வியாழன், 19 ஜனவரி, 2017

ராட்சச கருந்துளை

ராட்சச கருந்துளை
====================================ருத்ரா இ பரமசிவன்.

http://www.ndtv.com/world-news/giant-black-hole-660-million-times-bigger-than-sun-1403523?utm_source=taboola&utm_medium=msn-edgedefaulthomepage-india

=============================================================================

660 மில்லியன் அளவு பெரிதான சூரியன்களையே  விழுங்கும் "கருந்துளை "
======================================================================


பிரபஞ்சத்தில் சூரியனைப்போல் கிட்டத்தட்ட 3.5 மடங்கு பெரிதான விண்மீன்கள் எல்லாம் பிரபஞ்சப்படுதாவில் "கருப்பு ஓட்டைகள்" போட்டு
அவை காணாமல்போய்விடும்.இறந்து போய் விடும்.அவை கருந்துளையாக
நம் தொலை நோக்கியில் காட்சி அளிக்கும்.ஒரு சூரியன் கருந்துளையாக மாறும் ஆனால் அதன் ஆரம் 2 அல்லது 3 கிலோ மீட்டராய் நசுக்கப்படும் அளவுக்கு அதன் ஈர்ப்பு விசை பல பில்லியன் மடங்கு பெருகிவிடும். சூரியன் சுற்றளவே கிட்டத்தட்ட 13.5 லட்சம் மைல்கள்.அப்படியென்றால் நீங்கள் மேலே காணும் கருந்துளை விண்மீனாய் இருக்கும் போது அதன் சுற்றளவை உங்களால் கற்பனையே பண்ண முடியாது! நட்சத்திரங்களின் நிலை இப்படி இருக்கும் போது நமது "அஸ்வினி..பரணி .....ரேவதி"நட்சத்திரங்களும் அதன் மீது நாம் நடத்தும் (பிறந்த நாள்) அரச்சனை சீட்டுளின் சம்ஸ்கிருத ஓசை ஓங்கரிப்புகளும் என்னத்தை நமக்கு புரிய வைக்கும்?

இத்தகைய கருந்துளைகள் ஒளியையே உறிஞ்சிக்கொண்டு விடும்.இதனுள் நுழைந்து ஊடுருவும் ஆற்றலின் வேகம் ஒளியை மிஞ்சும் விதமாய் (சூப்பர் லுமினஸ் வெலாசிட்டி) வேகம் கொள்ளும்.அந்த ஆற்றல் துகள்கள் "டெக்யான்" எனப்படும்.எனவே இப்படி ஒரு வேகத்தில் ஒரு சுரங்கத்தை குடைந்து கொண்டு அந்த கருந்துளையில் விஞ்ஞானிகள் பயணம் செய்ய கற்பனை செய்கிறார்கள்.அந்த புழுத்துளை (வோர்ம் ஹோல் )வழியாய்  சென்று அடுத்த அண்டைய பிரபஞ்சத்துக்கு போய்விடுவாதாக விஅதன் ஈர்ப்பால் ஞ்ஞான நாவல்கள் எழுதவும் செய்கிறார்கள்.

அந்த ராட்சச கருந்துளை ஒரு பிரம்மாண்ட குகைவாய் ஆக தெரிகிறது.. பக்கத்து நட்சத்திரங்கள் கூட அதன் பிரம்மாண்ட  ஈர்ப்பால் விழுங்கப்படும்
அபாயத்தில் இருக்கிறது.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக