திங்கள், 16 ஜனவரி, 2017

பைரவா

பைரவா
====================================ருத்ரா இ பரமசிவன்.
"அடங்கப்பா பைரவா...
நீ யார் பெத்த பிள்ளையோ.."
இது கல்யாண பரிசு தங்கவேலு காமெடி.
இயக்குனர் பரதன் பெத்த பிள்ளை இது.
கலக்கு கலக்கென்று கலக்குகிறார்.
கதை பாட்டு இத்யாதி இத்யாதிக்குள்ளெல்லாம்
போகவேண்டாம்.
விஜய் வந்தால் போதும்
விஜய் சிரித்தால் போதும்,
விஜய் பேசினால் போதும்
அந்த காதல் வசனத்தில்
நன்றாக வழிகிறார்.
ஆனால் பிழிகிறார்
இளசுகளின் உள்ளங்களை.
சண்டையெல்லாம்
தூள் பறக்கிறது.
ஒவ்வோரு தூசியிலும் துரும்பிலும்
தெறிக்கிறது
ஒன்றல்ல‌
நூறு வேதாளம்!
கபாலியில் ரஜனி நடிக்கவில்லை.
அந்த சூட்டும் கோட்டும் தான்
நடிப்பின் விருது சூட்டிக்கொள்கிறது.
பைரவாவில்
அவர் "விக்"
ஒரு கால பைரவத்தின் சீற்றத்தை
அலைகளாய் சிலுப்புகிறது.
அந்த விக்கே போதும்
அதர்மங்களையெல்லாம்
அடித்துப் பொடி பொடியாக்க!
வழக்கம்போல்
அவர் மகுடத்தில்
இதோ மற்றொரு  ரத்தினக்கல் என்று
பதிக்கலாம் என்று பார்த்தால்
அந்த மகுடத்தில் இடம் இல்லை பதிக்க.
மகுடம் பூராவும்  ரத்தினங்கள்.
ஆம் விஜய் படங்கள் எனும்
ரத்னக்குவியலுக்கு முன்
மற்ற அவியல்களைப்பற்றி
இங்கு என்ன பேச ?

=============================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக