செவ்வாய், 3 ஜனவரி, 2017

"நீயும் பொம்மை நானும் பொம்மை..."

"நீயும் பொம்மை நானும் பொம்மை..."
==============================================ருத்ரா

..நெனச்சுப்பாத்தா...எல்லாம் பொம்மை.."
இது வீணை பாலச்சந்தர் இயக்கிய‌
"பொம்மை"படத்தில்
ஜேசுதாஸ் அவர்கள் பாடிய‌
முதல் பாட்டு!
"நெனச்சுப்பாத்தா.."
இதுவே இப்போதைய‌
தமிழ் நாட்டு தேசியகீதம்.
நகர்வுகள் எல்லாம்
கீ கொடுத்தது போல் தான்.
நம் அரசு எந்திரம்..
அது நடத்தும் தேர்தல்...
கியூ வரிசையில்
அதில் ஓட்டுப்போடும்
பொம்மைகள்...
வங்கிகளுக்கும்
ஏடிஎம் எந்திரங்களுக்கும் சென்று
தவம் கிடக்கும் பொம்மைகள்...
இவையே
இப்போதைய அவலங்கள்.

கருப்புப்பண மலையை  கெல்லி
எலி கூட கிடைக்கவில்லை.
கிடைத்த கரப்பான்பூச்சியின்
மீசையில்
கருப்புப்பணத்தின்
"படம் வரைந்து பாகங்களை
குறித்துக்"கொண்டிருக்கிறார்கள்.
வங்கி களில் குவிந்த பணம் தான்
அந்த கருப்பு பணம் என்று
கணக்கு போடுகிறார்கள்.
வருமான வரி
கூட்டல் கழித்தல்  சதவீதங்களில்
மற்றும்
சட்டத்தின் சந்து பொந்துகள் தாண்டி
வரும்போது
அவர்களின் தேனாறு பாலாறுகள் எல்லாம்
கானல் நீர்க் கரையோரங்களில்
பட்ஜெட்டின் வெறும்
காகித பாய்மரங்களையே
விரித்து நிற்கும்!

செந்தமிழ் நாடெனும் போதினிலே...
அந்த முண்டாசுக்காரன்
எரிமலை வரிகள் கூட
எங்கோ அவிந்து போனது!
பொங்கி சாப்பிட உலை மூட்டுவதும்
இங்கே சினிமாக்கள் தான்!
எம் ஜி ஆர்  சுழற்றிய
சாட்டைககளுக்கே
மஞ்சள் குங்குமம் வைத்து
சூடம் கொளுத்துபவர்கள் இவர்கள்.
அந்த "சுளீர்"சத்தங்களோடு
டி.எம்.எஸ்ஸின் பாடலையும் குழைத்து
இன்று வரை இங்கே
ஆட்சி செய்து கொண்டிருப்பது
அந்த சினிமா நிழல் தான்.
இந்த பொம்மைகளுக்கு
முகமும் உதட்டசைவும்
கொஞ்சம் வாலியும் போதும்.


எம் ஜி ஆர் வெறும் நிழலைத்தான்
விதைத்தார்.
அரசியல் வெளிச்சமே இல்லாமல்
தமிழ் நாடு இருட்டிக்கிடக்கிறது.

==========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக