சனி, 7 ஜனவரி, 2017

மீண்டும்.....


மீண்டும்.....
===============================ருத்ரா இ பரமசிவன்.
சம்பவங்கள்
சல்லாத்துணியாய்
நம் முகம் மூடுவது போல்
மனம் மூடுகிறது.
நிகழ்ந்தவையில் வடிந்த ரத்தம்
எழுதப்படும் மை ஆகிறது
வரலாற்றுப் பேனாக்களுக்கு.
ஏதோ ஒரு பூங்காட்டில்
செர்ரிப்பூக்கள்
அல்லது அந்த‌
மயானக்காட்டு மாம்பூக்கள்
படிக்கப்படாத கவிதைகளாய் கிடந்தவை
அந்த பிணங்களால்
வாசிக்கப்படும்போது
அப்போது தான்
வாழ்க்கை அங்கே
ஒரு மாயப்பயிரின்
நாற்றுகளாய்
பாவிப் படர்கின்றன.
இருக்கட்டும்.
மீண்டும் ஒரு மணிவயிறு
திறக்கும்போது
அந்த சப்தங்களின் மிச்சத்தை
புசிக்க முயல்வோம்.
===================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக