சனி, 7 ஜனவரி, 2017

நான் சிலிர்த்தால் "தீபா"வளி!

http://tamil.oneindia.com/videos/support-for-j-deepa-is-increasing-31592.html

நான் சிலிர்த்தால் "தீபா"வளி!
=========================================ருத்ரா

இந்திய அரசியல்
இன்று வரை
"வாரிசு" அரசியலை
"வேணும்" ஆனால் "வேண்டாம்"
என்று
வடிவேலு  "என்னத்த" கன்னையா பாணியில்
காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறது.
வாரிசு அரசியலுக்கு
முகம் சுளிப்பவர்கள் கூட‌
முகம் மலர்ச்சி காட்டும்
ஒரே வாரிசு
ஜெயலலிதாவின் அண்ணன் மகள்
ஜெயதீபா தான்.
தி.நகரில் அவர் வீட்டு வாசலில்
தினம் தினம் தீபாவளி தான்.
அ.அ.தி.மு.க காரர்கள்
(அதாவது அதிருப்தி அதிமுக காரர்கள்)
இந்த "தீபா அம்மா"வுக்கு
தங்கள் ஆதரவு "ஆயிரம் வாலாக்களை"
உற்சாக வெடியாய்
கொளுத்திப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
அம்மாக்களின்
சொத்துப்பட்டியல் என்று
தினமலர்
மூணு முழுப்பக்கங்கள் போட்டுவிட்டது.
சொத்துக்கள்
யார் குவித்தால் என்ன?
யார் ஆண்டால் என்ன?
வாக்காளர்களுக்கு
அம்மாக்கள் மட்டுமே போதும்.
அலிபாபா கதை போல்
மர்மமான‌
குகையிலிருந்து
ஒரு சிந்தெடிக் அம்மா
வெளியே வந்தாச்ச்சு.
பணத்தோட்டம்  எனும்
அண்ணா அவர்களின் திரைக்கதையே
இந்த அரசியலுக்கு தரைக்கதை.
ஆனால்
இரு விரல் காட்டி
கொரியோகிராஃபி செய்ய
இதோ ஒரு புதிய முகம்.
இந்த "பளிச்" மத்தாப்பு
மருமகள் அம்மா தான்.
ரத்த சம்பந்த வாரிசு.தான்
தமிழ் நாட்டு அரசியலில்
இனி கலக்கல் தீபாவளி தான்.
அந்த அம்மா குழுமம்
ராணுவக்கட்டுக்கோப்பு
ராணுவக்கட்டுக்கோப்பு  என்று
மூச்சுக்கு மூச்சுக்கு
நடுங்கி நடுங்கி முழங்குவதைப்
பார்த்தால்
உள்ளே
ஒரு முசோலினியிசம்
ஒளிந்து கிடப்பது தெரிகிறது.
ஜனநாயகம்
செல்லப்பிள்ளை தான்
மக்களுக்கு அல்ல!
இட்லர்களுக்கும் முசோலினிகளுக்கும்
மட்டுமே.
இப்போது குங்குமக்கலரில்
"காந்தி புன்னகை"
அது தான் மாற்றம்.
"மாற்றம் மட்டும் மாறாதது !"
தீபாம்மா
"என்னம்மா இப்படி பண்றிய்ங்களேம்மா "
என்றெல்லாம்
திசை திருப்பிப்பயனில்லை!
இவர்கள் திசைகளையெல்லாம்
தொலைத்து
வெகு காலம் ஆயிற்று.

===============================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக