http://www.msn.com/en-us/video/animals/5-surprising-facts-about-butterflies/vi-BBy7D8G?ocid=spartanntp
பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
என்று
உருகி உருகி கவிதை
எழுதுபவர்களே
இதன் இயல்புகள்
ஆச்சரியமானவை.
கம்பளிப்பூச்சி பருவத்தில்
தன் உடலையே அவை
தின்று விடும்.
தன் அழகிய வால்பகுதியைக்கூட
சாப்பிட்டு விடும்.
அதன் கால்கள் சுவையானவை.
பூவின் தேனில் போய் நிற்பதால்
அவை இனிக்குமோ?
திடீர் ஆபத்தில்
தன் இறைக்கைகளை கூட
உதிர்த்து பறக்கசெய்து விட்டு
தப்பித்து ஒளிந்து கொள்ளும்.
அவற்றின் உடம்பே
திசைகள் திரும்பி
வேகத்தை கட்டுப்படுத்தும்.
வண்ண வண்ண சிறகுகளில் இதன அசைவுகள் பதினாறு வயது களின்
தேசத்தில் எழுதப்படாத சட்டங்களை கொண்டு ஆளுகிறது,காதல் எனும்
மின்னல் சுவையை ஊட்டி கனவுகளின் நுரைக்கடலில் அவற்றின் சிறகுகளே
பாய் மரம் விரித்து இழுத்துசெல்கிறது.அவற்றின் சுய ரூபங்களை தெரிந்து கொள்ள மேலே உள்ள சுட்டியை சொடுக்குங்கள்
============================================ருத்ரா இ பரமசிவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக