சனி, 5 நவம்பர், 2016

கடவுள் இருக்கான் குமாரு.


கடவுள் இருக்கான் குமாரு
==============================================ருத்ரா இ பரமசிவன்

படம் ஓடுகிறது.
தீயா வேல செய் குமாரு
வரிசையில்
இப்படி ஒரு தலைப்பில்
படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இசையமைப்பாளர்
கதாநாயகனாக பரிணாமம்
அடைந்த பிறகும்
அவருக்கும் நிறைய படங்கள் தான்.
ரசிகர்களோ இரண்டு வகையில்
குவிந்து விட்டனர்.
அவர் இசைக்கும்
அவர் நடிப்புக்கும்
என்று ரசிகர்கள் ஏக ஆரவாரம்.
காட்சிக்கு காட்சி
காகிதப்பூக்களில் மழை.
இறுதியாக படம் முடிந்தது.
எல்லோரும் வெளியேறி வீட்டனர்.
தியேட்டர் ஊழியர்கள் சுத்தம் செய்ய‌
தொடங்கி விட்டார்கள்.
ஒரு பெரியவர் சீட்டில்
உட்கார்ந்திருந்தார்.

ஏய்யா பெரிசு!
படம் முடிஞ்சு போச்சே
இன்னும் போகாம உக்காந்திருக்கியே
என்ன ஆச்சு?"

"சரிப்பா!
இது என்ன படம்?"

"கடவுள் இருக்கான் குமாரு
ஏன்..தூங்கிட்டயா?"

"முழிச்சுத்தான் பாத்தேன்..
அதுல கடவுள காட்னாங்களா
இல்லையான்னு தெரியல"

"வயசான காலத்துல நீயெல்லாம்
படம் பாக்க வந்துட்டே
யார்யா நீ?"

அந்த ஊழியர் வேகமாக‌
அந்த கிழவர் அருகில் போனார்.

"என்னையா யாருன்னு கேக்கிற
என்ன நல்லா உத்துப்பாரு.."

திடீரென்று திருவிளையாடலில்
அந்த சிவபெருமான் (சிவாஜி)
"ஹா ஹா ஹான்னு" சிரிச்சு
மறைவாரே..
அது போல் தியேட்டர் நுழுவதும்
மின்னல் அடிச்சு ஒரே வெளிச்சம்.
அப்புறம் ஒரே இருட்டு.
என்ன ஆயிற்று என்று தெரியவில்லை?

மறுபடியும் படம் போட்டார்கள்..
அடுத்த காட்சிக்கு.
கூட்டம் நிரம்பியது.
டைட்டில் வந்தது...
ஆனால்
எல்லோரும் வாசித்து
அதிர்ச்சியடைந்து கத்தினார்.
டைட்டிலுக்கு பிறகு
படம் அப்படியே நின்றது!

டைட்டில் இது தான்

"கடவுள் வந்துட்டு போய்ட்டான் குமாரு"

(யார் கண்டது இதன் தொடர்ச்சியாக‌
அடுத்த படத்தின் தலைப்பு
இப்படியே இருந்தாலும் இருக்கலாம்)

========================================
(இதுவும் ஒரு கனவு தான்)



2 கருத்துகள்:

நான் மானுடன் சொன்னது…

கனவுக் காட்சிதான் என்றாலும் மனதை மகிழ்வித்தது.

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றி நண்பரே

கருத்துரையிடுக