திங்கள், 28 நவம்பர், 2016

    வார்த்தைகள்

    வார்த்தைகள்

========================================ருத்ரா இ .பரமசிவன்


சிலருக்கு ஆழ்கடல் முத்து.
பலருக்கு மழைக்கால ஈசல் சிறகுகள்.
வாளின் காயம் ஒன்றுமில்லை.
வாயின் காயம் ஆயிரம் உயிர்களை தின்னும்.
பேசவேண்டும் என்று 
மூளை 
சமுத்திரத்தில் இறங்குமுன்னமேயே
ஒரு பெரிய சுநாமியாய் 
வந்த வார்த்தையில்
மூளைக்கபாலமே
மண் மூடிப்போகிறது.
மனிதன் 
ஏன் இப்படி
கனமான கற்களைத்தூக்கி தூக்கி
என் மீது எறிகிறான்.
கடவுளுக்கு இன்னும் புரியவில்லை.
"சஹஸ்ரநாமத்தை"
அவனுக்கு எப்படித்தான் புரிய வைப்பது?
நமக்கு இன்னும் புரியவில்லை.
வானம் வாய்பிளந்து
கற்பலகையில் சொன்னது 
என்றான் மோசஸ்.
வார்த்தைகள்
யாருக்கும் புரியவில்லையே
புரிந்து பாருங்கள் என்றால்
மார்பில் ஆணி.
தலையில் முட்கிரீடம்.
லட்சக்கணக்காய் 
வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்.
ஆத்மாவில் அச்சடித்தது என்றார்கள்.
ஒரு கனத்த புராணபுத்தகத்தில்
நசுங்கிப்போன‌
அந்துப்பூச்சியில்
எல்லாவார்த்தைகளும்
முற்றுப்புள்ளி போட்டுக் கொண்டன.
உயிரின் உயிரின் 
உயிரினுள் உயிரின் உயிரினுடன்
உரசும் ஓசைகள்
எங்கே மொழி பெயர்த்திருக்கக்கூடும்?
சாக்கடை ஓரத்து
மனிதப் பூச்சிகளின்
இரப்பைக்குள்ள்ளும்
குடலுக்குள்ளும்
பசியின் பரல்கள் ஒலிக்கின்றன.
பூர்வ உத்தர மீமாம்சங்கள்
என்ன வார்த்தையின் மாம்சங்களை
இங்கே புலிக்கூண்டுகளுக்குள்
வீசக்காத்திருக்கின்றன?
ஓங்காரத்தில் 
கடல்கள் வாய் கொப்புளித்து
துப்பியது என்றார்கள்.
தோலை உரித்து
ரத்தம் வடித்து
எல்லாம் எரித்து தேடினார்கள்
மனிதனை
ஒரு மோட்ச சாம்ராஜ்யத்தில்.
கயிலாய வைகுண்ட‌
பொற்பிழம்புச்சதைக்கூழில்
பிழிந்து பிழிந்து உலர்த்தினார்கள்.
மனிதனுக்கு மனிதன்
முகம் காட்டும் வார்த்தைகள் மட்டும்
எங்கே புதைந்து போயின?

=======================================================



நகைச்சுவை (4)

நகைச்சுவை (4)
================================================ருத்ரா இ.பரமசிவன்

"பழைய பேப்பர் வியாபாரி வீட்டுக்கல்யாணம்"
"அதில் என்னங்க விசேஷம் இருக்கு?"
வரதட்சிணை ரெண்டு மூட்டை "கரன்சி"

_____________________________________________________________

பாங்கு ஊழியர்
"அத்தாட்சி இல்லாத இந்த பணம் கருப்பு பணம்."
வாடிக்கையாளர்

"அதெப்படிங்க இது வெள்ளைக்காரர்" குடுத்த பணம்ங்க.அது
எப்படி "கருப்பு"பணம் ஆகும்?
______________________________________________________________

ஞாயிறு, 27 நவம்பர், 2016

"பொன்னாத்தா"



"பொன்னாத்தா"
=========================================ருத்ரா இ.பரமசிவன்

எம்புட்டு உசுரு ஓம் மேலெ.
ஒனக்கு அது புரியாது.
பூப்போட்ட ஏங் கண்டாங்கி
பூதோறும் தீப்பிடிக்கும்
நான் பொசுங்க‌ பாக்க‌லையா
கொண்ட‌யிலெ செருகிவெச்சேன்
ச‌ம்ப‌க‌ப்பூங் கோத்தோட‌.
ஓ(ன்) நென‌ப்புக் கொத்து தான்
என்னெ இப்போ
கொத்துக்க‌ரி போடுத‌ய்யா.
ஓட‌ ஓட‌ வெர‌ட்டி என்ன‌?
வ‌ருச‌ம் தான‌ ஓடுது
ப‌ரிச‌ம் போட‌ வ‌ந்துருய்யா
உரிச்சுத் திங்கி ஓ(ன்) நென‌ப்பு.
பேய்போல‌ எரியுத‌ய்யா
ஒந்நென‌ப்பு என‌க்குள்ளெ
மூட்டை நெல்லு அவிச்சிர‌லாம்...அது
கோட்டை அடுப்பைய்யா

ஒல‌ கொதிச்சு அட‌ங்கினாலும்
அரிசியெல்லாம் வெந்தாலும்
ஊழிச்ச‌த்த‌ம் அட‌ங்க‌ல‌
ஊர்ப்ப‌ய‌லுக‌ க‌ண்ணுக‌ளும்
குத்தீட்டி ஆகுதைய்யா.
வெட்டிக்க‌தை போதும்யா
வெர‌சா நீ வ‌ந்துருய்யா
வெந்த‌ காடு த‌ணியும‌ய்யா.
மின்ன‌ல் வெட்டிருச்சு
க‌ன்ன‌மும் பூத்திருச்சு.
கிழிஞ்சு போன‌ விடிவான‌ம்
வ‌ழிஞ்செடுத்த‌ குங்கும‌த்த‌
மொக‌மெல்லாம் பார‌ய்யா.

வேர‌ ஒருத்த‌வ‌னும்
பாக்குமுன்னே மொக‌மேந்தி
தூக்கிவிட‌ வ‌ந்துருய்யா.
தூக்க‌மெல்லாம் க‌ர‌ஞ்சு போயி
ராக்கோழியோட‌ நானும்
ஓடிப்பிடிச்ச‌ வெள‌யாட்டு
போதும்யா போதும்யா
உயிர‌ கய்யிலெ புடிச்சு
க‌ண்ணுக்குள்ள‌ ஒன்ன‌ப்புடிச்சு
வ‌த‌ங்குற‌து தெரிய‌ல‌யா?

ஓம் மூச்ச புரியாக்கி
ஏம் மூச்சை அதில் கோத்து
க‌ட்டிக்கிட்ட‌ ஏந்தாலி இங்க‌
யாருக்கும் தெரியாது.
ஏம் மூச்ச‌ வ‌ட‌ம் புடிச்சு
தேரோட்டி தென‌ம் ந‌ட‌க்கேன்
மூச்ச‌ட‌ங்கிப்போகுமுன்னே
வ‌ந்துரு ஏ(ன்) ராசாவே!

வ‌ட்ட‌நிலா வ‌ர‌ட்டியாகி
நெருப்பு வ‌ந்து திங்கும்முன்னெ
வந்துரு ஏ(ன்) ராசாவே!
தண்ணி குடிக்கையிலே
விக்கல் மேல் விக்கல் மேல்
விழுந்து தவங்கிடுவேன்.
அவ‌ந்தான்  நென‌ய்க்கான்னு
மாய‌க்கா சொல்லிருவா.
மாய‌க்காவுக்கு மாய‌ம் தெரியாது.
ஒன் நென‌ப்பு இங்கிருந்து
அங்கு விழும் அம்பாகி
ஏம் மீது கூர் பாக்கும்
மாய‌ விக்க‌லிது.
மாய‌க்கா அரிய‌லையே.

"என்னாத்தா பொன்னாத்தா"
இப்டி நீ கூப்பிட்ட
க‌ம‌ர்க‌ட்டு க‌ர‌யலயே.
உள்ளெல்லாம் இனிச்சுகிட்டு
உயிருக்குள்ள‌ இனிக்குத‌ய்யா‌
பாக்க‌ணும் போல‌
ச‌வுக்க‌டி தான் தெனந்தென‌மும்!
ச‌வ்வுமிட்டாய் வ‌ச்சு
செஞ்ச‌ ச‌வுக்குல நா(ன்)
அடிவாங்கி அடிவாங்கி
இனிப்பாய் மின்ன‌ல் வ‌ரி
உள்ள‌மெலாம் வ‌டுவாச்சு.
ஓம் பொன்னாத்தா இங்கே
புண்ணாத்தா ஆயி இப்போ
புலம்புறது கேக்கலையா

காத்திருந்து காத்திருந்து
வாசப்படி புண்ணாச்சு.....பூ
வாசம் தூவி வரும்
காத்து கூட புண்ணாச்சு.
வெளக்குமாறு வெய்க்கல நான்
சாணி தேச்சு மொழுகல நான்
என்னுயிர‌ தெளிச்சு நா(ன்)
பெருக்கி வ‌ச்ச‌ வாச‌ல் இது.
நெஞ்சுக்கூட்ட‌ கோல‌ம்போட்டு
பிஞ்சு கெடக்கிற‌ பாவி நான்
வ‌ந்துரு ஏ(ன்) ராசாவே
வ‌ழியெல்லாம் என்னுயிரு
தாரா எள‌கிருக்கு
வ‌ந்துரு ஏ(ன்) ராசாவே ஒட‌னே
வ‌ந்துரு ஏ(ன்) ராசாவே.

=================================================

பொருள்வ‌யின் பிரிந்த
த‌லைவ‌னை எதிர்நோக்கி
த‌லைவியின் ப‌ச‌லை வ‌ரிக‌ள்
ஆயிர‌ம் ஆயிர‌ம்
ஆண்டுக‌ளுக்கு முன்னே
அந்த‌ ஓலைக‌ளில்
ப‌திவிற‌க்க‌ம் ஆகி
இன்றும் நம்
இத‌ய‌ங்க‌ளின் புழுதி பூத்த‌
கிராம‌த்துச்ச‌ங்க‌ப்ப‌ல‌கையில்
ஊஞ்ச‌ல் ஆடும்
க‌லித்தொகையே
மேலே க‌ண்ட‌ ஒலித்தொகை.
==================================================ருத்ரா








"சொள்ள‌ மாடா! மாத்தி யோசி!"

"சொள்ள‌ மாடா! மாத்தி யோசி!"
===============================================ருத்ரா இ.பரமசிவன்



தாமிரபரணி பாய் விரித்ததில்
நான் படுத்துக்கிடந்தேன்.
பளிங்கு நீருள்
முக்குளி போடுவதில் ஒரு சுகம்.
கணுக்கால் அள்வே
ஓடினாலும் அது
என் அன்றாடக்கவிதை.
அதிலும் இந்த‌ மாலைக்குளிய‌லில்
"உம‌ர்க‌ய‌மும்"கூட‌ குளிப்ப‌து போல்
ஒரு பாவ‌னை.
வெயிலுக்கேற்ற‌ நிழ‌ல் இங்கு
நீருக்குள்
நெருப்பையே க‌ரைத்து
குளிர்பூங்குழம்பாக்கி
கிண்ண‌ங்க‌ளில் ஊற்றித்த‌ரும்.
கல்லிடைக்குறிச்சியின்
இத‌யத்தை வ‌ருடிக்கொண்டே
ஓடினாலும்
உருண்டு வ‌ரும் கூழாங்க‌ல்
ஒவ்வொன்றும்
இம‌ய‌ம் தான்.
"ஜன்னி" கண்ட இம‌ய‌த்துக்கே
ம‌ருத்துவ‌ம் பார்த்த‌
அக‌த்திய‌னின் க‌ண்ணாடிப்பிழ‌ம்பு அல்ல‌வா
தாமிர‌ப‌ர‌ணி.
தின‌மும் இதில் முக‌ம் பார்ப்ப‌து
அக‌த்திய‌னின் த‌மிழைத்தானே.
குளித்துக்கொண்டே பார்ப்பேன்
வ‌ட‌க‌ரையின் "ஊர்க்காடு"
வ‌ய‌ல் காடுக‌ளில் பொதிந்து கிட‌க்கும்.
அங்கு உய‌ர்ந்த‌ ஒரு "சாஸ்தா"
ஒரு அறுவாளின் விஸ்வ‌ரூப‌மாய்
விடைத்து நின்று கொண்டிருப்பார்.
அன்று நான் பார்த்த‌போது
அவ‌ரைச்சுற்றி நிறைய‌ ஆடுக‌ள்.
க‌ழுத்தில் மாலையுட‌ன்.
கோலிகுண்டு க‌ண்க‌ளில்
அவ‌ற்றிற்கே உரிய‌
"மே..மே..மே"க்க‌ளின்
மேள‌க‌ர்த்தா ராக‌ங்க‌ள்.
குல‌ தெய்வ‌ பூச‌னைக்கு
"பொங்க‌"வைக்கும்
அந்த‌ புகைமூட்ட‌த்துள்
புதைந்து போக‌ப்போவ‌து
தெரியாம‌ல்
அந்த‌ விழி உருண்டைக‌ள்
த‌லையை ஆட்டி ஆட்டி
சோழி குலுக்கிப்போட்டுக்கொண்டிருந்த‌ன‌.
அது "ஒற்றையா இர‌ட்டையா" ஆட்ட‌ம் அல்ல‌.
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு
ஆட்ட‌ம்.
என‌க்கு பொறுக்க‌வில்லை.
"சொள்ள‌ மாடா!
மாத்தி யோசி!"
இப்படி ஒரு கூப்பாடுடன்
கும்பிடு போட்டு
ச‌ட‌க்கென்று
நீர்க்காக்கை போல‌
தாமிர‌ப‌ர‌ணிக்குள் பூந்து கொண்டேன்.
.................................................
..............................................
குமிழிகள்..குமிழிகள்
பூதாகரமான குமிழிகள்.
அங்கேயும்
சொள்ள மாடன் தான்.
அவ‌னைச்சுற்றி
ம‌னித‌ர்க‌ள் த‌லை கொம்புக‌ளுட‌ன்.
க‌ழுத்தில் மாலையுட‌ன்.
பூசாரி இல்லை.
அத‌ற்குப்ப‌தில்
டினோசார் மாதிரி
ஒரு வெள்ளாடு.
கொம்புக‌ளுக்கு ப‌தில் கைக‌ள்
ப‌ள‌ ப‌ள‌க்கும் ப‌ட்டாக்க‌த்தியுட‌ன்.
ஒரு ம‌னித‌னின் த‌லை
அப்போது தான்
சூடாக‌..வெட்டுண்டு...
அய்யய்யோ..சொள்ளமாடா!..
முக்குளிபோட்டுக்கிட‌ந்த‌வ‌ன்
த‌லையை வெளியே நீட்டினேன்.
தாமிர‌ப‌ர‌ணியெல்லாம் ர‌த்த‌மா?
இது என்ன‌ ப‌ய‌ங்க‌ர‌ம்.
கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய்
காட்சி க‌ரைந்த‌து.
சூரிய‌னின் ர‌த்த‌வாந்தி மேற்கில்.
இப்போது
சூரிய‌ன் முக்குளி போட்டுவிட்டான்
.
===============================================ருத்ரா
10 செப்டம்பர்  2012ல் எழுதியது.

கார்ட்டூன் (10)

கார்ட்டூன் (10)
====================================ருத்ரா இ.பரமசிவன்






நகைச்சுவை (3)


நகைச்சுவை (3)
==============================================ருத்ரா இ.பரமசிவன்



"கோவிந்தா  விலாஸ்  கஃபே "


ஒரு ஓட்டலின் வாசலில் சிற்றுண்டி விலை விவரம்
(வாடிக்கையாளர் சிரமத்தைப்பொறுத்துக்கொள்ளுங்கள்
500 ரூபாய் 1000 ரூபாய் சில்லறை கிடைக்காததால்
இனி விலை விவரம் இதோ கீழே
______________________________________________

தோசை (சாதா)................ .............2000 ரூபாய்.

மசாலா ஸ்பெஷல் தோசை......4000  ,,

இட்டிலி (2).................... .....................2000 ,,

சாப்பாடு (சாதா).............................2000 ,,

சாப்பாடு (டீலக்ஸ்).........................4000 ,,


___________________________________________________

சனி, 26 நவம்பர், 2016

"சினிமாவுக்குள் ஒரு சினிமா"

"சினிமாவுக்குள் ஒரு சினிமா"
==============================================ருத்ரா இ.பரமசிவன்


http://tamil.filmibeat.com/news/dhanush-issue-thiruppuvanam-couple-ready-dna-test/slider-pf51835-043521.

மேலே உள்ள லிங்க் ஒன் இந்தியா தமிழ் பத்திரிகையின் செய்தி.

அதன் படி
தனுஷின் உண்மையான பெற்றோர் யார்?
இந்தக் கேள்விக்கு
மேலூர் நீதிமன்றத்து தராசு முள்ளில்
ஆடிக்கொண்டிருக்கிறது.
தனுஷ் உண்மையில் திருப்புவனத்துக்கதிரேசனா?
இல்லை கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷா?
திருப்புவனத்துக்காரர் டி.என்.ஏ பரிசோதனைக்கு தயார்.
கஸ்தூரிராஜா அவர்கள் ஆவேசமாக மறுக்கிறார்.
திருப்புவனதுக்காரர் சொல்லியிருப்பதைப்பார்த்தால்
ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது.
"தனுஷ் ஒரு பெரிய உயரத்துக்கு போய் விட்டார்.
இனிமேல் எங்களுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் பெற்றோர்களுக்கு ஜீவானாம்ஸம் தரவேண்டும் என்பது போல்
அவர் பேசியிருக்கிறார்.
இது தான் அவரது பாசம் நிஜமா? இல்லை பணத்தின் மீது உள்ள பாசமா
என்று நம்மை சந்தேகிக்க வைக்கிறது.
இதில் தனுஷ்
என்ன சொல்கிறார்?
என்ன சொல்லுவார்?
என்ன சொல்லியிருக்கிரார்?
நமக்கு தெரியாது!
அது
சினிமாவுக்குள் ஒரு சினிமா.
"அன்னை" மாதிரி ஒரு
"அப்பா" படமா?
"ஒரு உண்மை தெரிஞ்ச்சாகணும் சாமினுட்டு" ஒரு
கோடங்கி உடுக்கையடிக்கிறார்.

===================================================================



விடியல்


SDC11901.JPG

விடியல்
========================================ருத்ரா.இ .பரமசிவன்

சுவரில் மாட்டி வைத்த படமாய்
அப்படியே இருக்கிறது.
எங்கள் விடியல் என்னும்
சுதந்திரம்.
தனியொருவனுக்கு உணவில்லையெனில்.
..................
அதற்குமேல்
பாரதி பாடியதை பாடினாலும் கூட
குதிப்பார்கள்
"தேசபக்தி இல்லையென்று"
இந்த தேசபக்தியை குத்தகை
எடுத்துக்கொண்டவர்கள்.
ராமனைக் காட்டி நாட்டை  ஆண்டார்கள்.
அவனோ
ஒரு சலவைத்தொழிலாளி
கேட்ட கேள்வியில் மடங்கிப்போனான்.
அனுமனைக்காட்டி மிரட்டினார்கள்
அவனோ
ஒரு வடைமாலைக்குள் அடக்கம்
வேதத்தைக்காட்டி
நான்கு வர்ண அமைப்பில்
கல்வித்திட்டம் வகுத்துக்காட்டினார்.
மானுட நேயம் கொண்ட மக்கள்
மனு தர்ம சுரண்டலை
தவிடு பொடியாக்க
அலைகள் போல பொங்கினார்.
அந்த விடியல் படம்
இன்னும் படமாக இருப்பதா?
இந்த கேள்வியே
நெருப்பின் சூரியன் ஆகியது,
இபோது அது
"புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி"
மக்கள் மனதில் நல்ல மலர்ச்சி தரும்
பாரதியின் பாட்டு ஆனது!
எவனும் இந்த பாட்டுக்கு பூட்டு போடமுடியாது .
எரிமலை மையை தொட்டு எழுதியது இது?
இந்த மை
ஓட்டு"மை " இல்லை.
நோட்டு"மை " இல்லை.
மக்கள் ஒற்று "மை "யில்
அந்த உண் "மை"யில்
எழுத்தியது.
இந்த எழுச்சியே இனி நம்
கனற் பள்ளியெழுச்சி!

=========================================










சிங்கம் 3

சிங்கம் 3
==================================ருத்ரா

டீஸர் பொறி பறக்கிறது.
வாடா  வாடா
தொட...வாடா
சிங்கம் சிங்கம்
துரை சிங்கம்....
இந்த திரைத்துண்டு சிங்கம்
கிராஃபிக்ஸ் உறுமலை
பின்னணியில் வைத்து
கம்பீரம் காட்டுகிறது.
மூன்று சிங்கத்தை ஒட்ட வைத்து
கோரைப்பல் பிளந்து காட்டுவதில்
சூர்யாவின் போலீஸ் அடி
இப்போது
முப்பது டன்னா?
முன்னூறு டன்னா?
தெரியவில்லை.
மீசை நடிப்பதை வைத்து
இதை
துடி துடிக்கும்
மீசை 3 என்றே
பெயர் வைத்து விடலாம்.
அசோகசக்கரத்தோடு தெரியும்
அந்த மூன்று சிங்கம்
தமிழ்ப்புறநானூற்றை
சீறிக்காட்டப்போகிறது.
சேரன் சிங்கமாய்
சோழன் சிங்கமாய்
பாண்டியன் சிங்கமாய்
அந்த‌
"மூவேந்தர்"சிங்கம்
மூணு மடங்கு வேகத்தில்
கர்ஜித்துப்பாயும்!
சிங்கத்தமிழா சீறி வா!
அவர் இனி "சூர்யா" இல்லை
இனி அவர் "சீறியா.

=================================================

ரூபாய் நோட்டுக்குறும்பாக்கள்

ரூபாய் நோட்டுக்குறும்பாக்கள்
===========================================ருத்ரா இ.பரமசிவன்

ஏடிஎம்
==============================
எங்கள் குலசாமி இது.
கெடா வெட்டி பொங்கல் வச்சாத்தான்
நோட்டு கெடைக்கும் போலிருக்கு.

தினம் தினம் க்யூ தான்.
ஓட்டுப்  போட அல்ல‌
நோட்டு எடுக்க.

ரஜனி எந்திரனை கூப்பிடுங்கப்பா?
பசிக்குது ஓட்டலுக்குப் போகணும்
2.0 வந்தா பசியாறுமா?

திமிங்கிலங்களின் மீது உட்கார்ந்து
சின்ன மீன்களுக்கு தூண்டில் போடும்
மோடியின் பொருளாதாரம் இது.

அந்த நோட்டு வாங்கி
ஓட்டுப்போட்டாலும்
இந்த நோட்டுக்கு வழியில்லை.

மொத்த சமுத்திரத்தையும்
இறைத்து ஊற்று தோண்ட கையில் உள்ளது
இநத "ஸ்பூன்" மட்டுமே.

=================================================









நகைச்சுவை (2)



நகைச்சுவை (2)
==========================================ருத்ரா

பாட்டி தன் பேரனிடம்

"ஏண்டாப்பா? பணத்தை கண்ட இடத்தில்
போடாதீங்க..காத்து கருப்பு பிடிச்சுக்கும்னு
சொன்னேனா இல்லையா? இப்போ பாரு
நோட்டு பூராவும் கருப்பு புடிச்சுக்கிட்டுதுன்னு
கருப்பு பணம் கருப்பு பணம்னு எல்லாம்
பேசிக்கிறா!பெரியவா சொன்னா கேட்டுக்கணும்."

"!!!!!"

===================================================

வெள்ளி, 25 நவம்பர், 2016

ஆரண்யகாண்டம்

SDC11534.JPG




ஆரண்யகாண்டம்
=====================================ருத்ரா இ.பரமசிவன்

இடுப்பில் டவல் கட்டிக்கொண்டு
டூத் பேஸ்ட் கேட்கும் கணவன்.
வாசலில்
பள்ளிக்கு அழைத்து செல்லும்
வாகனம் வந்த போதும்
வாய்க்குள் இட்லியை திணிக்கத்
தெரியாமல் விழிக்கும் பையன்.
எட்டாவது போகிறான் என்று பெயர்
இன்னும் அவனுக்கு வகுப்பு வாய்க்கால்கள்
எல்லாம் எட்டி வரவில்லை.
அடுப்பில்
சுரு சுரு வென்று
குக்கரில் குண்டு நாகம் போல் சீறும்
ஆவிப்பீய்ச்சல்கள்.
எத்தனையாவது விசில் இது
மறந்து போய் விட்டது.
ஹோம் ஒர்க் எழுதிய நோட்டு எங்கே
என்று
முயல்குட்டி போல்
மிளகு கண்கள்
உருட்டி விசும்பும் குட்டிப்பெண்..
பேபி கிளாஸ் தான் என்றாலும்
செமினாரில் தீசிஸ்
படிக்கப்போகும் பர பரப்பு
அந்த குட்டிக் கூகிளுக்கு..

இந்து பேப்பரை
நான் என்னமோ
என் இடுப்பில் கட்டியிருக்கிறேன்
என்று
என்னிடம்
மாமனாரின் விசாரிப்பு.
மாமியார்
கம்பும் கையுமாக‌
காயப்போட்டிருக்கும்
துணியை எடுத்துக்கொண்டு
குளிக்கப்போகவேண்டுமாம்.
மடி.
மனிதன் தொடக்கூடாத‌
கம்பு மட்டுமே
தொடக்கூடிய மடி.
வேளுக்குடியார் சொன்ன சுலோகத்தை
எச்சில் படுத்திக்கொண்டு
அவர் குளியலறை கிளம்பிக்கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் முடித்து
கணவரும் நானும் தான்
ஓட வேண்டும்
அலுவலகக்காடுகளுக்கு.
அதற்குள்
இந்த அடுப்படி ஆரண்யகாண்டம்
பாராயணம்
முடிவுக்கு வரவில்லையே!

வாழக்கை எனும்
பொய் மானின்
அந்த தங்கப்புள்ளிகள்
எந்த அகராதியிலும்
அகப்படவில்லையே!

===============================================

கார்ட்டூன் (9) 


கார்ட்டூன் (9)   25.11.2016 by ருத்ரா

துருவநட்சத்திரம்

துருவநட்சத்திரம்
==================================ருத்ரா இ பரமசிவன்


தமிழ் திரைவானில்
ஒரு துருவந‌ட்சத்திரமாய்
தன் நடிப்புக்கு
ஒரு புதிய அடையாளத்தை தர‌
இப்போதே தன்னை
அதற்குள் அடைகாத்து
ஒரு நட்சத்திரத்தின் குஞ்சை
சிற்கு வைத்து தருவார் விக்ரம்
என்ற நம்பிக்கை
கோலிவுட்டில்
நாற்று உருவில் பதியமாகிக்கொண்டிருக்கிறது.
இடையில் ஒரு "வாலு நட்சத்திரம்"
மோதுவது போல் இருக்கிறது.
இரண்டையும் மோதவிடாமல்
ஒரு தனிப்பாதை போட்முயல்வதில்
விக்ரமர் வல்லவர் தான்.
அன்னியனில் அவர் நடித்த நடிப்பு
இன்னமும் அது ஒரு
"எம் ஜி எம்" சிங்கம் போல்
பிடரிமயிரை
முன் விழும் நிழல் அருவியாய் வைத்து
தியேட்டரே கிடு கிடுக்க‌
உறுமும் அந்த ஒலி இன்னும்
நம் நெஞ்சில் கிலி ஏற்படுத்திக்கொண்டிடுக்கிறது.
"காசியில்" அவர் எங்கோ பார்த்த மாதிரியான‌
ஒரு நிலைகுத்திய அரைவிழியில்
நம்மை ஊடுருவி துளைத்ததை
நம்மால் தாங்க இயலாது.
"என் மனவானில்..."பாட்டு
நம் உள்ளத்தை
சப்பாத்திக்கு மாவு பிசைகிறது.
தெய்வத்திருமகளில் (னில்)
பாப்பா விளையாட்டு விளையாடி
பார்ப்பவர் மனதில் எல்லாம்
உருகும் பனிச்சிற்பம் செதுக்கிவிட்டாரே.
அதனால் தான் துருவநட்சத்திரத்திற்காக‌
நம் மனத்தின் அகண்ட வானம் முழுதும்
துண்டு போட்டு இடம் பிடித்து வைத்திருக்கிறது.
இவ்வளவிலும் முதல் படமான‌
சேதுவில் காதல் அவரை பிழிய பிழிய‌
முறுக்கி எடுத்திருப்பதற்கு ஏற்றார்போல்
முறுக்கு விழுந்து அப்புறம் முறுக்கு அவிழ்ந்து
மூளைப்பூவின் நடுவில்
ஏற்படும் அந்த வண்டு குடைச்சலில்
துவள்ந்து விழுந்து கிடப்பதில்
தன் நடிப்பை உயர்த்தி நிமிர்த்தி வைத்திருப்பாரே.
எல்லாம் சரிதான்
கௌதம் மேனன்
எனும் நுட்பம் நிறைந்த காமிராக்கண்ணின்
பார்வைக் கூர் முனையில்
ஒரு பிரம்மாண்ட வானம் காலின்
தன் ஒற்றை விரலில் நின்று காட்டப்போகும்
அந்த சர்க்கஸ் நம் ஆவலை
தூண்டி விட்டுக்கொண்டே இருக்கிறது.
வரட்டும்,காத்திருப்போம்.
======================================


வியாழன், 24 நவம்பர், 2016

நகைச்சுவை














நகைச்சுவை..........


(ஏடிஎம்  வரிசையில் நிற்க கூலிக்கு ஆள் தயார் என்பது செய்தி)


தேர்தலில்ஓட்டு போட மிக நீண்ட வரிசை.
அதில் ஒருவரிடம் கேட்கிறார்


"நான் வேண்டுமானால் நிற்கிறேன்
மணிக்கு
ஐம்பது ரூபாய் கொடுத்தால்
போதும்.

"ஏம்பா
நாங்களே உன்னை மாதிரி வாங்கிட்டு தான்
நிக்கிறோம்."

"!!! ????"

(அது நோட்டு எந்திரம் இது ஓட்டு எந்திரம்)

========================================================
ருத்ரா இ.பரமசிவன்.









மலைப்பாம்பு விழுங்கியபிறகு


மலைப்பாம்பு விழுங்கிய பிறகு



ஒரு
மலைப்பாம்பு விழுங்கியபிறகு
என்ன மிச்சம்
இங்கே இருக்கப்போகிறது.?
இந்த
வாழ்க்கையின் சுவடும்
இங்கே
அப்படித்தான் தோன்றுகிறது!
மனம் எனும் சோப்புநுரைக்குமிழி
உடைந்து போகும்
அரைக்கால் நொடிக்குள்
ஆயிரம் யுகங்களில்
அடை த்துக்கிடந்த
கண்ணீரின் ஊற்றுக்கண்ணும்
உடைந்த ஒரு பிரளயம்
பேரொலி கிளப்பி
பீறிட்டோடுகிறது..
அவ்வளவும்
இறைவன் அழுத கண்ணீரா?
ஆம்!
மனிதன் இன்னும் அழுது முடிக்கவேண்டிய
கண்ணீரை
இப்படித் தேக்கி வைக்க
இன்னும் ஒரு ஆயிரம்
இறைவன்கள் நமக்கு வேண்டும்!
"இது எப்படி இருக்கு?"
விந்தையாக இல்லை!
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
அது கண்ணீர் தான்.
கருணையை
மொழிபெயர்க்க வந்த
கடவுளின் மொழி அது மட்டுமே.
மனிதர்களிடையே கசியும் மனித நேயமே
அது!

===============================================================
ருத்ரா இ.பரமசிவன்







சினிமாத்தோட்டாக்கள்


சினிமாத்தோட்டாக்கள்
================================================ருத்ரா இ.பரமசிவன்




என் இனிய தமிழ்ச் சகோதரனே!
நீ வெள்ளம் தான்.
புயல் தான்.
பிரளயம் தான்.
ஆனால்
எப்போது?
ஏதாவது ஒரு படத்தின்
ஃப்ர்ஸ்ட் லுக்
அல்லது
டீஸர் வரும்போது தான்.
சுனாமி என்று
பினாமிக்கூப்பாடுகள்போட்டுக்
குதித்துக்கொண்டிருப்பாய்!
தமிழ் நாடே!
உன் மண் எங்கே?
மலைகள் எங்கே?
மொழி தான் எங்கே?
தங்கத்தமிழனே!
சினிமாவுக்கு சிறகடிக்கும்
ஊர்க்குருவி ஆகிப்போனாய்.
கட் அவுட் வைத்தே
உன் தமிழ் தேசத்தை
கட்டிக்கொண்டதால்
அண்டைத்தீவுக்காரன்
இங்குள்ள சாணக்கியரோடு சேர்ந்து
லட்சம் தமிழன்களை
பிணங்கள் ஆக்கியபோதும்
மறத்தமிழன் நீ
மரத்துப்போன தமிழன் ஆன‌
கொடுமை என்னே!
எரியும் பிரச்னைகள்
உன் கண்முன்னாலேயே
சுடுகாட்டுத்தீ மாதிரி
எத்தனை எத்தனை?
கறுப்புபணம்
எங்கேயோ
பொந்து வைத்துக்கொண்டு
கொண்டாடிக் களிக்கிறது.
திண்டாடித் தவிப்பவர்கள்
முதுகெலும்பு அற்ற‌
நடுத்தர வர்க்கமும்
அடித்தட்டு வர்க்கமும் தான்.
தேர்தலுக்கு வரிசைகட்டி
நிற்பதில்
எந்த குறைச்சலும் இல்லை.
ஆனால்
எந்த இடத்தில் இருந்தோமோ
அதே இடத்தில் தான்
நாம் கிடக்கிறோம்
என்ற உள்ளுணர்வு நமக்கு
இன்னும் உறைக்கவே இல்லை.
இது தான்
நம் அவலங்களின் பின்னணித்திரை.
பாங்குகளில் பிதுங்கி வழிகிறோம்.
நாம் உழைத்த வியர்வையும்
சம்பளம் என்ற‌
காகித சவங்களாய்
எங்கோ கிடக்கிறது.
கறுப்பு பண இருட்டுக்குள்ளே
இருக்கும்
ஈக்களையும் கொசுக்களையும்
அடிக்கும் மருந்து இருந்தும்
அங்கே பன்னீர் தெளித்து விட்டு
இங்கே
நம் கண்ணீரே நம்மை
காவு வாங்க விட்டு
ஆட்டம் காட்டுகின்றனரே.
பொருளாதார சூழ்ச்சிகளில்
புதைந்து கிடக்கிறோம்.
அரசியல் சூழ்ச்சியில்
தமிழும் புதைந்து போனது.
இதில்
சினிமா நிழலுமா உன்னை
சிலுவையில் ஏற்றுவது?
எங்கிருந்தோ
எங்கு நோக்கியோ
தோட்டாக்கள் பாய்கின்றன.
உன்னை நோக்கியும் பாய்கின்றன
மயக்கும் ஜிகினா லோகத்து...அந்த
சினிமாவின்
சிங்காரத்தோட்டாக்கள்!
சீரழிந்தது போதும் தமிழனே!
ஊரழியும் முன்னால்
உன் உரிமையைக் காத்து எழு!
அறிவின்
விழி காட்டி
மொழியின்
விழி காத்திடு தமிழா
ஒளி காட்டிடு நீ!

===============================================




கார்ட்டூன் (8)

                                                                         by ருத்ரா

கார்ட்டூன் (8).......24.11.2016
                                                                         பார்லிமென்டில்  பணமழை
                                              (ரூபாய் நோட்டுப்பிரச்னையால் லோக சபா முடக்கம்)

புதன், 23 நவம்பர், 2016

மூளிகள்



SDC12410.JPG





















மூளிகள்
_____________________________________________ருத்ரா இ.பரமசிவன்

மூளிகள் தான்.
விழியில்லை தான்.
ஆனால்
பாச உணர்ச்சியின்
பச்சை நரம்புகள்
பால் ஊட்டிச் செல்லும்
"பூமத்ய ரேகைகள்" 
அதில் ஓடுகின்றது
உங்களுக்கு தெரிகிறதா?
முல்லை முறுவல் காட்டும்
உதடுகள் மொக்கைகளாக‌
உங்களுக்கு தெரியலாம்.
பளிச்சென்று
மின்னல் விழுதுகள்
அன்பின் கீற்றுகளாய்
இழையோடுவது
உங்களுக்கு புலப்படவில்லையா?
ஒரு முத்துவை சுமக்கும்
இரு சிப்பிகளைக்
கொஞ்சம் பிசைந்து உருட்டிச்செய்ததே
இந்த குடும்பம்.
கண் எதற்கு?
இமை மயிர் படபடப்புகள் எதற்கு?
மூக்கு இல்லை.
முகவாய் இல்லை.
இதயக்கடலின் அடி ஆழத்து
மண் எடுத்து பிண்டம் பிடித்தது இது.
நாம் மூவர்.
நமக்கு மட்டுமே நாம்.
நாடு அடையாளங்கள்
இங்கு ஒட்ட வேண்டாம்.
ஊமை மானுடத்துக்குள்ளும்
உற்றுப்பார்த்தால் தெரியும்
உறங்கும் ஒரு
எரிமலையின் கரு.
அது
உமிழும்போது
உமிழட்டும்.
மனித அன்பின் கதகதப்புக்குள்
காட்டுத்தீயின் சித்திரம் எதற்கு?
தாயும் தந்தையுமாய் 
கோர்த்து நின்றாலும்
தாய்மை மட்டுமே
பூசப்பட்ட உருவங்கள் அவை.
பகிர்ந்து கொள்ள்ளப்பட்ட 
பசியும் தாகமுமே
அங்கு மொழிகள்.

பெண்ணே




பெண்ணே
==============================ருத்ரா இ பரமசிவன்

பெண்ணே!உன்னைத்தான்!
வெள்ளிக் குங்குமச்சிமிழ் இதோ!
இதனுள்ளே உன் "பொங்குமாங்கடல்"

அம்மி மிதித்தது மிதித்தது தான்.
மிக்ஸி வந்தபின்
இன்னும் எதற்கு அம்மி.

"பெய்யெனப் பெய்யும் மழை"
எழுதும்போது ஞாபகத்துக்கு வந்தது
"வாசுகி"யின் கண்ணீர்.

அழாதே!பெண்ணெ!
முகம் துடைத்துக்கொள்...உனக்கு
வானம் கூட கிழித்து தரும் மின்னலை!

விமானம் ஓட்டு!நாட்டை ஆளு!
குலுங்குவது உன் வளையல்கள் அல்ல‌
இந்த உலகம்!

ராமன் காலில் சீதை விழுந்திருந்தாள்.
அதனால் தான் ராமன் கால் பட்டு
அகலிகை உயிர்த்தெழுந்தாள்.

நிலத்தை தோண்டி தோண்டி
பார்த்தது போதும் பெண்ணே !
"ஐ பேட்"உனக்கு ஆயிரம் ரெக்கைகள்.

==================================================ருத்ரா

"சைத்தான்" மீது ஏன் இந்த சத்தம்?


"சைத்தான்" மீது ஏன் இந்த சத்தம்?
========================================ருத்ரா இ.பரமசிவன்

"தினமலரின்"
பத்தொன்பது ஸ்டில்களில்
விஜய் ஆண்டனியின்
பரிமாணம் தெரிகிறது.
கண்களில்
தேடல் அக்கினி வீசுகிறது.
அமைதிக்கடலாயும்
அவை அழ்ந்து கிடக்கிறது.
கதாநாயகி முகத்தாமரையில்
"சரிதா"வின் நடிப்பு
ஆழம் காட்டுகிறது.
விஜய் ஆண்டனி
ஒரு படத்தில்
ஏதோ  யோகாவில்
ஒரு ஆயுதம் முறுக்கேற்றுகிறார்
மனத்தை
மனத்தின் மீது
கூர் தீட்டி.!
அப்புறம்
கைவிலங்குக் காட்சிகள்!
ஒரு படம்
தலைப்பாகை விபூ தியுடன்
சுருள் அரிவாள் மீசையில்
ஆர்ப்பாட்டம் இல்லாமல்
லுக் விடுகிறது.
உள்ளே அவநம்பிக்கை
வெளியே நம்பிக்கையா?
இது கூட ஒரு கார்ட்டூன்  தான்.
கடவுளுக்கா?
சை த்தானுக்கா?
பத்தொன்பதாவது படம்
ஒரு முத்திரை.
அந்த அனுதாபத்தின்
பின்னே
அது என்ன?
ரௌத்ரமா?
குரூரமா?
உணர்சசியின் விளிம்பு...
குமிழிகள்
உள்ளே கொதிப்பது
கர்ப்பம் தரிக்கும் ஒரு வெப்பம்!
சைத்தான் மீது ஏன் இந்த சத்தம்?
அறியும் போது
நல்ல கருத்து கெட்ட கருத்து
போன்றதே ஞானம்.
மனிதன் ஒரு அடிப்படையான
கேள்வியில்
பிண்டம் பிடிக்கப்பட்டவன்.
பிண்டம் பிடித்தது..
கடவுள் எனும் சைத்தானா?
சைத்தான் எனும் கடவுளா?

===========================================

எதிர்பாராத ரோஜாக்கள்.


LINK WITH THANKS!
======================================================================
http://www.msn.com/en-us/video/peopleandplaces/couple-who-were-preschool-sweethearts-get-married-after-meeting-online/vi-AAkBesI?ocid=spartanntp
=======================================================================


எதிர்பாராத ரோஜாக்கள்.

======================================ருத்ரா இ.பரமசிவன்.


சிறுவயது வகுப்பில்
புன்முறுவல்களை
முகங்கள் பரிமாறிக்கொண்டன.
உள்ளங்களில்
அன்பின் நாற்று
முளைப்பதற்கு  முன்னேயே
வீடுகள் வாழ்க்கை இவற்றின்
காட்சிகள் மாறின.
தடமும் அழிந்தது.
சுவடும் மறைந்தது
பருவம் வந்தபோது
பெற்றோர்கள்
தங்கள் கலைடோஸ்கோப்
கனவுகளை
சுழற்றி சுழற்றிப்பார்த்து
சோழி குலுக்கிப்போட்டார்கள்.
அப்போது விழுந்தது "தாயம்"
மொட்டுகளாய்
பிரிந்து சென்றவர்கள்
எதிர்பாராத ரோஜாக்களாய்
திருமண ஜோடிகளாய்
எதிர் எதிரே நின்றனர்.
காலம் ஆடிய பகடையில்
காதல் பூத்து நின்ற
இந்த அதிசயம்
இங்கே ஒரு கலித்தொகை.
கண்ணுக்கு தெரியா
மின்னல் இழை இங்கு
நெய்த நிகழ்வுகள்
பெய்தது தேன்மழை !

===========================================================

மேலே உள்ள சுட்டியின் மூலம் அந்த "காணொளியை" கண்டு மகிழ்க !!!




முதியோர் இல்லம் (3)




















முதியோர் இல்லம் (3)
================================ருத்ரா இ பரமசிவன்.

பாசச்சித்திரங்களின்
தூரி"கை" ஒடிந்தன.
துடித்துச்சுமந்த‌
மணிப்பை சிதைய‌
தூக்கிச்சுமந்த இடுப்பும்
துவண்டு கழண்டு
மண்ணில் சுருள‌
தாய் இப்போது வெறும்
தசைகளின் மூட்டை.
தந்தை
அங்கே ஒரு மூலையில்
எலும்புக்குவியல்.
பிள்ளைகளும் பெண்களும்
எங்கோ
அவர்களின்
கூடுகள் நிறைந்த குஞ்சுகளுடன்.
ஒரு பிள்ளை அமெரிக்காவில்.
ஒரு பிள்ளை
அருகே அமிஞ்சிக்கரையில்.
தூரம்
குறுக்கே வரவில்லை.
இருப்பினும்
இங்கே
பூமித்தாய் பிளவு கொண்டாள்.
பிறப்பெனும் மின்னல் பற்றி
தாயின் நெஞ்சுக்கூட்டுள்
சிறுபொறி!
பத்து மாசத்துள்
எத்தனை யுகங்கள்
அடைந்து கிடந்தன.
திரேதா யுகங்களும்
துவாபரா யுகங்களும்
சுருண்ட‌
கருப்பைக்குள்
கடவுள் கூட‌
ஒரு குழந்தை தான்.
அந்த தொப்பூள் கொடியின் நீளம்
மில்லியன் மில்லியன் ஒளியாண்டுகள்.
....................
..........................
கோடி பிறப்புக்குள்
கோடி இறப்புகள்.
இந்த பிறவிப்பெருங்கடலின்
நீள் கரையில்
பெற்றவர் எங்கோ
பிறந்தவர் எங்கோ
வெறும் அமாவாசைப்பிண்டம்
கரைத்தா
எனக்கு ஊட்ட வந்தாய் மகனே!
அதற்கும்
உன் அரைநாள் லீவை
ஏன் கரைத்தாய் மகனே!
என்கேஷ்மென்ட் குறையாதோ?
வானத்தில்
கேள்வி மேகமாய் திரண்டது.
மிச்ச சொச்சங்களாய்
இந்த "ஜன்மா"க்களுக்கும்
"கர்மா"க்களுக்கும்
அதோ ஆகாசத்தில்
கதவுகள் இல்லாத
பூட்டுகள் இல்லாத ஒர்
முதியோர் இல்லம்.

===================================================








செவ்வாய், 22 நவம்பர், 2016

அரிஸோனாவில் ஒரு அந்திசாயும் நேரம்!





முட்களின் உட்கிடக்கை..
==============================================ருத்ரா
பாலைவனம் போல்
பகலவன் மட்டுமே
பாய்விரித்து படுத்துக்கிடக்கும்
மாநிலம் என்றாலும்
கட்டிடங்களின்
அழகிய சோலையுடன்
அழகு மிளிர்வது
அமெரிக்காவின் அரிஸோனா
அரைப்பனை உயர‌
அந்த கள்ளிக்காட்டிலும்
சூரியத்தூவலின்
ஆரஞ்சுவண்ணகுளியலில்
"வைரமுத்துக்கள்"
கவிதையாய் குவிந்துக்கிடக்கும்.
அந்த முட்களின் தாண்டவத்திலும்
ஒரு உட்கிடக்கை உண்டு.
இருப்பினும்
டி.எஸ்.எலியட்டின்
"வீ ஆர் தெ ஹாலோமென்"
அந்த முள்ளின் நிழற்காட்டிலும்
வாழ் தத்துவத்தின்
ரோஜாக்களைப் பூத்து நிற்கும்.
கள்ளோ காவியமோ
என நாவல் படைத்த‌
டாக்டர் மு.வ கூட‌
இங்கிருந்து எழுதியிருந்தால்
"முள்ளோ காவியமோ"
படைத்திருப்பார்.
மனிதன்
இன்றைய
"சோளக்காட்டுப்பொம்மை" உடையில்
(ஸ்கேர் க்ரோ)
நாகரிகத்தின் சிகரத்தில்
உட்கார்ந்து இருக்கிறான்.
ஏன்?
ஆணும் ஆணும் கூட‌
பெண்ணும் பெண்ணும் கூட‌
"மாங்கல்யம் தந்துநாநே"
பண்ணிக்கொள்ளலாம் என்கிறான்.
இந்தியாவின்
யோகாவையும் புராணங்களையும் தான்
தன் கிழிந்து தொங்கும்
ஜீன்ஸ் பாக்கெட்டுகளில்
திணித்து வைத்துக்கொண்டிருக்கிறான்.
ஃபண்டாஸி ஃபில்ம் என்ற பெயரில்
ஹாலிஉட்டையே
நம் இதிஹாசக்கற்பனைகளால்
சவைத்து சவைத்து
"பாக்ஸ் ஆஃபீஸ்"வசூல்கள்
அள்ளிக்குவிக்கிறான்.
மனிதனைக்காணவில்லை.
மூளையும் இதயமும் உணர்ச்சிகளும்
இங்கே
டாலர்களாக குவிகின்றன.
மனிதன்
இங்கே எங்கேயோதான்
நசுங்கிக்கிடக்கிறான்.
அவன் கிரீச்சொலிகள்
கேட்கின்றனவா?
உங்களுக்கு?

===================================================

கருத்தோட்டம் (2)

கருத்தோட்டம் (2)
===========================================ருத்ரா இ.பரமசிவன்

சமஸ்கிருத சொல் "வேறு சொல் அல்ல".பாவாணர் முறையில் அக்கு வேறு ஆணி வேறு என்று பகுப்பிலக்கணம் செய்தால் தமிழின் வேர்ச்சொல்லே நம்மிடையே மீண்டும் சமஸ்கிருத வேறு சொல்லாக வந்திருப்பது புரியும்.வேதம் என்பதே வேய்தம் ஆகும்.வேய் என்றால்
புல்லால் கூரை போடு என்று பொருள்.தொல் தமிழர்கட்கு அப்போது
புல் தான் மிகவும் பயனில் இருந்தது.அதை வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும் செய்து வாழ்ந்திருப்பான் போலும்.அதனால் தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற வழக்கு வந்தது.அவன் தான் அறிந்ததை பிறர்க்கு கற்பிக்கும் போதும் கையில் புல் இருந்தது.அதுவே தர்ப்பை எனும் புல்.அவன் கற்பித்ததே வேய்தம் னும் வேதம்.அதில் தமிழ்ச்சொல்லுக்கு முற்றிலும் வேறுபட்ட சொற்கள் இருப்பது உங்களுக்கு புதிராகத்தோன்றும்.ஆனால் தொல் தமிழன் கடல் கடந்து "திரைகளிடையே" பயணம் செய்து உலகம் முழுவதும் சென்று கொணர்ந்த ஒலித்திரட்சிகளே பின்னர் சமஸ்கிருதம் ஆகியது.அதிலும் பாரசீக பாட்டுவடிவமான அவெஸ்தா மொழியிலிருந்தே தமிழன் ரிக் வேதம் படைத்தான்.இப்படி அயல் நாட்டு மொழித்திரட்சியையும் தொன்மைத்தமிழ் ஒலித்திரட்சியும் அப்போதே வேறு வேறு ஆக இருந்தது.சிறந்த ஆர்ப்பரிக்கும்(ஆர்) தன்மையில் உள்ள அயல் தமிழன் ஆரியன் ஆனான்.சொந்த மண்ணின் மைந்தன் பழங்குடிகளாய் திராவிடன் (தொன்மை மிக்க திரைகடற்தமிழன் என்றே இதற்கும் பொருள்) ஆனான்.ஒரே மொழி (தமிழ்) பேசிய போதும் சேரன் சோழன் பாண்டியன் என்று வெட்டிக்கொண்டு குத்திக்கொண்டு சாகவில்லையா அது போல் தான் ஆரியன் திராவிடன் ஆனதும்.எனவே சமஸ்கிருதத்தின் தொல் வடிவம் தமிழ்.தமிழ் எல்லா(உலக) மொழிகளையும்  உள் வாங்கியதே சமஸ்கிருதம்.சமை என்பது பக்குவம் அல்லது
ஒரு நிலைக்கு சமப்படுத்தல் என்பதைக்குறிக்கும்.சமைதல் என்று ஒரு சொல்லும் அதைத்தழுவியதே .சிறு பெண் பருவம் அடைந்து வளர்ந்தவர்களுக்கு சமம் ஆவதே "சமைதல் " சாப்பிடும் நிலைக்கு சமப்படுத்தலே சமையல் ஆகும்.எனவே உலக மொழிகளின் எல்லா ஒலிக்குறிப்புகளை அப்படி சமைத்த மொழியே சம அல்லது சமைகிருதம் ஆகும். அந்த உலக மொழிக்கலப்பை வைத்து ஒரு மொழியை உருவாக்கியதும் தமிழர்களே. அந்த உலக மொழி இயற்படி  சம+கிருதமே (நடுவில் "ஸ்" சேர்த்து) சம்ஸ்கிருதம் ஆயிற்று.கிருதம் என்பது "கரம்"என்ற சொல்லின் திரிபு தான்.ஐங்கரத்தோனே என்று தமிழர்கள் பிள்ளையாரை
வழிபடுகிறார்கள்.


=============================================================ருத்ரா
13/10/2015

அம்மா என்றொரு கோவில்.





























அமெரிக்கா அரிஸோனாவில் இந்திய தொல் பழங்குடிகள் மியூசியத்தில்
ஒரு சிற்பத்தின் புகைப்படம் இது.





அம்மா என்றொரு கோவில்
=======================================ருத்ரா இ.பரமசிவன்

அம்மா என்றொரு கோவில்
கற்கள் அடுக்கியது அல்ல.
வெறும் சொற்கள் அடுக்கியதும் அல்ல.
தன் ஆன்மாவின் நிழலை
இன்னொரு இன்ப நிழலாக்கி
கருவறை வைத்து
காலம் என்றொரு பெரும்பிழம்பை 
உருட்டித்திரட்டி தந்தவள் அவள்.
அதன் கண் காது மூக்கு முகம் எல்லாம்
தன் பிம்பம் என்னும்
அன்பின் உயிர்ப்பூச்சை
முலாம் பூசித்தந்த மூகாம்பிகையே அவள்.
அடுப்புக்கு ஊதும் குழலைக்கூட‌
என் அமுத மூச்ச்சின்
வேய்ங்குழல் ஆக்குவாள்.
மூச்சுத்திணறி திணறி என்
முச்சுகள் செதுக்குவாள்.
அவள் பசியிலும் நான்.
அவள் இரைப்பையிலும் நான்.
குழம்பின் அகப்பையிலும் நான்.
குழம்பும் மன அகப்பையிலும்
குமிழியிடும் கனவுகளாய் நான்.
மண்ணில் விழுந்தபோதும் அவள்
விண்ணே நான்.
விடிகின்ற நட்சத்திரப்பூவும் நான்.
நான் வயிற்றில் இருந்தபோது
கோயிலில் ஒரு நாள்
"படைத்தவனை" நோக்கி கும்பிட்டாள்.
அவளுக்குத்தெரியாது
படைக்கும் அவளை அவள் அறியாமல்
படைத்தவனே அங்கு கும்பிட்டது!

===============================================================


முதியோர் இல்லம்.(2)




வேடந்தாங்கல்
==========================================ருத்ரா
ஒன்று
நைந்த சிறகை ஆட்டி
அழகு பார்த்துக்கொண்டது.
இன்னொன்று
அலகை ஆற‌ அமர கூர் தீட்டி
தினவை தீர்த்துக்கொண்டது.
ஒன்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து
அப்படி பார்த்ததே போதும் என்று
தாகம் தீர்த்துக்கொண்டது.
ஒன்று சிற்றலகு பிளந்து
உள்ளே செந்தளிர் போல் நா அசைய‌
இனிய ஒலியை
ஜாங்கிரி ஜாங்கிரியாய்
பிழிந்து
காடு கரையெல்லாம் இனிப்பு..
இன்னொன்று வண்ண வண்ணக்கொண்டையை
சிலுப்பி
எதிரே ஏதோ ஒரு மரம் இருப்பதாய்
கொத்தி கொத்தி துளையிட்டது
வெறும் காற்றுப்படலத்தை.
ஒன்று
நேர்குத்தாக‌
தலைகீழாய் பாய்ந்து
அதை கவ்வியே தீருவது
தண்ணீர்ப்பிழம்பின்
மணிவயிற்றைக்கீறி
சிசேரியன் ஆவது போல்
சளக் என்ற சத்தத்தை
அங்கே எதிரொலித்தது.
ஒன்று அசையாமல் கிடந்தது.
அவ்வளவு தான்
அதைப்பார்த்து
மற்றொன்று கா கா ..வென்று
கீறல் விழுந்த கர்ர் சத்தத்தை
காற்றெல்லாம் தெளிக்க‌
அதன் சுற்றம் எல்லாம்
கருஞ்சிறகுக் காடாய் அங்கே குழுமி விட்டது
கருப்புச்சட்டைக்காரர்கள்
திடீரென்று அணிதிரள்வது போல்.
தாய்ப்பறவைகள் எல்லாம்
இன்னும்
தன் பொன் முட்டைக்குள்ளிருக்கும்
பொன் குஞ்சுகளோடு
இந்தப் பிரபஞ்சத்துக்கே
ஒரு பொன் விடியலை
கிழித்துக்காட்டும் பெருமிதத்தை
அரங்கேற்றி பாசாங்கு செய்தன.
ஊசி அலகு கொண்டு
பன்னீர்ப்பூக்குள்ளும்
தேன் சுவைக்க
சிறகை வினாடிக்கு
ஆயிரம் அதிர்வுகளாய்
துடித்துத்தீர்த்தது
சிட்டு ஒன்று.
"காக்கை குருவி எங்கள் சாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்"
சிறகொடிந்த‌
அலகொடிந்த‌
ஒலி இழந்த‌
ஒளி இழந்த‌
அந்த பறவைகளின் "வேடந்தாங்கல்" அது.
பாசம் தாங்கியதெல்லாம் போய்
வெறும்
பஞ்சடைத்த
வைக்கோல் கூளமடைத்த‌
பறவைகளாய்
வேடங்கள் தாங்கிய இடம் அது.
அடைய கூடும் இல்லை.
பறக்க வானமும் இல்லை.
கால்களும் இல்லை.சிறகுகளும் இல்லை.
என்ற எல்லைக்கோடு
அங்கு ஆடிக்கொண்டே இருக்கிறது
"ஓலைக்கிளிகள்"போல.
அந்த தொட்டில்களில்
தங்கள் இதயங்களை மட்டுமே
போட்டு தாலாட்டிக்கொண்டிருக்கும்
அந்த சூன்ய தேசத்தில்
அன்பெனும்
பாசாங்குகள் வேடம் கலைந்த‌
ஒரு வேடந்தாங்கல் அது.
ஆம்
அது ஒரு முதியோர் இல்லம்.
====================================================


திங்கள், 21 நவம்பர், 2016

கார்ட்டூன்  (7).

கார்ட்டூன்  (7)........by  ருத்ரா இ பரமசிவன்
   
மோடியின் ஜல்லிக்கட்டு


காளைமாடும் கடவுளும்....


காளைமாடும் கடவுளும்....
=======================================ருத்ரா இ.பரமசிவன்

காகிதமும் பேனாவுமாக கவிஞன்.
எதிரே கடவுள்
கையில் ஒரு "ரிமோட்டுடன்".
"கவிஞனே!
காதல் கத்தரிக்காய் எல்லாம்
இருக்கட்டும்..
ஒரு பத்துப் பாட்டு
காதலின் வெத்துப்பாட்டு என‌
இல்லாமல் பாடு.
தவறி நீ பாடினாயானால்
இதை ஒரே அழுத்து..
உங்கள் எல்லோரையும் சேர்த்து
நானும் கூட‌
வெடித்துச்சிதறுவேன்.
தயாரா?
இறைவன் சீறினான்.
இப்போது தான்
ஏதோ ஒரு திரைப்படம் பார்த்தான்
போலிருக்கிறது.
காதலை குத்தாட்டம் குரங்காட்டமாக‌
பார்த்துவிட்டு வந்த
அவன் கூட
அதோ வெறி பிடித்து
ரிமோட்டை வெடிக்க காத்திருக்கிறான்.
கவிஞனுக்கு பயம்.
நான் போனாலும் பரவாயில்லை.
இந்த உலகம் காப்பாற்றப்படவேண்டுமே
என்ற நடுக்கத்தில்
"சிந்தனை செய் மனமே..."
பாடல்கள் தொடங்கி விட்டான்.
முதல் பாட்டு..
2 ஆம் பாட்டு..
3 ஆம் பாட்டு..
........
.........
11 ஆம் பாட்டு
இந்த தடவை கவிஞன் ஏமாறவில்லை.
கடவுள் காப்பு பாட்டையும் சேர்த்து தான்
பாடியிருக்கிறான்.
......
ஆனாலும்
என்ன ஆயிற்று?
இறைவன் ரிமோட்டை அழுத்திவிட்டான்..
எல்லாம் தொலைந்தது..
எல்லாம் புகைமயம்.
சூன்யம் எனும் வெறுமை...
காளைமாட்டின் மேல் இருந்த‌
தேவனிடம் தேவி
படபடத்துக்கொண்டிருந்தாள்!

"என்ன காரியம் செய்து விட்டீர்கள்?
கவிஞன் சரியாகத்தானே பாடியிருந்தான்."

"என்ன பாட்டு
காதலாகி..என்று ஆரம்பித்து
கடைசியில் ..இன்பம்" என்று ஒலிக்க‌
அல்லவா அத்தனை பாட்டும் பாடினான்."

"சரி தான்.
உங்களுக்கு ஒரு புலவன் பாடினானே
காதலாகி கசிந்துருகி..
அது போல் துவக்கி
பேரின்பத்தை "பெரும்பேர் இன்பம்"
என்று
உங்களைப்பற்றியே அல்லவா
உருகி உருகிப்பாடினான்."

"அப்படியா?
ஐயோ! தவறு செய்துவிட்டேனே!
மீண்டும்
"ரீ ப்ளே"பட்டனை அமுக்கிவிட்டால்
போயிற்று."

"தேவையில்லை"

இது ஆண்டவனின் அசரீரி அல்ல.
மனிதனின் கணீர்க்குரல்.
.
"படைப்புக்கும் அழிப்புக்கும்
"பாஸ் வர்டே"
இன்பம் தான்..
மகிழ்ச்சி தான்.
இதில் சிறிது என்ன? பெரிது என்ன?
மனிதனே தான்
உனது பாஸ் வர்டு
உன்னை அறிய நீ
என்னைப்படைத்தாய்!
அறிந்து கொண்டாயா?
சொல்?
சொல் ?
சொல்?
.............

காளை மாட்டோடு
கடவுள் ஓடியே போய்விட்டார்!

==============================================

நாலு வயது டாக்டர்?

நாலு வயது டாக்டர்?
=======================================================================
தகவல் :- ருத்ரா இ பரமசிவன்.



அந்த நாலு வயதுப்பையன் தன் அறிவுத்திறமையால்  24 வயது மருத்துவக்கல்ல்லூரி மாணவியை வியப்பில் முழ்கடித்தான்.பார்னியா சாலேஹி என்ற அந்த மாணவி சிறுவன் தானே அவன் என்று
"என்ன தம்பி? என்ன படிக்க விரும்புகிறாய் ?" எனக்கேட்டிருக்கிறாள் .
அமெரிக்காவில் அட்லாண்டாவில் "ட்ரேடர்ஸ் ஜோ "என்ற பெரிய மளிகைக்கடை "மால்" அது..அங்கே "அன்சன் வோங்க்"என்ற அந்த சிறுவன்
தனக்கு "இம்மியூனாலஜி" பாடங்கள் தான் விருப்பம் என்றும் அந்த பாடத்தைப்பற்றி அக்கு வேறு  அணி வேறாய் பிரித்து மேய்ந்து விட்டானாம்..அப்புறம் அவன் அவளுக்கே பாடம் எடுப்பது போல் மிக மிக நுணுக்கமான மருத்துவச் சொற்களையெல்லாம் விவரிக்கிறானாம்!!!!!
நாலு வயது டாக்டரா? என ஆச்சரியப்படுகிறார்கள் !!

நீங்களே இந்த சுட்டி வழியாய் சென்று அந்த சுட்டிப்பயலை "காணொளியில்"
கண்டு அதிசயுங்கள் !



 link (with thanks)
=====================================================================
http://www.msn.com/en-us/news/good-news/4-year-old-shocks-medical-student-with-his-biology-knowledge/ar-AAkzVSQ?li=BBmkt5R&ocid=spartanntp

=====================================================================




A 4-year-old boy shocked a medical student with a science lesson in the middle of a grocery store.
Parnia Salehi, 24, ran into the young boy and his father while shopping at a Trader Joe’s in Atlanta Tuesday and they started talking about her school, Morehouse Medical School.
But, she wasn’t expecting little Anson Wong to jump right into the conversation with his own wealth of medical knowledge.
“Anson was sitting in the cart and asked, ‘Oh, what kind of doctor do you want to be?'” the medical school student told WSB-TV. “So obviously my first reaction was, ‘Oh, this little kid knows the different types of doctors."
What she didn’t know was that he knew a lot more than that.
When she told him she was studying the brain, he responded, “Oh, so you like the nervous system. I like the immune system,” Salehi told the station that he said.
Salehi was shocked when Anson started explaining the nervous system in detail and she quickly took out her camera.
The student said the stuff he knew was graduate level information.© Provided by CBS Interactive Inc. The student said the stuff he knew was graduate level information.
In the video, the young boy talks all about organ function, antibodies, and bacteria, among other things.
"What's the function of the lungs?" Salehi asks in the video.
"The function of the lungs is to help take in oxygen and breathe out carbon dioxide. That's what humans do every day," Anson responds.
Later on in the video, Salehi asks Anson if the immune system is still his favorite.
“Yes,” Anson responds, “Always, forever.”
Salehi was clearly surprised by the whole interaction.
“It was at least graduate level physiology,” said Salehi. “Such a random thing for a little kid to be passionate about! The immune system

=============================================================

அகத்தியன் அருவி

picasabackground.jpg

அகத்தியன் அருவி
===================================ருத்ரா இ பரமசிவன்

நயாகாராவை
அங்கே அந்த அகத்தியனின்
பிரமாண்ட வெள்ளைத்தாடி
விரிந்து பரந்து வீழ்ந்தது பார்த்து
வியந்தேன்.
இங்கே வெள்ளிமயிர்த்தூரிகையாய்
சன்னமான அமைதி ஓவியத்தை
சலங்கை கட்டி ஆடி
தமிழ்
சிலிர்த்ததை உணர்ந்தேன்,
நினவின் அருவிகளுக்கு
ஆறு தேவையில்லை.
வாய் பிளந்து
"மலை"க்க வைக்கும்
மலைகளும் தேவையில்லை.
கொஞ்சம் சிந்தனையே போதும்.
பேசாமல்
கல்யாணி தீர்த்தத்தின்
அருகே
அந்த குத்துப்பாறையில்
உட்கார்ந்திருங்கள்.
உங்கள் நரம்பெல்லாம்
உங்கள் நாளமெல்லாம்
அருவியாய் உருகி
உங்கள் ஆத்மாவைக்கொண்டு
உங்களை குளிப்பாட்டும்.
பாபநாசம் படிக்கட்டுகள் இறங்கி
முண்டக்கண் மீன்கூட்டங்களோடு
கால் அளைந்து
மீன்களால் கிச்சு கிச்சு மூட்டப்பட்டு
கொஞ்சம் புல்லரித்தபோது
டாலர்கள் எல்லாம் வெறுமே
செத்தைகளாக‌
அந்த நீர்ச்சுழிப்பில் மிதந்து
விரட்டப்பட்டு ஓடுகின்றன.
தாமிரபரணி
வைரங்களின் பரல்களாக‌
முகத்திலும் மூக்கிலும்
தொப்பூளிலும்
இடுப்பில் கட்டிய துண்டு வழியாக‌
வருடித் தழுவி இறங்குப்பொழுது
வைரத்திரவங்களாய்
ஏழு வர்ணங்களில்
கண்ணடிக்கின்றன.
சில சமயங்களில்
அப்படியே பாறையில்
உருண்டு திரண்டு உடைந்து சிதறி
விழும்போது சூரியன் புகுந்து
ஏழுவர்ண ரத்தமாய்
பிரவாகம் செய்கிறது.
யாரோ இருவர் எங்கேயோ எப்போதோ
காதலை
இப்படி விழுந்து
ரத்தக்கலைடோஸ்கோப்பில்
கோணம் திருப்பி திருப்பி
காட்டுகிறது தெரிகிறது.
நாவல் மரங்கள்
பெண்களின் கருவிழிகளை
பழங்கள் என்ற பெயரில்
காற்றில் ஆட்டி ஆட்டி
அசைக்கின்றன.
நீர்த்திவலைகளின் ஊடே
அந்த கருப்பாயிகளின்
கண்டாங்கிச்சேலைகள்
கொசுவங்களை சொடக்கும்போது
உலகம் தலைகீழ்.
"எலே ..இந்தா ரெண்டு இட்டிலி"
கரண்டைக்கால் ஆழத்தில்
வெண்பட்டு விரிப்பில் படுத்துக்கொண்டு
ஆற்றில் குளித்துக்கொண்டே
கையில் அம்மா பாசத்தோடு இடுவதை
வாங்கித்தின்று கொண்டு..
தாமிரபரணியின் ருசி
என் அம்மா அரைத்த ஈராய்ங்கத்தொவையலுடன்
இழைந்து கொண்டு விடும்.
மருதமரக்கொப்புகளும்
வளைந்து குனிந்து
ஆற்றுக்கன்னத்தை உரசி
முத்தமிட்டுக்கொண்டிருக்கும்.
அந்த அமுத எச்சில்களும்
எங்களைக் கழுவிக்கொண்டு ஓடும்போது
நரம்புக்குள் கூச்சம் யாழ் மீட்டும்.
பெரிய குரங்கு நடுத்தரக்குரங்கு
குட்டிக்குரங்கு குட்டியிலும் குட்டிக்குரங்குகள் என்று
கொத்து கொத்துகளாய்
படிக்கட்டுகளிலும்
மரக்கிளைகளிலும்
மாணிக்கக் குடிமக்களாய்
ஏதோ ஓட்டு போடும் பரபரப்பில்
அவை "ஒட்டுப்பொறுக்கி"களாய்
அங்கும் இங்கும் தாவுவது
கண்கொள்ளாக்காட்சி தான்.
வைரமும் முத்தும் பவளமும்
சிதறிக்கிடப்பதாய்
அந்த பொறி கடலை வகையறாக்கள்
அங்கே இறைந்து கிடப்பதாய்
அவை தேடி தேடி வரும்.
நிமிடத்தில்
அவையாவும்
அவற்றின் வாய்க்குள்
தாடைகள் புடைக்க பத்திரமாய்
சேமிக்கப்பட்டு விடும்.
எங்கள் அந்தக்காலத்து
நர்ஸரி ரைம் களான‌
"பாவநாசத்துக் கொரங்கு
படியை விட்டு எறங்கு'
குத்தாலத்துக் கொரங்கு
கொப்பை விட்டு எறங்கு"
என்ற வரிகள் எல்லாம்
எங்கள் செல்லச்சிணுங்கல்
சண்டைகளிலும் அரங்கேறும்.
அகத்தியன் அருவி
அகத்தில் "குணில் பாய்" முரசின்
ஒலிகளாக‌
அந்த முரட்டுப்பாறைகளில்
மஞ்சள் உரைத்து
நீரில் மஞ்சள் நிழல்களை
கரையவிட்டு குளிக்கும்
மங்கையர் தருணங்களை
மெகாத் தொடர்களாக்கி
நெளிந்து நீண்டு ஓடிக்கொண்டே இருக்கின்ற‌ன.

===============================================ருத்ரா



கடவுள் இருக்கான் குமாரு (4)


கடவுள் இருக்கான் குமாரு (4)
============================================ருத்ரா இ.பரமசிவன்

...."ஷ்"தியேட்டர் என்று நாரதர் சொன்னது
பரமசிவனின் "கைலாஷ்" தியேட்டர்.
சீன தொழில் நுட்பக்கலைஞர்களை
வரவழைத்து
ஐஸையே குடந்து
மாளிகைகள் எல்லாம் அமைப்பார்களே
அவர்களை வைத்து உருவாக்கிய‌
சூப்பர் ஏ.சி தியேட்டர்.
அந்த தியேட்டர் உருவாக்கிய சீனர்
சாம வேதத்தை
சிவன் முன்
"மிங்க் சிங்க் மிவாம்
க்சியாம் ம்ஸியாம்"
என்று பாடிவிட்டு போய்விட்டார்கள்.
ஃபீஸ் ஒன்றும் வாங்கிக்கவில்லை.
சிவன் பதிலுக்கு
வரன் தருவதாய்
சீன மொழியில் ஏதோ கூறினார்.
அவர்களும் போய்விட்டார்கள்.
அந்த பனிஉறைவு நிலையிலும்
அவரும் நாரதரும்
தமிழ் நாட்டு சிதம்பரம் வெயிலை
அந்த பனிக்கைலாஷ தியேட்டருக்குள்
வரவழைத்து படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த குளிரூட்டிய வெயிலும்
இரண்டு தேவகன்னிகைகள்
கவரி வீசிக்கொண்டிருந்தனர்.
நடு நாயகமாய் சிவனும்
கீழே அருகில் நாரதரும் உட்கார்ந்து
படம் பார்த்து
ரசித்துக்கொண்டிருந்தனர்.
"கும் ஸாரே...பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த இரண்டு கதாநாயகிகள்
ஜி.வி பிரகாஷை
ஒட்டி உரசி ஆடிக்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று
ஜி.வி.பிரகாஷ்க்குப்பதில்
சிவபெருமான் ஆடிக்கொண்டிருந்தார்.
ஆடினார்.ஆடினார் ...
அண்டசராசர்மே ஆடியது.
தமிழ் நாட்டுத்தியேட்டர்களில்
அந்த படத்தில் அந்த காட்சியில்
ஜி.வி பிரகாஷை காணவில்லை!

(தொடரும்)




அர்த்தம் தேடி.....(2) 





அர்த்தம் தேடி.....(2) 
=======================================ருத்ரா 

இந்த பளபளப்பான 
கண்ணாடிக்கட்டிடங்களில் 
உலகத்துக்குள்ளேயிருந்தே 
இன்னொரு 
உலகம் 
கணினியின் 
அலைவிரிப்பு எனும் 
துணி விரிப்பில் 
கன்னிக்குடம் உடைத்துக்கொண்டிருக்கிறது. 
பிஞ்சு விரலாய் வருடும் போதே 
பிரளயமாய் வருகிறது. 
முயல் கண்ணில் 
சிறு முறுவல் காட்டும்போதே 
கோரம் காட்டும் 
ஒரு "ஏலியனையும்" 
அடைகாத்து 
முதுகில் கட்டிக்கொண்டிருக்கிறது. 
அன்பு என்று 
ஒலிக்கத் துவங்குவதற்குள் 
அம்புப்படுக்கையை 
வயதுகள் அரித்த 
இந்த பீஷ்மர்களுக்கு 
விரிக்கத்துவங்கி விட்டது. 
ஐன்ஸ்ட்டீனும் 
எட்வர்டு விட்டனும் தந்த 
அழகிய கணிதத்தைக்கூட 
பங்கு மூலதன பகடைக்காய்களாக 
பரிணாமப்படுத்த முடியுமா 
என்று கூர் வேகம் காட்டும் 
ஒரு பாம்புச்சட்டையில் 
தோலுரித்து 
உயிர் விழுங்கிக்கொண்டிருக்கிறது. 
வாழ்ந்து காட்டுவதை விட 
வாழ்ந்து குவிப்பதே 
நமக்கு வேண்டிய "அல்காரிதம்" 
என்று வேட்டையாடுவதற்கு மட்டுமே 
இங்கு 
விசைப்பலகையும் 
விரல்களும். 
ஆழ்ந்த கல்வியின் 
அழகிய வீணை 
அதோ 
அந்த சரஸ்வதி காலண்டரில் 
அழகாய் தொங்கிக்கொண்டிருக்கிறது.

====================================

ஞாயிறு, 20 நவம்பர், 2016

தருணங்கள்



தருணங்கள்




ருத்ரா இ.பரமசிவன்
___________________________________________________

உன்னை
எப்போது பார்த்தேன்?
என்றைக்கு பார்த்தேன்?
அந்த அந்தி வானச்சிவப்பு
அடையாளம்
கடலில்
அன்றொரு நாள்
தூரல் விழுந்தது.
அதன் மெல்லிய துளி
துல்லியமாய் ஹலோ என்று
சொல்லிவிட்டுத்தான்
கடலில் விழுந்தது.
அந்த சுவடும்
நினைத்தால் வந்து சொல்லும்.
ஒரு மின்னல் எழுத்து
வானத்தில் வரியாய் ஒரு
சாட்சிக்கையெழுத்து
போட்டுவிட்டுத்தான் போனது.
உன்னால்
மறுக்கவும் முடியாது.
மறக்கவும் முடியாது.
=============================================================

2.0 = நூறு ரஜனி


2.0 = நூறு ரஜனி
==========================================ருத்ரா

மும்பையில்
2.0 அறிமுகக்காட்சியே
ஆயிரம் வியப்புகளை
அலை விரிக்க வைத்துள்ளது.
தேவர் மகனில்
கமலும் நாசரும்
கர் புர் என்று
முகத்தோடு முகம்
சீறிக்கொள்வது போல்
புகைப்பட ஸ்டில்கள்.
ஹாலிவுட்டில்
வரும் படங்கள் எல்லாம்
நண்டுவாய்க்கிளிகள்
பூரான்கள்
முதலை சிங்கம் பன்றி
ட்ரேகான் என்று
எல்லாமிருகங்களையும்
ரப்பர் வார்ப்பில்
ஒரே கோரைப்பல் வரிசையில்
பயங்கர திகில் மூட்டி
க்ராஃபிக்ஸில்
வயிற்றையே கலக்கும் இடிச்சத்த‌
இசைகளுடன்
படங்களை எடுத்துத்தள்ளுவார்கள்.
ஆயினும்
படத்துக்கு படம்
தரமும்
உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.
சங்கர்.. ரஜனி..அக்ஷய்குமார்
கூட்டணியும் அப்படியொரு
"புயல் வசூலை" கிளப்பப்போகிறது
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"நான் ஒரு தடவை சொன்னால்
நூறு தடவை சொன்ன மாதிரி"
என்ற புகழ்பெற்ற‌
வாக்கியங்களின் சொந்தக்காரர் ரஜனி!
அவர் சொல்கிறார்
"அக்ஷய் குமார் தான் இப்படத்தின்
நாயகன் என்று"
பெருந்தன்மையின் உச்சி மேல் பல உச்சிகளை
அடுக்கிய இமயமாய்
தோன்றுகிறார் ரஜனி!
அதனால் தான்
மேலே அந்த தலைப்பு.
===============================================================


அந்த‌ வ‌லி


அந்த‌ வ‌லி
===========================================ருத்ரா

"அம்மா!"
வீறிட்ட‌
அந்த வலி
கசக்கிப் போட்ட காகிதத்தில்
வந்த கவிதை நான்.
அந்த துடிப்பில்
ஒரு துண்டாய்
துள்ளி விழுந்தவன் நான்.

அறுபடாத நூல்
எனும்
வம்சத்தை
நூற்றுக்கொள்ள
உன் ரத்த நாளங்களை
அல்லவா
நூற்றுக்கொடுத்தாய்.
இந்த
நூல்க‌ண்டு சிக்க‌லுக்குள்ளும்
க‌ல்க‌ண்டு இனிப்பு.
நான்
உனக்கு.

அதோ பார்.
இந்த‌ இனிப்புக்கு
மொய்க்க‌வருபவற்றை
கோடி கோடியாய்
யுக‌ம் நீண்டு.
வரிசை வரிசையாய்
கர்ப்பப்பைகள் சுமந்து கொண்டு
அம்மாக்களாய்...

அவைக‌ளுக்கு
நாங்க‌ள் வைத்த பெய‌ர்
"கட‌வுள்க‌ள்"

=============================================

முதியோர் இல்லங்கள்

    அமெரிக்காவில் அரிஸோனாவில் உள்ள ஒரு மியூ சியத்தில் உள்ள சிற்பம்



முதியோர் இல்லங்கள்
==========================================ருத்ரா இ பரமசிவன்

முதியோர்  இல்லங்கள்
இல்லை அவை.
மகாபாரதத்தில்
குருஷேத்திர ஆறு
ஓடி முடிந்த தடம் அது.
கனவு முறிந்த மனங்கள்.
ஆசையின் "சரங்கள்"
துளைத்த ஆன்மாக்கள்.
வாழ்க்கையின் கனமான‌
கதாயுதங்களால்
எலும்பு முறிக்கப்பட்ட குவியல்கள்.
அந்த எலும்புக்கூடுகளிடையேயும்
பசுமை நினைவுளின் ஃபாசில்களில்
உறைந்து கிடக்கும்
காலத்தின் ஈரமற்ற சுவடுகள்.
"பாஸ்ட் டென்ஸ்" மட்டுமே
பதிப்பிக்கப்பட்ட‌
வாழ்க்கை அகராதிகள்.
முதுமை பருவம் எனும்
"முற்றும்" போடப்பட்ட
வாழ்க்கைநாவல்களின்
தோள்களிலும்
அகலாத அரூபமான
சிந்துபாத் கிழவர்கள்.

என்றெல்லாம்
சிதறிக்கிடக்கும் ஓர்
அபூர்வத்தீவு இது.
மனித ஆத்மாவின் "3டி" படம்
இங்கு மட்டுமே ஓடுகிறது.

=======================================

ஒரு சொட்டு கண்ணீர்




ஒரு சொட்டு கண்ணீர்






===================நசுங்கியகோடுகள்..====================ருத்ரா

தூரிகையும் வர்ணமும் பொருட்டல்ல‌
பிக்காஸோவுக்கு.
ஒற்றை மயிரிழைக்கோட்டின்
சிலிர்ப்புகள் போதும்.
நான் 
அந்த நசுங்கிய கோடுகளின் வழியே
என் கவிதைக்காடுகளுக்கு
பயணிப்பதே இது.
என் கோட்டொவியங்களில்
சுருள் வரிகளாய் இங்கே
என் கவிதை.





ஒரு சொட்டு கண்ணீர்
===============================================ருத்ரா இ.பரமசிவன்


அந்த ஆயிரம் ஆயிரம் பிணங்களுக்காக
என்னால் முடிந்தது.......


தென்னை மரங்கள் தலை சிலுப்பும்
அந்த சின்னத்தீவில்
எறும்புகளுக்கு கூட நோவும் என்று
மயில் பீலிகள் கொண்டு செய்யப்பட
துடைப்பம் கொண்டு கூட்டப்படும்
புத்த விகாரைகள் அன்பை ஒலிக்கும்
அந்த பூமியில்
தமிழ் மொழி
எலும்புக்குப்பைகளாய்
எருவாகிப்போனதற்கு
என்னால் முடிந்தது .....

இங்கே காலி டப்பாக்கள்
தட்டி கொட்டி
விடுதலை கீதம் என்று
வீண் ஒலிகளை
கிளப்பிக்கொண்டு கிடக்கையில்
என்னால் முடிந்தது .....

தேர்தல் கால
பணங்காய்ச்சி மரக்காட்டுக்குள்
வாக்குறுதிகளின் மராமரங்களில்
அம்பு பட்டு அமுங்கிப்போன
குரல்வளைகளில் நெறிக்கப்பட்ட நிலையில்
என்னால் முடிந்தது .....

தமிழ்
இங்கே மரத்துப்போனது.
தமிழ்
இங்கே மரித்துப்போனது .
தமிழ்
இங்கே மக்கிப்போனது
என்ற அவலங்களினூடே
என்னால் முடிந்தது...
அந்த
ஒரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே.