சனி, 14 ஜனவரி, 2017

அறிவை மழுங்கடிக்கும் சனிப் பெயர்ச்சி

அறிவை மழுங்கடிக்கும் சனிப் பெயர்ச்சி
=================================================


http://www.msn.com/en-us/video/wonder/heres-what-surface-of-titan-looks-like/vi-AAlRcxo?ocid=spartanntp


ஏழரை நாட்டு சனி எட்டரை நாட்டு சனி என்றெல்லாம் ஜோஸ்யம் கூறி வருபவர்கள் சோழி உருட்டல்களில் எளிய பாமரர்களிலிருந்து பெரிய ஆட் சி யாளர்கள் வரை "அல்வா"கொடுத்துவரும் செய்திகள் அன்றாடம் படிக்கிறோம்.சனீஸ்வர பகவானுக்கு எள்ளு ப்பொட்டலம் போட்டு தீபம் காட்ட விமானம் ஏறி வருகிற மேதாவிகள் நிறைந்த தேசம் நம் இந்திய தேசம்.
இன்னும் சொல்லப்போனால் "செவ்வாய்"கிரகத்திற்கு விண்கோள் அனுப்புவதிலும் நாம் போட்டி போடத்தான் செய்கிறோம்.அதற்கு "மங்கள்யான்" என்று சமஸ்கிருதப்பெயர் சூட்டி விண்வெளியில் அந்த "பாஷையை"தூவி விடுவதற்காக மட்டுமே நாம்  அண்டவெளி "சாஸ்திரங்கள்" வைத்திருக்கிறோம் போலும்.

அமெரிக்காவிலிருந்து விடப்பட்ட காசினி எனும் விண்கோள் அந்த "சனி பகவானை "நமக்கு படமாக அனுப்பியிருக்கிறது.சோழியுருட்டும் ஜோஸ்யங்கள் அமெரிக்க விஞ்ஞஆணிகளிடம் பலிக்கவில்லை.மேலும் அமேரிக்கா  பலப்பல கோடி மைல்கள் இருக்கும் சனிக்கோளை சுற்றும் "டைட்டன்"எனும் நிலவின் தரையில் கூட ஒரு ஒரு சிறு விண்கலத்தை அனுப்பியிருக்கிறது.

அங்கே "மீத்தேன் "மற்றும் ஹைட்ரோகார்பன்கள் நிறைந்த பெரிய நதி ஒன்று ஒடி இப்போது வற்றிக்கிடக்கும் பூமியாக அது இருக்க்கிறது.அங்கேயே தான் இந்த விண்கலம் இறங்கி யுள்ளது.படிப்படியாக அது இறங்கும்
அழகை ப்பார்த்தால் மனிதனின் விஞ்ஞானம் கண்டு வியப்பும் பெருமிதமும் அடைக்கிறோம்.அது இறங்கும்போது அதன் "பாராசூட்"நிழல் கூட துல்லியமாய் அத்தரையில் தெரியும்படி படம் பிடித்து அனுப்பி யிருக்கிறார்கள்.

அழகர் சப்பரம் வறண்ட வைகையாற்றில் இறங்குவதை  பார்ப்பதே போதும் நமக்கு.
21 ஆம் நூற்றாண்டு  மனிதன் விஞ்ஞானியாகவும் மலர வேண்டும்.அதுவே "பரிணாமத்தின்" உள் நோக்கம்.

இதோ அக்காட்சியை கண்டு களியுங்கள்.

===========================================ருத்ரா இ பரமசிவன்.

மேலே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக