புதன், 18 ஜனவரி, 2017

நெற்றியில் உதயம் ஒரு இதயம்!

http://www.msn.com/en-us/lifestyle/the-bright-side/babys-rare-heart-shaped-birthmark-has-everyone-falling-in-love-with-him/ar-BBy7zLZ?ocid=spartanntp

==========================================================================
நெற்றியில் உதயம் ஒரு இதயம்!
=========================================================================

துருக்கியில் அங்காரா நகரில் முரத் எங்கின்  செய்டா தம்பதியினருக்கு
"சினார் எங்கின்" என்று ஒரு "காதல் தேவன்" அவதரித்து இருக்கிறான்.
பெற்றோர்களின்  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
வாலென்டைன் டே எனும் காதல் தினத்தின் பொன்னான இதயச்சின்னத்தை
நெற்றியில் பதித்து பிறந்த அந்த திருச்செல்வனை  உலகமே வாழ்த்திக்களிக்கிறது.லவ் என்றால் முதலில் மனித இனத்துக்குள் ஈரம் கசியும் அன்பு தானே.வயதுகளும் அழகின் மின்னல் கோலமும் தான்  ஒரு மனிதன் மனதில் காதல் ரங்கோலியை வரையும்!அந்த பொன்னான‌ தருணங்கள் காலம் ஒலிக்கும் அந்த கடிகார முள் ஒலிகளில் காத்துக் கொண்டிருக்கிறன.

14 மாதங்கள் ஆன அவன் உலக இளைஞர்களை கவர்ந்த கதாநாயகன் ஆகி விட்டான்."லவ் பேபி" என்று கொண்டாடப்படும் அவனுக்கு நெற்றியில் இருக்கும் அன்பு மச்சம் பிப்ரவரி மாதம் வரும் காதலர்கள் தினத்தை ஒரு முகப்புன்னகையின் இதய மச்சமாய் காட்டி வரவேற்கிறது.அந்த மச்சம் ஒரு காதல் மச்சமாய் தோன்றி இவ்வுலகை மகிழ்ச்சிக்கடலில் குளிக்கச் செய்திருக்கிறது.

அந்த "இதய"த்திருச்செல்வன் நீடூழி நீடூழி வாழ்க.
=================================================ருத்ரா இ பரமசிவன்
மேலே உள்ள சுட்டியை சொடுக்கிப்பார்க்கவும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக