சனி, 7 ஜனவரி, 2017

அக(ழ் )நானூறு.
சன்னல்
======================================ருத்ரா இ பரமசிவன்

சன்னல்
எத்தனை தடவை பார்த்தாலும்
அதே நீள் சதுரம்..
குறுக்கும் நெடுக்குமாய்
கம்பிகள்.
அதன் வழியே
ஒரு கடல் இரைச்சல்.
அது கண்கள் கொப்புளிக்கும்
வெள்ளி நுரைப்பார்வைகள்.
அவள் பார்த்து விட்டுபோனபின்
துருப்பிடித்த கம்பிகள் எல்லாம்
வெள்ளி முலாம்.
அவள் மென் சிரிப்பு
ஒலிச்சிதறல்கள்
அங்கே தேன் சிட்டுகளாய்
சிறகு துடிக்கும்.
"அங்கே என்ன பார்வை?
சாப்பிட வாடா"
என் பசி தீர்ந்தது
அம்மாவுக்குத்தெரியாது.
ஏதோ பாறாங்கற்பிஞ்சுகளை
தட்டில் இடுகிறாள்.
பசியோடு
நேற்று நான் சொன்ன‌
"மல்லிகைப்பூ இட்லிகளை"

==================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக