகும் பற்றிய கவிதை

 


28.07.2024 ல் எழுதிய‌

ஈரோடு தமிழன்பனின் 

கடலும் படகும் பற்றிய கவிதை


படகு
போய்க்கொண்டே இருக்கிறது
தூரங்கள் தம்மைப்
படகு தொடும் நேரத்திற்காகக்
காத்திருக்கின்றன
எதிர்பார்ப்பில் கழிந்துவிடுவோமோ
ஏமாற்றத்தில் அழிந்து விடுவோமோ
என்ற கவலையில்
மூழ்கிக்கொண்டிருக்கின்றன
நேரங்கள்.
.
குறைந்துவரும் தொலைவு
எந்தத் திசைக்குச் சொந்தமென்று
படகு
யாரைப்போய்க் கேட்கும்?
படகில்,
ஒருபக்கம்,
கண்திறவாப் பச்சைப்பசுங்கனவுகள்
யார் தூக்கத்திற்குப்பிறந்தவையோ!.
தண்டிக்கப்பட்ட
தவறுகளா படகைச் சுற்றி
அலைகளாக எகிறிக்எகிறிக்
குதிக்கின்றன?
அழுகையின்
உலகப்பொது மொழியும்
காதலின்
உலகப்பொதுமொழியும்
கண்களில் பிறந்தவையே!
படகு இயங்கும் இடத்தில்
அலைகளில்
எதுஎது எத்தனை விழுக்காடு?
யாருக்குத்தெரியும்?
நீந்தத் தெரியாத
அலைகளுக்குப் படகில் யார்
நீர்ம எழுத்துப்
பாடநூல்கள் ஏற்றி அனுப்புவது?
கடலில்
மீன்கள், திமிங்கலங்கள் மட்டுமில்லை
பழகவரும்காற்றும்
பயணம்வரும் கப்பல்களும்
கடலின் தாய்மொழியைக்
கற்றுக்கொள்ளும்.
உலகிலேயே
உப்புமொழிதான் அதிகமாக
நீர்மக் குடிமக்களிடையே
வழக்கில்பரவியுள்ளது.
கண்டங்களுக்கு இடையே
இணைக்கும்
பொதுமொழியாக இருக்கும்
தகுதியும்
அதற்குத்தான் உண்டு.
நீந்தும்
அலைகளை அசை அசையாகப்
பிரித்தால்
தேமா புளிமா இனத்தின்
வாய்பாடுகள் தென்படலாம்.
யாப்பருங்கலக் காரிகை கண்படலாம்.
நீலக் காவல் நிலையங்களில்
எல்லா நடவடிக்கைகளும்
அறிக்கைகளும்
ஆணைகளும்
புதிதாக வந்துசேர்ந்த அலைகளுக்கும்
புரியும் வகையில் எளிய
உப்புமொழியில்தான்.
பயணத்தில்
ஒற்றைப் படகு
உடைந்துபோனாலும்
கடல்பாடும் ஒப்பாரிகளில்
உலராதஉப்பின்
கண்ணீரும் கண்டிப்பாய்க் கலந்திருக்கும்.
....................................................
நீர்மப் பொதுமொழி--தலைப்பு
28-07-2024 காலை 8-30


அலையும் படகும் கூட‌

அகவற்பா பாடுமா என்ன?

பாடவைத்திருக்கிறீர்கள்.

கண்ணுக்குத்தெரியாத‌

காற்றின் உதடுகள் 

பேசும் மொழி 

அலைகளுக்கும் அத்துபடி.

படகுகளுக்கும் அத்துபடி.

கட என்பதன் பகுதி

வினைச்சொல் ஆகி

கடல் ஆனதை

குறிப்பாய் காட்டினீர்கள்.

எல்லாவற்றையும் கடந்து போ

என்பதன் முதல்

நீர்க்கவிதையே இது.

பனியுகத்தில் இது

நடந்து போ என்றே

இருந்தது.

கடலின் ஓவ்வொரு பிசிறும்

நுரைக்குள் கட்டிய கூடே

அதன் மூச்சும் பேச்சும் ஆகும்.


காத்திருப்பு

 காத்திருப்பு

_______________________________________

சொற்கீரன்.


சரி

ஒரு ரோஜாப்பூவை இன்று

நீட்டி விட வேண்டியது தான்.

என்ன சொல்லி கொடுக்கவேண்டும்?

ஹாய் என்றா?

ஓ மை டியர் என்றா?

ஸ்வீட்டி என்றா?

"வெண்ணிலவே வெண்ணிலவே.."

ரஹ்மான் ட்யூன் பின்னாலேயே

காதில் இன்ப நுண்ணலைகளை

கிளு கிளுக்கட்டும் ..

என்றா?

எனக்குள் ஒத்திகை முடிந்தது.

நான் நின்று கொண்டிருக்கிறேன்.

ஒற்றை ரோஜாப்பூவுடன்..

இடம் ...நேரம்..

எதுவும் குறிப்பிடவில்லையே..

அதெல்லாம் சரி.

யார் அவள்?

அதுவும் தெரியவில்லையே.

இன்று இரவு 

கனவு வரும் வரை அல்லவா

காத்திருக்க வேண்டும்!...


_______________________________________________________‍

அமிழ்ந்து போனவன்

 




கோழி கூவிற்று.

அது அடைகாத்து 

வைத்திருந்த 

விடியல் முட்டையும்

உடைந்து சிதறி 

வெளிச்சச் சிறகை

விரித்து வெளியே வந்தது.

தமிழனின் மூளி வானம் மட்டும்

மொக்கையாக‌

அப்படியே இருந்தது.

பத்துப்பாட்டும் 

எட்டுத்தொகையும் 

தந்தவன்

தர்ப்பைப்புல்லொடு

தடுமாறும் 

மந்திரங்கள் சொல்லி

தடங்கள் மறந்தவன்.

தமிழ்ச்சுவடுகள் அழித்து

அமிழ்ந்து போனவன்

மீண்டு 

என்று எழுவான்

என கிழக்கு தோறும்

விழித்து நோக்கி

சனி, 27 ஜூலை, 2024

கூழாங்கற்படுகை



ஊதா ரிப்பனும் 

கண்ணாடி வளையல்களும்

நாவல் பழத்து விழிகளுமாய்

கசிய கசிய பார்வைகளை

வீசினவளே...

இன்றும் அதே அந்த‌

குடமுருட்டி சங்கரன் கோயில்

கூழாங்கற்படுகையில்

வைராவி குளத்திலிருந்து

படர்ந்து பாய் விரிக்கும்

கரும்பச்சைப் பளிங்கின்

நீர்த்தடத்தில்

உன்னைத்

தேடிக்கொண்டிருக்கிறேன்.

அந்த பச்சரிசி மாங்காயின் 

மாவடுக்கள் போல்

விழிகள் உருளவிட்டு

மறைந்தோடுகிறாய்.

தூரத்து கிடை படுக்கையில்

ஓரக்கண் கொண்டு பார்த்துச்சிரிக்கும்

அந்த வண்டி மறிச்சி அம்மன்களே சாட்சி.


________________________________________________

அம்பைவாணன்.


_______________________________________________________


 

விழி




ஆமாம்

அவள் வீசிய விழித்தூண்டிலில்

நான் மாட்டிக்கொண்டு தான் 

இருக்கிறேன்.

துடி துடித்துக்கொண்டு தான்

இருக்கிறேன்.

இதிலிருந்து விடுபட்டு

அவள் புன்முறுவல்களால்

பூசிய கனவுகளை மீண்டும்

நான் உடம்பெல்லாம் 

அலகு குத்திக்கொள்ள வேண்டுமா?

இல்லை

கைபேசியில் அவளிடமிருந்து 

நான் கேட்க விழைகின்ற அந்த‌

சொல்லுக்கு

என்னை முழுதும் கரையான் புற்றுகளால்

மூடிக்கொண்டு

தவம் கிடக்க வேண்டுமா?

துடித்துக்கொண்டே இருந்தால் போதும்..

இந்த துன்பத்தின் 

ஒரு பரிமாணம் மட்டும் போதுமே..

தூண்டில் வீசப்பட்டவனை விட‌

தூண்டில் வீசிய அந்த கண்களை

வி ஆர் கேமிராவில்

நானும் பார்த்துக்கொண்டு தான்

இருக்கிறேன்.

இந்த துடிப்புகளோடு சங்கமிக்க‌

அந்த துடிப்புகளும்

என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதை

பார்த்து விட்டேன்.

அப்புறம் என்ன?

ஓ காந்தப்பார்வைகளே!

வானம் முழுதும்

விழிகளை நிரப்பி

தூண்டில் முள் மழை பெய்தாலும்

துடிக்கக்காத்திருக்கிறேன்.


________________________________________________‍‍‍‍‍

எப்சி

வெள்ளி, 26 ஜூலை, 2024

உறுத்தல்கள்

 



உறுத்தல்கள்

_____________________________________‍


படுக்கையை உதறி வைத்தும்

அதில் ஒட்டிய‌

இரவின் நட்சத்திர நசுங்கல் பிசிறுகள்

உறுத்தி உறுத்தி

உள்ளம் சொறிகின்றன.

என் இரட்டை நிழல்கள்

டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட்

என்னை நடத்துகிறது

இருத்துகிறது உண்கிறது குடிக்கிறது

சிந்தனைக்குள்

பொந்துகள் வைத்துக்கொண்டே

என்னை பொங்கல் வைக்கிறது.

சிக்மண்ட ஃப்ராய்ட் புத்தகப்பக்கங்களுக்குள்

தாற்காலிகமாய்

அடைந்து கொண்டேன்.

பேனாவும் பேப்பரும் அல்லது

விசைப்பலகைப் பொத்தான்களும்

தீர்வுகள் அல்ல.

என்னத்தை உமிழ்ந்தாலும்

எரிமலைக்குழம்பையும் கூட‌

குதப்பினாலும்

இங்கே பிணங்களின்

குத்தாட்டங்கள் சகிக்க வில்லை.

விடுங்கள்.

விழுந்து கிடப்போம்.

அவர்கள் ஆண்டு கொண்டிருக்கட்டும்.

காலை நல் வணக்கம்

எல்லோருக்கும்.


______________________________________________

எப்சி

தொடு வானம்

 

தொடுவானம் பார்ப்பது

ஒரு தாய்க்கு

ஒரு குழந்தை

பிறந்த உடனேயே

ஆரம்பித்து விடுகிறது.

நான் இந்த வானத்தை தான்

இத்தனை நாளாய்க்காத்திருந்து

கருவுற்றேனா

என்று திடுக்கிட்டுப் போகிறாள்.

அந்த வானம் நம் கைப்படாமல்

எப்போதும்

ஒரு கள்ளத்தனமான 

தீண்டாமையைத்தான் 

வைத்துக்கொண்டிருக்கிறது.

அது

கடவுளாயிருந்தால் என்ன?

மனிதனாயிருந்தால் என்ன?

யாரும் யாருக்கும் 

அகப்படுவதாயில்லை.

வாழ்க்கை இதை நமக்கு

சொல்லித்தரும்போது

அந்த தொடு வானம்

நம்மைவிட்டு வழுக்கிக்கொண்டுவிடும்

அது

ஒரு பெரிய உயரம்

அல்ல 

ஒரு நீண்ட ஆழம்.

மரணத்தை எப்படிவேண்டுமானலும்

அழைத்துக்கொள்ளுங்கள்.

____________________________________________

சொற்கீரன்.


கொளவி

 


கொளவி

_________________________

(கெழவி என்றொரு கவிதை)

____________________________________

மௌவலில் வந்தது. 26.07.2024

( விஜயராஜ் சோழன் எழுதியது )



இது கவிதை என்று 

சொல்லி

ஒரு வாழ்வின் உயிர்ப்பை

மழுங்கடிக்க மனசு இல்லை.

கெழவி என்று

சுருக்கென்று தலைப்பிட்டு

உள்ளே ஒரு குளவி கொட்ட‌

வைத்தீர்கள்.

வாழ்க்கையின் மொக்கைத்தனத்துக்கு

ஒரு மாணிக்க கிரீடம்

சூட்டியிருக்கிறீர்கள்.

______________________________________

சொற்கீரன்


கரையான்களின் பேட்டிகள்

 கரையான்களின் பேட்டிகள்

_________________________________




கவிதைகள்

ஊர்ந்து கொண்டிருக்கின்றன.

பறந்து கொண்டிருக்கின்றன.

மண்ணிலும்

விண்ணிலும்

புழு பூச்சி புல் கல் கட்டை என்றாலும்

பேனாக்கள் விடுவதாயில்லை.

அவற்றைப் பிதுக்கிப்பார்த்து

அவற்றின் அசைவுகள் எல்லாம்

காதல் காதல் காதல்

காதல் தவிர வேறொன்றும் 

இல்லை என்று

எழுதிக்குவிக்கின்றன.

இந்தக் காகிதங்களைத் தின்னும்

கரையான்கள் கூட‌

"ருசியோ..ருசி" என்று

பேட்டி கொடுக்கின்றன.

____________________________________

எப்சி







ஈரோடு தமிழன்பனின் எழுத்துப்பட்டறை

ஈரோடு தமிழன்பனின் எழுத்துப்பட்டறை

__________________________________________________


எழுதாத வேளையில்
என்சொற்கள்
ஐந்தாறு குழந்தைகளேடு
ஒளிந்து விளையாடப் போய்விடும்.
தினமும்
என்வாசல்தேடிவரும் சிட்டுக்குருவிகள்
கொத்தித்தின்னத் தீனிகள்
கொண்டுபோகும்.
மழைக்காலத்தில்
தவளைகள் பாடும் பாட்டுக்கு
புதிய
மெட்டுக்கொண்டுபோகும்
குளிக்கப்போய்க்
குளத்தில் நீந்தும் அவற்றைம்
மீன்கொத்திப் பறவைகள்
பார்த்து வியக்கும்-
இது என்ன புதிதாய்ச்
சொல்மீன்கள் !
கவிதையிலேயே குளிக்கலாமே!
குளத்துக்கு வந்து குழப்பம்
செய்யலாமா?
என்றுகேட்க நினைக்கும்!
சிலசொற்கள்
விண்மார்பு தழுவியபடி
நட்சத்திங்களைப் பார்த்துக்
கண்ணிமைத்துச் சீண்டும்
சோளக் காட்டுக்குள்
நுழைந்த சில சொற்கள்
கதிர்களுக்குள் புகுந்து
பவளக் குஞ்சுகளா! நீங்கள்
மஞ்சள் நிலாவுக்கு
மைத்துனி குழந்தைகளா!
என்று
பரல்களை வியக்கும்.
பள்ளி மாணவர்
புத்தகப் பையயோடு போன
சில சொற்கள்
வகுப்பறைக்குள் போகவில்லை.
பூக்கடை
ரோசாப் பூக்களில் தம்மை
உச்சரிக்கத் தக்க உதடுகள்
கிடைக்குமா என்று
பார்க்கப் பைகளிலிருந்து
குதித்தோடிவிடும்.
எழுதாத வேளையில்
என்சொற்கள் என்றும் படுக்கையில்
படுத்துக் குறட்டை விட்டதில்லை
எப்போதும்
என்கவிதைக்குள் எங்கிருந்தாலும்
ஓடிவந்துவிடும்.
நான்
எழும்வரைதான் இந்தக் கதையெல்லாம்!
........................o.........................
எதுவரை இக்கதைகள்?--தலைப்பு
26-07-2024


...........................................................................................................


ஈரோடு தமிழன்பனின் எழுத்துப்பட்டறை
___________________________________________________



கவிதைகளின் சிகரமே உன் சொற்கள் முளைத்து வந்ததும் கேட்டன‌ நாங்கள் எங்கே இருக்கிறோம் என்று. எங்கிருந்து வந்தீர்கள் என்று முதலில் சொல்லுங்கள் அப்புறம் இந்த முகவரி தருகிறோம் என்றோம் எல்லாம் குறும்புக்குத்தான். அதற்குள் அவற்றின் இருப்பிடத்தில் எல்லா பிரபஞ்சங்களும் கால் கொண்டு விட்டன. அந்த எக்ஸோ பிளேனட் கூட‌ வாருங்கள் கொறிக்கலாம் பாப் கார்ன்ஸ் என்று நட்சத்திர டப்பாவை குலுக்கிக்கொண்டு. அகரமுதல என்று வள்ளுவன் தொடங்கும் முன்னேயே அதற்கும் முந்திய‌ அவன் இதயச்சிலிர்ப்புகளையெல்லாம் நாற்று நட‌ வந்து விட்டனவே உன் எழுத்துக்கள். வால்ட் டிஸ்னி படங்கள் கண்டு நாம் வியந்தது உண்டு. அது எப்படி உன் எழுத்தின் ஒவ்வொரு சுழியும் புள்ளியும் உயிர்த்துக்கொண்டு முட்டைக்கண்கள் கொண்டு நம்மை உருட்டிப்பார்க்கும் அந்த டிஸ்னித்துடிப்புகளின் தூரிகைக்காடுகள் ஆயின? கவிதைகள் தலையணையும் பஞ்சுமெத்தையும் கேட்பதில்லை படுத்துக்கொள்ள. படிப்பவர்களின் படுக்கை விரிப்பெல்லாம் முட்களின் பீலிகளில் முடையப்பட்டவை தானே என்று கனவுகளையும் கற்பனைகளையும் கொண்ட சித்திரவதைக்கூடத்தை வேய்ந்து வைத்திருக்கும். உன் கவிதைகள் கூட‌ தூங்குவதில்லையாமே. உன் சொற்களின் தூக்க மாத்திரைகள் இன்றி அவை தூங்குவதே இல்லையாமே! _____________________________________________ சொற்கீரன்

அகழ்நானூறு 74

 அகழ்நானூறு 74

______________________________________

சொற்கீரன்.


குண்டு நீர் ஆம்பல் கலித்த சுனையுள்

இலஞ்சி இலைஇய அஞ்சுரம் நிழல‌

முறத்து அன்ன சேம்பின் வரியிலை

மூசும் நுண்சிறைத் தும்பி இனத்தொடு

முரல அடுத்த பழனச்சூடு

உதிர் நெல் உண்ணும் குரீஇய‌

குரல் கெழு சூழ் திறம்

அவள் நெஞ்சில் பாய்ச்சும்

நெடுவேல் அன்ன அவன் விழி ஆங்கு

கனல் நுழைத்து அருவிகள்  இழியும்

கொடுங்கானல் ஏந்தல் அஞ்சும்

என்னுயிர் மாயும் அறிவையோ தோழி.

________________________________________________


குறிப்புரை

__________________________________


நீர்வளம் நிலவளம் செழித்த அந்த‌

சிற்றூரில் அறுவடை நடக்கிறது.

அங்கு வாழும் தலைவி தலைவனை

காணும் ஏக்கத்தில் துயர் உறுகின்றாள்.

சுனை சூழ்ந்த இலைகள் அடர்ந்த அங்கு

அறுவடை நெற்கதிர்கள் உதிர்த்த‌

நெல்லை மேயும் குருவிகள் எழுப்பும்

கூரிய குரல்கள் தலைவனின் 

வேல் விழிகள் போல்

அவள் நெஞ்சில் பாய்கிறது.

அந்த வேதனையின் வெளிப்பாடே

இங்கே நான் எழுதிய இந்த 

சங்கநடைச்செய்யுட் கவிதை ஆகும்.

_________________________________________

சொற்கீரன்








வியாழன், 25 ஜூலை, 2024

அகழ்நானூறு‍ 73

 

அகழ்நானூறு‍  73

______________________________________________

சொற்கீரன்



மூவா நெடுந்திரை மூசு திண்கரை

ஞாழல் நிழத்த ஞெண்டு பறித்த‌

அங்குழி நிறைக்கும் நீரின் நுண்டுளி

நோக்கிச் செயிர்த்து இறைவளை நெகிழ‌

அத்தம் ஏகிய முந்நீர்ப் பரவையில்

முழுவிழி நாஞ்சில் எறி எறி கொண்டு

ஏந்தினை என்னே!எல்லின் கனல் வரி

பின் பின் தொடருழி திரைவியம் வாரி

வரூஉம் என்று செங்கால் நாரை

செப்பிய புள்மொழி அறிவைவோ அரிவையே

ஊதும் காற்றின் நுண்வழி நுழைபு 

அஃதின் நுவல்குறி அறிதி அறிதி.

மஞ்சில் குழைத்த நீல விசும்பும்

உன்பால் உரைப்பதும் கேள்மதி மன்னே.


___________________________________________________


குறிப்பு.

...................................................................................

கடலில் அலைகள் கடந்து திரைகடல் ஒடி "திரைவியம்" தேடச் 

சென்றவனை எதிர்பார்த்து காத்து இருக்கும் தலைவியைப் பற்றிய 

எனது சங்கநடைச் செய்யுட் கவிதை இது.

________________________________________சொற்கீரன்





ஈரோடு தமிழன்பனின் "இடைவேளை" பற்றிய கவிதை




"இடைவேளை"பற்றிய‌

உங்கள் சொற்களின் பாய்ச்சலில்

அந்த மின்னல் இழையை

வருடிப்பார்த்து விடலாம்

என்று நாங்கள்

தோற்றுப்போனதில்

மகிழ்ச்சியே வெள்ளமாய்

கரை புரண்டு ஓடியது.

வரிக்கு வரி

கரை உடைத்து ஓடும்

அந்த காவேரியின் பூநுரைக்குள்

ஆயிரம் ஆயிரம் புயல்கள்.

தலை உடல் வால்

என்று கசாப்புத்துண்டுகள்

போடக்கூடியதா

காலம் எனும்

உங்கள் கவிதை காட்டும்

காட்டாற்றுப்பாம்பு?

அதிலும் 

அந்த மருத்துவர்களின்

மூச்சுக்காடுகளுக்குள்

முடங்கி கிடக்கும் நோய் உற்ற‌

உயிர்களை

மீட்டுத்தரும் அந்த கணங்களின்

வெற்றித்துடிப்புகள்

கோடி இமயங்களை

கொண்டுவந்து குவிக்கும் 

வரிகள் ஆகும்.

உங்களோடு ஓடிவரும்போது

அந்த சொற்களில் நட்டுத்தரும்

உங்கள் மைல்கற்களில்

பின்னோக்கி ஓடும்

ஒரு டைம் ட்ராவல் ஓர்மை

எங்களுக்குள் புகுந்து கொண்டு

அந்த குறுந்தொகைத்தமிழை

குழைத்துத்தரும் உங்கள்

மூச்சுக்களில்

நாங்களும் முத்துக்குளிக்கின்றோம்.

தமிழின் படிப்பறிவு மட்டும் அல்ல‌

அதன் பட்டறிவும்

உங்கள் கவிதையில் பட்டுத்தெறித்து

பட்டொளி வீசுகிறது.


அன்புடன்

சொற்கீரன்

(இ பரமசிவன்)








___________________________________________________________________


இடைவேளை நேரம்
ஓடும் படம்
தேநீர் குடிக்க வடைமுறுக்குக்
வகையறா முடிக்க
மக்களுக்காகத்தன்
ஓட்டத்தை நிறுத்துகிறது
வெண்சுருட்டுப் புகைமணத்தில்
வெளிவருகிறது
விமர்சனச்சாம்பல்.
ஓய்வறைமுன் காத்திருப்புக்குக்
கால்வலி கடுத்துவிடுகிறது
பகல்பொழுதும்
இரவுப்பொழுதும் இப்படியான
இடைவேளைகள்
ஏன்விடுவதில்லை?
பகலின் இடைவேளைகளில்
வெளிச்சம்
விவாகரத்து வாங்கப்போய்விடுமோ?
இரவோடு
வாழ்க்கைஒப்பந்தம்செய்துகொள்ளுமோ?
இரவின் இடைவேளைகளில்
நட்சத்திரங்கள்
பகலை உடுத்திக்கொண்டு
படிக்க எந்தப் பள்ளிக்குப் போகும்?
மூச்சின்
இடைவேளைகளில்தான்
மருத்துவர்கள்
வேலை பார்க்கிறார்கள்.
உயிர்விளக்கை எரியவைத்துவிட்டு
வெளியேறுகிறார்கள்.
இந்த
இடைவேளைகளில்
வாழ்க்கை
சிலருக்குத் தன்னம்பிகை தயாரிக்கிறது.
சிலருக்குக்
கையறுநிலைக் கவிதை புனைகிறது.
ஓடும் நதியை
நடுவில் துண்டித்தால் எந்தப்
பகுதி மிகுதியாய் வருந்தும்?
உலவும் காற்றின்
குறுக்கே
உறைவாளை வீசினால்
அடர்வனச் சரிவுகளில் குருதிபெருகுமே
யார் துடைப்பது?
இடைவேளைகளில்மட்டுமே
வாழும் மக்களுக்கு
எப்போதும்
வாழும் வாழ்க்கை
எப்போது கிடைக்கும்?
...................................................
தலைப்பு-இடைவேளை
25-07-2024.காலை9-55

நாணயத்தின் இருபக்கங்கள்.

 

வெறுமையை எடுத்தால்

முழுமை 

அங்கு இருக்காது.

முழுமையை எடுத்துவிட்டாலும்

வெறுமை 

அங்கு இருக்காது.

ஏனெனில்

வெறுமையும் முழுமையும்

நாணயத்தின் இருபக்கங்கள்.

ஒரு பக்கத்தை எடுக்க 

நீங்கள் ஓட்டை போடும்போதே

மறுபக்கம் அங்கு

காணாமல் போய்விடும்.

__________________________________________

எப்சி

உருட்டித் திரட்டி

 


கவிதை என்று

ஒவ்வொரு தடவையும் 

எழுதுவதற்குப்பதில்

உருவகமாய்

உலகை உருட்டித் திரட்டி

உள்ளங்கையில் 

வைத்துக்கொள்ளலாம்.

__________________________________

எப்சி

ஏலியன்களின் ஏளனச்சிரிப்பு

 


ஏலியன்களின் ஏளனச்சிரிப்பு
________________________________________
எப்சி.



எதற்கு இந்த மானங்கெட்ட பிழைப்பு?
யார் கேட்டது இதை?
யார் குரல்?
இது எல்லா இடத்திலும்
எதிரொலித்தது.
என்ன இது?
ஒன்றும் புரியவில்லை.
ஊடகங்கள் புலம்பின.
விண்குழல்கள்
(ஆமா...அந்த யூ டியூபுகள் தான்)
அலறின.
கோவில்களில் விசேஷ பூஜைகள் யாகங்கள்.
யாருடைய மானத்தைப்பற்றி
யாருக்கு இங்கு அக்கறை?
குறும்புத்தனமான அரசியல் வாதிகள்..
குழப்பம் செய்யும் இல்லூமினாட்டிக்கும்பல்கள்...
இவர்கள்
யாரேனும் கிளப்பியிருப்பார்களோ?
போலிங் பூத்துகள் அருகில் தான்
இது கேட்டுக்கொண்டே இருக்கின்றனவாம்.
அப்படியா..
அப்படி என்றால்
எதிர்க்கட்சிகளின் சேட்டைகள் தான்
என்று பரபரப்பு செய்திகள்.
ஏதோ வடநாட்டில் ஒரு மூலையிலிருந்து தான்
எல்லா இடத்துக்கும்
இந்தக்குரல் பரவியிருக்கிறதாம்.
ஒரு வழியாய்
எம் எஸ் என் செய்தியில்
விவரம் வந்து விட்டது.
அந்தக்குரலின் ஒலி அலையை
டி சைஃபர் செய்தார்களாம்.
எங்கோ மில்லியன் ஒளியாண்டு தூரத்திலிருந்து
நம் கோள் மாதிரி உள்ள கோளிலிருந்து
இப்படி கோள் மூட்டி இருக்கிறார்களாம்
ஏலியன்கள்.
நாங்கள் உங்களைப்போலவே ஊடுருவிக்கொண்டு
உள்ளே புகுந்திருக்கிறோம்
என்று
உலகத்தின் ஒருபல்கலைக்கழக
ஆராய்ச்சி அறிக்கை ஒன்று கூறுகிறதே
அதைக்கேட்டுமா உங்களுக்கு
சுரணை வரவில்லை?
"ஆலிவுட்டுக்காரன் தான் ஊசிப்போனகதைகளை
கம்பியூட்டரில் முக்கியெடுத்து
படம் பண்ணி ஏமாத்துகிறான் என்றால்
நீங்களும்
அந்த துரோண அஸ்வத்தாமா
ஊசல் சமாச்சாரங்களை
புரட்டு புளுகு எண்ணெயில்
பொரித்து எடுத்து
வசூல் தந்திரங்களை
காட்டிக்கொண்டிருக்கிறீர்களே..."
அந்த ஏலியன்களின் ஏளனச்சிரிப்புகள்
நிற்கவே இல்லை.
_____________________________________________________