ஞாயிறு, 22 ஜனவரி, 2017

இன்று போய் நாளை வா




இன்று போய் நாளை வா
============================================ருத்ரா

உன் வில்லை வளைப்பது இருக்கட்டும்.
கேள்விகளின் கூர் முனை
உன்னைக் குறி பார்ப்பதை கவனித்தாயா?
ஏன் பிறந்தேன்?
எதற்கு பிறந்தேன்?
யாருக்கு பிறந்தேன்?
யாரை பிறப்பித்தேன்?
எனக்கு முன்
அதற்கும் முன்
அதற்கும் முன்..
............
அதற்கும் முன்
கபாலங்கள் குவிந்து கிடக்கின்றன‌
தலைச்சோறு (மூளை) தீர்ந்து போனபின்.
வேதங்கள் வசனங்கள்..
பாஷ்யங்கள் சூத்திரங்கள்
மந்திரங்கள் கூப்பாடுகள்..
கம்பியூட்டர்களிலும்
க்ளவ்டிங்க் அப்ளிகேஷன்களிலும்
விலா எலும்பு தெறிக்க‌
நாய் குரைப்புகள்...
அறிவின் "ரேபிஸ்" சிந்தனை தடத்தை
நுரை தள்ளி ஊளையிரைச்சல்களாக்கி.....
விறைத்த  துடிப்புகளாக்கி.....
எல்லாவற்றிலும்
வேட்டையின் நீள நாக்குகள்
மரணச்சுவை ஒழுகும் அருவிகளாய்...
வாழ்க்கை என்ன?
என்ன வாழ்க்கை?
பங்கு மூலதன இண்டெக்ஸ்கள் காட்டுகின்றன‌
பச்சை ரத்தத்தின் ருசியை.
பகவானின் கீதைகள்
பலப்பலவாய் உபதேசப்போதைகள்
மற்றும்
தர்ம அதர்ம‌
மாமிச நாற்றங்கள்
எல்லாமே
ஒரு ருசிக்கு
வெறி பிடித்து ஓடுகிறது.
முத்தங்கள் பிதுக்கித்தர‌
உதடுகள் தெருக்களில்
தீப்பிடித்து ஓடுகிறது.
வட துருவம் தென் துருவம் என்று
ஏதோ
ஒரு அச்சுக்கோட்டில்
இந்த பூமியை
கோடி கோடி தடவைகள்
சுழற்றிக்கொண்டிருக்கிறதே!
அந்த காலம் கூட‌
இந்த‌ பேராசையின்
பேய் நகங்களால் பிறாண்டப்பட்டு
பொறி கலங்கி தடுமாறி விடும்
பிரளயம் ஒன்று
பின்னே நிற்கிறது.
கண்ணுக்குத்தெரியாத‌
ஊழித்தீயாய்
அது எங்கும் பிரகாசம் காட்டுகிறது.
கண்கள் கூச‌
கருத்து குருடு ஆகி
வருங்காலத்தின்
சன்னல் அங்கே
தூள் தூள் தூள்.
இருட்டின்
கண்ணாடி நொறுங்கல்களாய்
மை இருளின் மக்கிய‌
தூள் தூள் தூள் அங்கே!
நட்சத்திரங்கள் கூட‌
வெறிச்சுவையின்
இறைச்சித்துண்டுகளாய்...
அங்கே!அங்கே!
==============================================
டிசம்பர் 7 2014 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக